பாரதி தோன்றிய காலம் - பாரதி குறித்து க.நா.சு - க.நா.சுப்ரமண்யம், துரை.லட்சுமிபதி - எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing | panuval.com‘பாரதி பற்றி அவரிடம் ஒரு மௌனம் இருந்தது. பாரதியைக் குறை சொல்லி எதுவும் எழுதினதும் இல்லை. சொன்னதும் இல்லை .அதுபோல பாரதியைப் பாராட்டி எதுவும் சொன்னதும் இல்லை .எழுதியதும் இல்லை.’ என்று சுந்தர ராமசாமி அவர்கள் எழுதியிருக்கிறார்.
இது இலக்கிய உலகில் ஒரு ஆதாரமாக மேற்கோள் காட்டப்பட்டு சில கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.
அதன் விளைவாக கா.நா. சு மீது மிகுந்த ஈர்ப்பும், மதிப்பும் கொண்ட எழுத்தாளர் துரை .லட்சுமிபதிக்கு கா.நா. சு பாரதியைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை தேடும் ஆர்வம் ஏற்பட்டதன் விளைவே இந்த நூல்.
பாரதியைப் பற்றி கா.நா. சு எழுதிய ஆகச் சிறப்பான 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து எழுதப்பட்டதுதான் இந்த நூல் .இது ஒரு ஆவணமாகும் .நேற்று நடந்த மிகச் சிறப்பான நூல் அறிமுக விழாவிற்கு விருட்சம் இலக்கிய இதழின் ஆசிரியர் அழகிய சிங்கர் அவர்கள் தலைமை தாங்கினார் .நேர்த்தியான தலைமை உரையையும் வழங்கினார். அதன் பிறகு சிறப்புரையாக முனைவர் .திரு பாரதி கிருஷ்ணகுமார் நூலை அறிமுகம் செய்து, மிகச் சிறப்பாக உரையாற்றி நேற்றைய மாலை பொழுதை ஒரு பயனுள்ள மகிழ்ச்சியான மாலைப் பொழுதாக்கினார்.
எழுத்துப் பதிப்பகத்தின் வெளியிடாக வந்திருக்கும் இந்த நூலின் விலை ரூபாய் 250.
கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டிய ,வீட்டில் வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான நூல்.