கைகழுவுதலின் நன்மைகளை உலகுக்கு உணர்த்திய மருத்துவரை கவுரவித்து கூகுள் டூடுல்: கரோனா தொற்று காலத்தில் முக்கியத்துவம் பெறுகிறது | Google ...பரமன் ‘சுகம் குடும்ப நல கிளினிக்’ விஜயம் செய்தார். பெயர் பலகையில் டாக்டர் பெயர் சுகவனம். கூட அவரின் மருத்துவ கவுன்சில் பதிவு எண் போட்டிருந்ததை மனதிற்குள் பாராட்டினார். நோயாளி பிரிவில் பெஞ்சில் அமர்ந்தார். இன்னும் ஈ , காக்காய் வரவில்லை. இன்னும் டாக்டர் பாப்புலர் ஆகவில்லையோ என்று பரமனுக்குத்  தோன்றியது. இவர் வெறும் MBBS தான். வேறு ஸ்பெசலிஸ்ட் டாக்டரிடம் போயிருக்கலாம் என்றும் மனசு அறிவுறுத்தியது. டாக்டர் சேம்பர் கதவு மூடியிருந்தது . மணி 9.30 ஆகியிருந்தது. வெளியே இருந்த அட்டண்டர் பெண்மணியிடம் கேட்டார். ‘ஏம்மா, டாக்டர் இன்னும் காணோமே’.

‘இப்ப வர்ற நேரம் தான் சாமி ‘.

கொஞ்சம் நேரத்தில் ஒரு பழைய மாடல் கார் வந்து நின்றது. டாக்டர் தான் போலிருக்கு என்று ஊகித்தேன். சுவரில் டாக்டர் வாங்கிய பல்வேறு பரிசு சான்றிதழ்களைப் பார்த்துக் கொண்டிருந்த பரமன்,  டாக்டர் நுழைவதைப் பார்த்துப் புன்னகைத்தார். அவரும் மெல்லிய நகையுடன் அவரின் சேம்பருக்குள் நுழைந்தார். சிறிது நேரத்தில் அழைப்பு மணி அடிக்கவே , பரமன் உள்ளே நுழைந்தார்.

“டாக்டர், என் பேரு பரமன் “.

 “சரி, என்னப் பிரச்சினை உங்களுக்கு ? “ . என்னுடைய குலம் கோத்திரம் என்று எதையும் விசாரிக்காமல் டாக்டர் சுகவனம் நிதானமாக வினவினார்.

“என் வெய்ட் ரொம்ப ஜாஸ்தியாஇருக்கு. என் உயரத்திற்கு ஓர் இருவது கிலோ ஜாஸ்தி . பாடி மாஸ் இண்டக்ஸ் (BMI) 20 பர்சன்ட் அதிகம். பாஸ்டிங் சுகர் 140க்கு மேலே. கொலெஸ்டெரோல் 250க்கு மேலே. தைராய்டு வேற தலைக் காட்டறது.  அரிசி சாதம் சாப்பிடக் கூடாதாம். வறட்டு சப்பாத்தித்  தான் சாப்பிடணுமாம். ஆயில் ரொம்ப கம்மி பண்ணனும் . நான்-வெஜ் வேண்டவே வேண்டாமாம். காத்தாலே , சாயந்திரம் டீ காஃபி குடிக்கிறது நிறுத்தனமாம். நடு நடுவில நொறுக்குத் தீனி ஸ்டிரிக்டா நோ. டெய்லி குறைஞ்சது ஒரு மணி நேரம் சுறுசுறுப்பா நடை நடக்கணுமாம் “. பரமன் இவ்வளவு விரிவாகச்  சொல்லியும் டாக்டர் ஒன்றும் கோபப்படவில்லை. ஒருவேளை அடுத்த நபர் வரும் வரையிலும் உரையாடலை தொடரலாமா ? என்று ஆசை வந்தாலும் மேற்கொண்டு பேசவில்லை.

‘நல்லாத் தெரிஞ்சி இருக்கே உங்களுக்கு. அதேய அப்படியே ஃபாலோ பண்ணுங்கோ. ஒரு தொந்தரவும் இல்ல. ஒரு ஆறு மாசம் கழிச்சி ஹெல்த் செக்-அப் ரிபோர்ட்டோட வாங்க. பொதுவா இன்னொரு டாக்டர் சொன்னதற்கு எதிரா நான் ஏதாவது சொல்றது நல்லாயிருக்காது. சரி, இதெல்லாம் உங்களுக்கு எந்த டாக்டர் சொன்னாங்க ? ‘.

“அதுவா டாக்டர்.  கூகிள் டாக்டர் தான் சொன்னார். நான் என்னோட பாடி கண்டிஷன் எல்லாம் விலாவாரியாப் போட்டு அட்வைஸ் கேட்டேன். எல்லாம் தரவாச்  சொல்லிச்சி “.

“சரி. அப்போ என்கிட்ட எதுக்கு வந்திங்க !. இங்கே டாக்டர் பீஸ் வேற குடுக்கணுமே”.

“இல்ல டாக்டர். நான் கடைசியில அந்த கூகிள் டாக்டர்கிட்ட இதெல்லாம் நடக்கிற காரியமா ? . முடியலேன்னா என்னப்  பண்றதுன்னுக் கேட்டேன். அதுக்கு அந்த கூகிள் டாக்டர் ‘நீங்க உங்க ஏரியாவில் இருக்கிற நல்ல டாக்டரைப் பாருங்கன்னு ஆலோசனை செஞ்சது. நானும் இந்த ஏரியாவில் நல்ல டாக்டரை கூகிளில் தேடினேன். அஞ்சி ஸ்டார் இருக்கிற டாப் டாக்டர் நீங்க ஒருத்தர் தான்னு காமிச்சது. அதான் உங்ககிட்ட வந்தேன்”.

‘வெல் டன் !. சரி சரி . டாக்டர் பீஸ்  இருநூறு குடுத்துட்டு கிளம்புங்க ‘.

“கிளினிக் திறந்து ஒரு நாள் தான் ஆகிறது. யார் 5 ஸ்டார் ரேட்டிங் போட்டிருப்பார்கள் !. மகனா அல்லது மனைவியா ?. கூகிளை முதலில் திறந்துப் பார்க்கணும் “. வியந்தவாறே தன்னோட ஸ்மார்ட் போனை உயிர்ப்பித்தார் டாக்டர் சுகவனம்.