
கவிதைச் சங்கிலிக்கு அந்தாதி நல்ல அமைப்பு!
அந்தாதி என்றால் நமக்கு முதலில் தோன்றுவது அபிராமி அந்தாதி. அதற்கு கண்ணதாசன் உரை எழுதியிருக்கிறார். அந்த நூலைப் படித்தால் அபிராமி பட்டரின் பெருமையும் கண்ணதாசனின் திறமையும் விளங்கும்
முரஞ்சியூர் முடிநாகராயர் எழுதிய புறநானூற்றுப் பாடலில் ஒரு சிறிய அந்தாதிச் சங்கிலி
மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
கண்ணதாசனின் இன்னொரு அந்தாதிச் சங்கிலிப் பாடல் வரிகள்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
வாழ நினைத்தால் வாழலா
அடுத்து , இணையத்திலிருந்து பொள்ளாச்சி எஸ் நாகராஜன் எழுதிய பல்லவியில் சங்கிலிப் பாடல் வரிசை :
1. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல – செல்வம்
2. சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா – கந்தன் கருணை
3. முருகா என்றதும் உருகாதா மனம் – அதிசய திருடன்
4. மனம் கனிவாக அந்த கன்னியை – இது சத்தியம்
5. கன்னிப் பருவம் துள்ளூதுங்க காதல் – சரசாம்பிகையே
6. காதல் ஜோதி அணையாதது கண்கண்ட – ஊரும் உறவும்
7. கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே – கர்ணன்
8. எங்கே நீயோ அங்கே – நெஞ்சிருக்கும் வரை
9. அங்கே மாலை மயக்கம் யாருக்காக – ஊட்டி வரை உறவு
10. யாருக்காக இது யாருக்காக – வசந்த மாளிகை
( இதைப்போல நாமும் அந்தாக்ஷரி முயற்சிக்கலாமே?)

இதயக்கனி படத்தில் “தொட்ட இடம் எல்லாம்” என்னும் சுசீலா டி எம் எஸ் பாடிய பாடலில் டி எம் எஸ் பாடிய வரிகள் அந்தாதி வகையில்தான் வரும். அதேபோல மூன்று முடிச்சு பாடத்தில் வரும் ஜெயச்சந்திரன் ஜானகி பாடலான “ஆடி வெள்ளி தேடி உன்னை” பாடலும் அந்தாதி வகைதான்.
ஸ்ரீராம்
LikeLike