பத்து புத்தகங்களின் வரிசை

வரும் செவ்வாய்க் கிழமை ( 4.11.25) நடை பெற இருக்கும் விருட்சம் நடத்தும் புத்தக வெளியிட்டுக் கூட்டத்திற்கு வரும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்று பத்து புத்தகங்களை வெளியிடுகிறேன். இது விருட்சம் இலக்கிய நிகழ்ச்சியில் நடைபெறப் போகிற முக்கிய நிகழ்ச்சி.
கடந்த 37 ஆண்டுகளாக விருட்சம் பத்திரிகை வெளிவருகிறது. பத்திரிகை ஆரம்பித்தபோதே புத்தகங்களையும் கொண்டு வர ஆரம்பித்தேன். என் முதல் புத்தகம் ரா.ஸ்ரீனிவாஸன் கவிதைகள் என்ற புத்தகம். 1988 ஆம் ஆண்டு வெளிவந்த கவிதைப் புத்தகம். அப்போது 500 பிரதிகள் அச்சடித்திருந்தேன். பெரும்பாலான புத்தகங்கள் இலவசமாக விநியோகிக்கப் பட்டது.
இந்த வருடம் ஒரே சமயத்தில் 10 புத்தகங்களை வெளியிட்டு கூட்டம் நடத்துவது இதுதான் முதல் முறை.. ஏற்கனவே திட்டமிட்டபடி 4 சிறுகதைப் புத்தகங்களைக் கொண்டு வந்து கூட்டம் நடத்துவதாகத் தீர்மானித்திருந்தேன். என் திட்டம் மாறி விட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக 10 புத்தகங்கள் சேர்ந்து விட்டன.
ஒரு நாவல், ஒரு கவிதைப் புத்தகம், ஒரு கட்டுரைப் புத்தகம் இதைத் தவிர 7 சிறுகதைத் தொகுப்புகள்.
என் நண்பரும் சிறுகதை எழுத்தாளருமான டாக்டர் பாஸ்கரனைத் தலைமை தாங்க அழைத்தேன். கல்கி முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான ரமணன் அவர்கள் நான்கு சிறுகதைத் தொகுப்புகளைப் பற்றிப் பேச ஒப்புக் கொண்டார். என் நெடுநாளைய நண்பர் கணேஷ்ராமன் என் புத்தகத்தை எடுத்துப் பேசுகிறார்.
இந்த முக்கியமான நிகழ்ச்சியில் ரஸவாதியின் பரிசுப் பெற்ற நாவலான ஆதார ஸ்ருதி வெளியாகிறது. அந்தக் காலத்தில் கலைமகள் இதழில் தொடராக வெளி வந்தது.இதைப் பற்றிப் பேச ரஸவாதியின் புதல்வி ரேவதி பாலு தயாராக உள்ளார். மேலும் ரேவதியின் சிறுகதைத் தொகுப்பும் இதில் அடங்கும்.
மஞ்சுளா சுவாமிநாதனின் சிறுகதைத் தொகுப்பும், ஸிந்துஜாவின் சிறுகதைத் தொகுப்பும் இதில் அடங்கும்.
அசோகமித்திரன் நினைவாக இணையத்தில் பதிவான 4 சிறுகதைத் தொகுப்புகள் இதில் அடங்கும். 55 கதைகள் அடங்கிய தொகுப்பு.
என்னுடைய தொகுப்பு உரையாடல் வழியாக நான் பேசுவதைப் பதிவு செய்துள்ளேன். அதை கணேஷ்ராமன் வெளியிடுகிறார்.
அவசியம் கூட்டத்திற்கு வந்திருந்து எங்களைக் கௌரவப்படுத்துங்கள்.
– அழகியசிங்கர்
இந்த நிகழ்வின் காணொளிகளை ஷ்ருதி டி வி தளத்தில் காணலாம்!
அழகியசிங்கரின் ‘ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்’ வெளியிட்டு பேசுபவர்/எ.கணேஷ்ராமன்
இரா.முருகனின் கவிதைகள்’ வெளியிட்டு பேசுபவர்/வ.வே.சு.
மஞ்சுளா சுவாமிநாதனின் ‘ஆஹா இன்ப நிலாவினிலே’ வெளியிட்டு பேசுபவர்/ஹரிஹரன்
ரேவதி பாலுவின் ‘வாழ்க்கை ரொம்ப பெரிசு’ வெளியிட்டு பேசுபவர் இரா.பிரேமா
‘அசோக மித்திரன் நினைவாக இணையத்தில் பதிவான கதைகள்’ (4) வெளியிட்டு பேசுபவர் ரமணன்
ஸிந்துஜாவின் ‘மீரா ஏன் சினிமாவுக்கு வரவில்லை’ வெளியிட்டு பேசுபவர்ஜெ.பாஸ்கரன்


நிகழ்ச்சியில் பங்கு கொண்டு நேரில் கண்டு / கேட்டு களித்தேன். நன்றி.
ஸ்ரீராம்
LikeLike