நூல் விமர்சனம்; என் சுவாச காற்றே
புத்தகம்: என் சுவாச காற்றே
ஆசிரியர் : திருமதி கோ. லீலா ராசாமி
வெளியீடு : 2024
அச்சகம் :புஸ்தகா
பக்கங்கள் : 120
விலை ; ரூ140
சமீபத்தில் எழுத்தாளர் திருமதி கோ ராமசாமி அவர்கள் எழுதிய “என் சுவாச காற்றே” புத்தகத்தை படித்தேன் .. படித்தேன் என்று வெறுமனே சொல்வதை விட படித்து ரசித்தேன் என்று சொல்வதே பொருத்தம் .
காதல், மர்மங்கள், ஆக்சன் நிரம்பிய அருமையான த்ரில்லர். எடுத்தால் கீழே வைக்க முடியாது அத்தனை விறுவிறுப்பு. பாடலும், நடனமுமாக
ஒரு அழகான பின்னணியில் கதை நகர்வது அருமை. அதற்கு சுருதி சேர்ப்பது சுதா- பப்லு, அரவிந்தன்- கீதா
ரசனையான காதல்.. நம்மை கவர்கிறது.. அதுவும் ஆடலும் பாடலுமாக கைதேர்ந்த கலைஞர்களாக நாயகிகள்.. அதில் மனதை பறி கொடுக்கும் நாயகர்கள்..
மென்மையாக வீசும் தென்றலாய் ஒருபுறம் காதல் போய்க் கொண்டிருக்க மறுபுறமோ அடுத்தடுத்து கொலைகள் ..
அதுவும் முக்கிய புள்ளிகளாய் இருப்பவர்கள். ஐந்து நண்பர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் ஒன்றுபட அவர்களின் நால்வர் கொல்லப்படுகிறார்கள்.. அதுவும் அனைவரும் ஒரே விதமாக. எஞ்சி இருக்கும் ஒருவர் தப்புவாரா?
நாயகியர் வீட்டிற்கு ஒளிந்து வரும் அந்தக் கருப்புஆடை நபர் என்ன செய்தான்.. அவன் யார்? அவனைக் கையும் களவுமாக பிடிக்க முயலும் அரவிந்தனுக்கு தோல்வியே ஏற்படுகிறது.
இறுதிக் காட்சிகளில் ஐந்தாவது நபர் வெளிநாட்டில் இருந்து வருபவர் ..பாதுகாப்பை மீறி கொல்லப்படுகிறார்.
இந்தக் கொலைகளை செய்வது யார் எதற்காக இக்கொலைகள் நடைபெறுகின்றன.. இவர்களால் பாதிக்கப்பட்டது யார்? அதன் பின்னணி என்ன என்பதை விறுவிறுப்பாக விளக்குகிறது ..
காவல்துறை காரணத்தை கண்டுபிடித்தாலும்.. கொலையாளி யார் என்பது கண்டுபிடிப்பதில் திணறுகிறார்கள்.. எதிர்பாராத திருப்பமாய் இறுதி நிகழ்வு ..
குழப்பங்கள் இல்லாமல் நீரோடையாக சொல்வது கதைக்கு பிளஸ் .. காதல் மர்மம் என்ற இரு தடங்களில் பயணிக்கும் கதை.. கொஞ்சம் கூட தொய்வில்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது .. காதல் கதை விரும்புவோருக்கும் சரி, மர்மக்கதை பிரியர்களுக்கும் சரி இக்கதை.. ரெட்டை தீனி.
நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை பெற, இக்கதையை படித்து மகிழுங்கள் நண்பர்களே ..
