
கண்ணதாசனின் வைர மணிச் சங்கிலி
1. வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள்
2. நீரலைகள் மீதினிலே நெஞ்சிரெண்டின் நினைவலைகள்
3. நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
4. கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க் கணைகள்
5. மலர்க் கணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சணைகள்
6. பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனம் இரண்டும் தலையணைகள்
7. தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
8. புதுக் கலைகள் பெறுவதற்கு பூ மாலை மண வினைகள்
9. மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
10. விதிவகையை முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்
இன்னும் ஒரு பாடல்:
1. ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்
நானடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்
2. ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்
3. வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்
4. நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
5. சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!
6. காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் – கடல்
சங்கமத்தில் கூடும்
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் – கடல்
சங்கமத்தில் கூடும்
