ஸ்ரீ பகவத் கீதை: Sri Bhagavad Gita - Explanatory Speech (Tamil) | Exotic India Artபகவத் கீதையில் அத்தியாயங்கள்  இரண்டும் பதினெட்டும்  ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் கூற வரும் பாடத்தின் சாராம்சத்தைக் கொடுக்கின்றன. மூன்றாம் அத்தியாயத்திலிருந்து பதினேழாம் அத்தியாயம் வரை சாராம்சத்தில் கூறப்பட்ட விஷயங்கள் விவரிக்கப்படுகின்றன.

மூன்றாம் அத்தியாயம் கர்ம யோகத்தை மிக விரிவாக விளக்கியது. நான்காம் அத்தியாயமும் ஐந்தாம் அத்தியாயமும்  ஞான யோகத்தைப் பற்றிக் கூறுகின்றன. ஞான யோகத்தின் சூட்சுமம் காரணமாக இரண்டு அத்தியாயங்களில் இதனை ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.

செயல் புரிவதிலிருந்து எந்த மனிதனும் தப்பிக்க முடியாது. அர்ஜுனன் தப்பிக்க நினைத்தாலும் ஸ்ரீகிருஷ்ணர் விடுவதாக இல்லை. செய்யும் செயலை எப்படி சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதையும், அந்தச் செயலோடு உள்ளத்தளவில் எப்படி தற்சார்பற்ற நிலையில் செயல்பட வேண்டும் என்பதையும் நான்காம் அத்தியாயத்தில் விளக்குகிறார். நாம்  செய்யும் எந்தச் செயலுடனும் மனம் பற்றுக் கொள்ளாமல் செய்ய வரும் ஞானமே ஞான மார்க்கத்தில் பேசப்படுகிறது. இந்த ஞானம் என்ற வலி நிவாரணியின் மூலம் நம் மனதைப் பாதுகாத்து நாம் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்வதே ஸ்ரீ கிருஷ்ணர் கூறும் ஞான யோகத்தின் அடித்தளம்.

கீதையின் மூன்றாம் அத்தியாயத்தில் கர்ம யோகம் தற்காலிகமாக பந்தங்களிலிருந்து நிவாரணம் அளிக்கும் என்பதை ஸ்ரீகிருஷ்ணர் சூசகமாகக் கூறுகிறார். ஞானம் மட்டுமே நிரந்தரத் தீர்வைத் தரும். விருப்பு வெறுப்புகளையும் ஆசாபாசங்களையும் முழுமையாக ஞான கர்ம சன்யாச யோகம் என்று போற்றப்பட்ட ஞான யோகம் அழித்து விடும்.

ஸ்ரீகிருஷ்ணர் தன்னலமற்ற செயல்கள்மூலம் மனத்தூய்மை பெறுவதற்காக கர்ம யோகத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறோம் என்கிறார். ஞானத்தைப் பற்றி அறிய, ஒரு குருவிடம் சீடனாகப் பணிவுடன் அமர்ந்து மறை நூல்களைக் கேட்பதன் மூலமும் அதை மறுபடியும் நினைவு படுத்தி அசைபோடுவதாலும்  ஞான யோகத்தைப் பின்பற்றுவதற்கான தகுதி ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் என்றும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

இந்த ஞானத்தைப் பற்றி பேச வந்த கிருஷ்ணர், இதன் மகிமையை எல்லாரும் உணர வேண்டும் என்ற நோக்கில், இந்தப் புனித பாடத்தை, தான் சூரிய பகவானுக்கு அருளியதாகவும் சூரிய பகவான்  தன் மகனான வைவஸ்வத மனுவிற்கும் பின்னர் இதனையே மனு இஷ்வாகுவிற்கும் அருளியதாகவும் ஸ்ரீகிருஷ்ணர் முதல் சுலோகத்தில் கூறுகிறார்.

முதல் எட்டு சுலோகங்களில் கீதா ஸ்துதி என்ற கீதையின் மகிமையைப் போற்றியும், இறைவனின் அவதார ரகசியத்தைப் பற்றியும் கூறுகிறார். பகவத் கீதை உபநிடதங்களின் சாராமசம்; வேதங்கள் இறைவன் நமக்கருளிய வரம் என்றால், இதை தங்கள் ஆழ் சிந்தனையின் மூலம் நமக்கு அளித்தவர்கள் முனிவர்களும் ரிஷிகளும். இந்த ரிஷிகளுக்கு ஞான சிந்தனையின் மூலம் வெளிப்பட்ட வேதங்களை இறைவன் நமக்கு அளித்த வரமாகவும் பரிசாகவும் கொள்ளலாம்.

பகவத் கீதையைத் தந்ததற்கு ஸ்ரீகிருஷ்ணர் எந்த மரியாதையையும் எதிர்பார்க்கவில்லை. வேதங்களை மறுபடியும் உயிர்ப்பித்து, பயன்பாட்டிற்குக் கொண்டு வர தான் அர்ஜுனனுக்கு கீதாசாரியனாக மாறினார். இந்த சந்தர்ப்பத்தில் தான் ஒரு அவதார புருஷன் என்பதை ஸ்ரீகிருஷ்ணர் உணர்த்துகிறார். முதல் மூன்று சுலோகங்களும் வேதங்களின் சாராம்சமாக எப்படி கீதை விளங்குகிறது என்பதை விளக்குகின்றன.

சூரியனைக் குறிக்கும்போது ஸ்ரீகிருஷ்ணர் ‘விவச்வதே ப்ரோக்தவான்’ என்கிறார். அதாவது, ‘விவஸ்வான்’ என்பது அன்னம் அல்லது உணவிற்கு உயிரூட்டுபவன் என்று பொருள். உயிரினங்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவை வழங்கும் சூரியனுக்கே முதலில் ஞான உபதேசம் கிடைத்தது. மகாவிஷ்ணுவாக சூரியனுக்கு உரைக்கப்பட்ட இந்த போதனையே சனாதன தர்மம் என்று பெயர் பெற்றது என்கிறார்.

ஆன்மீக போதனைகள் இரண்டு பரம்பரைகள் மூலம் இன்று நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஒன்று, குரு நிலையில் நின்ற பிராம்மண ஆசிரியர்கள் மூலம்; மற்றொன்று அரசர்களாகி நின்ற சத்திரிய பரம்பரை மூலம். வற்றாத ஜீவ நதியான கங்கையைப் போலவே குரு-சிஷ்ய பரம்பரை மூலம் இன்று வரை இந்தப் பாடம் தொடர்கிறது.

பண்டைக்காலத்தில் அனைத்து அரசர்களுக்கும் இந்த ஞானம் கிடைத்தது. இந்த ஞானத்தின் உதவியுடன் அவர்கள் ராஜ்ய பரிபாலனமும் செய்தார்கள். இப்படி ஞானத்துடன் செயல்பட்ட அரசர்களை ராஜரிஷி என்றே அழைத்தனர். கால மாற்றத்தில் மக்களது கவனச் சிதறலால் இந்த ஞானம் பலருக்கு மறந்து போனதாம். இதை மறுபடியும் உயிர்ப்பிக்க தாம் கீதையை உபதேசிப்பதாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

தன்னைப் பற்றிய உண்மையைத் தேடுவதே ஞான யோகமாகும். இந்த ஞானம் மிகப் பழமையானது. ஸ்ரீகிருஷ்ணர் இந்த ஞானத்தை சூரிய பகவானுக்கு உரைத்ததாகச் சொன்னதைக்கேட்ட அர்ஜுனுக்கு இது எப்படி சாத்தியம் என்று குழப்பம் ஏற்படுகிறது.

श्रीभगवानुवाच |
बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन |
तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप || 5||

பஹூனி மே வ்யதீதானி ஜன்மானி தவ சார்ஜுன.

தான்யஹம் வேத சர்வாணி ன தவம் வேத்த பரந்தப.

அர்ஜுனா, எனக்குப் பல பிறவிகள் கடந்துவிட்டன

 

அவை அனைத்தையும் நான் அறிவேன், ஆனால் உனக்கு அவை தெரியாது, ஓ எதிரிகளை எரிப்பவனே 5||

அர்ஜுனனின் குழப்பத்திற்கு விடையளிக்கும் வகையில் கிருஷ்ணர் பதிலளிக்கிறார். ஒரு சாதாரண மனிதனுக்கு தன முற்பிறவிகள் பற்றிய எந்த நினைவும் இருக்காது. ஆனால் இறைவனுக்கோ, எல்லாம் ஞாபகத்தில் இருக்கும். ஒரு மனிதன் மீண்டும் ஜென்மம் எடுத்துப் பிறக்கிறான்/ இறைவன் மீண்டும் பூவுலகிற்கு வருவதை அவதாரம் என்று கூறுகிறோம்.

மானுட ஜன்மத்திற்கும் ஈஷ்வர அவதாரத்திற்கும் கீழ்க்கண்ட வேறுபாடுகளை ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். முதலாவதாக இவை ஏற்பட ஏதுவாக இருப்பது, இது ஏற்படக் காரணமாக நிற்பது. அறியாமை ஜன்மம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது; ஞானத்தைப் பாதுகாத்து தர்மத்தை நிலை நிறுத்த கடவுள் அவதாரம் நடைபெறுகிறது. அதனால் இது காரண பேதம் என்று சொல்லப்படுகிறது.

இரண்டாவதாக, ஜன்மா மற்றும் அவதாரத்தின் இடையே அவற்றின் பினால் வரும் வேறுபாடு – ஒரு மனித ஜீவன் அறியாமையினால் பிறப்பு, இறப்பு என்ற வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டு பந்தப் பிணைப்பால் சம்சாரியாகி நிற்கும். ஆனால் கடவுள் அவதாரமோ என்றும் நித்தியமான சத்திய நிலையில் நித்திய முக்தனாகி நிற்பது. இதனை சமஸ்க்ரிதத்தில் ஸ்வரூப் பேதம் என்று கூறுவார்.

மூன்றாவது, ஜனமும், அவதாரமும் தோன்றுவதற்கான காரணங்கள் – தான் செய்த செயல்களினால் ஏற்படும் கர்ம வினைகளை – புண்ய பாப கர்மாக்களை அவ்– பூவுலகில் பிறந்து சுகதுக்க அனுபவங்கள் மூலம் அனுபவிப்பது ஜீவனின் நோக்கம்; அவதாரமோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைவிரித்து ஆடுகிறதோ, அப்பொழுது, தர்மத்தைக் காக்க, இறைவன் அவதாரமாக வருகிறான். தன பக்தனுக்கு அனுக்கிரகம் செய்யவும் இறைவன் அவதாரம் எடுக்கிறான், பிரஹலாதனுக்கு நரசிம்ஹ மூர்த்தியாக வந்து ஆசி வழிங்கியதைப் போல.,  

 

अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् |
प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया || 6||

यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत |
अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् || 7||

परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् |
धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे || 8||

அஜோபி சன்னவ்யயாத்மா பூதானாம் ஈஷ்வரோபி சன்

ப்ரக்ருதிம் ச்வாமதிஷ்டாய சம்பவாம்யாதம் மாயயா.

யதா யதா ஹி தர்மஸ்ய க்ளானிர்பவதி பாரத

அப்யுக்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்.

பரித்ராணாய சாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே.

பிறப்பற்றவனாகவும், அழியாதவனாகவும், எல்லா உயிரினங்களுக்கும் இறைவனாக இருப்பவனாகவும் இருப்பது

எனது சொந்த மாயை சக்தியால் எனது சொந்த இயல்பை நான் கொண்டிருக்க முடிகிறது 6||

எப்போதெல்லாம் மதம் இழக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம், ஓ பார்த்தா!

அதர்மத்தின் எழுச்சிக்காக நான் என்னைப் படைக்கிறேன் 7||

நீதிமான்களின் இரட்சிப்புக்காகவும், துன்மார்க்கரின் அழிவுக்காகவும்

ஒவ்வொரு யுகத்திலும் நான் நீதியை நிலைநாட்ட முடியும் || 8||

எவ்வாறு, நுண்ணண்டமான நமது உடலில், நோயெதிர் அமைப்பு செயல் படுகிறதோ, அதே போல், பேரண்டத்திலும் கடவுள் அவதாரம், இப்புவியின் நல்லிணக்கத்திற்காக செயல் படும் என்று ஸ்ரீகிருஷ்ணர் நான்காவது அத்தியாயத்தில் கூறுகிறார்.