Delivery girl accidentally hits the CEO's car, and to her surprise, he falls for her at first sight

இரவு 8 மணி செங்கல்பட்டு தாண்டி டாக்ஸி போய்க்கொண்டிருக்கிறது நந்தினி கண்ணில் நீர்த்ததும்ப அழுகை அடக்க முடியாமல் விம்முகிறாள்.

சென்னையில் பிரபலமான ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

திருச்சியில் இருக்கும் அவள் அம்மா சீரியஸ் என்ற செய்தி கிடைத்தவுடன் ஆபீஸில் இருந்து நேராக ஒரு டாக்ஸி வரவழைத்து கிளம்பி விட்டாள்.

எப்படியும் திருச்சி சென்றடைய இரவு 12 ஆகிவிடும்.

சங்கர் தனது பல்சர் மோட்டார் பைக்கில் செங்கையை தாண்டி திருச்சி சென்று கொண்டிருக்கிறான் அதேசமயம்.

நாளை அவனுக்கு ஒரு கம்பெனியில் இன்டர்வியூ. அவன்  சென்னையில் ஒரு சிறிய ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான். மாத ஊதியம் குறைவாக இருந்ததினால் அவன் சென்னையில் தன் வேலை முடிந்தவுடன் தினமும் 6 முதல் 10 மணி வரை உணவு டெலிவரி பாயாக ஒரு புகழ்பெற்ற கம்பெனியில் வேலை பார்ப்பான்.

ஒரு நாளைக்கு எப்படியும் அவனுக்கு ஒரு 500 ரூபாய் கிடைத்துவிடும்.

இவ்வாறு தினமும் போய்க் கொண்டிருந்த வேளையில் தான் ஒரு புகழ்பெற்ற கம்பெனி இருக்கும் திருச்சியில் இருந்து இவனுக்கு அழைப்பு வந்தது. சென்று கொண்டு இருக்கிறான்.

மதுராந்தகத்தில் அருகில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் இரவு உணவை முடிக்க நின்றான்.

நந்தினி செல்லும் டாக்ஸி டிரைவர் நந்தினியிடம்  இரவு உணவு சாப்பிட நிறுத்த வா என்று கேட்க அவள் மனது சரியில்லாத காரணத்தால் வேண்டாம் என்றும் நீங்கள் போய் சாப்பிட்டு வாருங்கள் என்றும் கூறுகிறாள்.

அவனும் சரி என்று சென்று விடுகிறான். இவன் நிறுத்தியதும் சங்கர் சாப்பிட நிறுத்திய ஓட்டல் தான்.

உணவு முடிந்து அந்த டிரைவர் வெளியில் ஆசுவாசமாக நின்று போன் செய்கிறான்.

சங்கரும் சாப்பிட்டுவிட்டு ஒரு புகை போடுவதற்காக எதேச்சையாக இவன் பக்கத்தில் வந்து நிற்கிறான்.

டிரைவர் யாருக்கோ போன் செய்து தான் மதுராந்தகத்தில் இருப்பதாகவும் வண்டியில் ஒரு ஐட்டம் இருப்பதாகவும் சரியாக ஒன்பதரை மணியில் இருந்து பத்து மணிக்குள் விழுப்புரம் டோல்கேட் தாண்டி அடர்ந்த இருட்டு பகுதியில் நிறுத்துவதாகவும் அவனை அந்த சமயத்தில் அங்கு வரும்படி பேசிக் கொண்டிருந்தான்.

எதேச்சையாக சங்கர் காதில் இது விழ அவனிடம் ஒரு பதைபதைப்பு தொற்றி கொண்டது.

டிரைவர் வண்டி நம்பரை சொல்ல இவன் உடனே அங்கிருந்து நகர்ந்து அந்த வண்டி எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்வையை விட்டான்.

கண்டுபிடித்து விட்டான்.

சற்று வெளிச்சம் குறைவாக இருந்ததால் உள்ளிருக்கும் பெண்மணி யார் என்று தெரியவில்லை .

சிறிது வண்டியின் அருகே சென்று குனிந்து பார்த்தான்.

அவனுக்கு ஒரு அதிர்ச்சி. தெரிந்த முகமாக இருக்கிறதே என்று. சரிதான்.

ஓஎம்ஆர் இல் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தனியாக வாழ்ந்து கொண்டிருப்பவள்.

இவன் அந்த பகுதியில் தான் டெலிவரி பாய்யாக இருந்ததால் இரண்டு மூன்று முறை நந்தினிக்கு உணவு டெலிவரி செய்திருக்கிறான்.

அதை ஞாபகத்தில் வைத்து கண்ணாடி ஜன்னலில் குனிந்து தாழ்ந்த குரலில்,  மேடம் என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பு இல்லை. நான் உங்களை பார்த்து இருக்கேன்.

இது என்ன புது பிரச்சனை என்பது போல அவனை பார்த்தாள்.௨

இப்போது நீங்கள் ஏதோ ஒரு சிக்கலில் இருப்பதாக எனக்குப்படுகிறது.

உங்கள் டாக்ஸி டிரைவர் ஏதோ தவறாக திட்டமிடுகிறார். தாங்கள் தான் இலக்கு என்று தோன்றுகிறது. நான் உங்களுக்கு உதவுகிறேன்.

 என்னை சந்தேகப்படாதீர்கள். என் முகத்தை நினைவு கூர்ந்து பாருங்கள். நான் உங்களுக்கு உணவு டெலிவரி செய்திருக்கிறேன் சில சமயங்களில்.

தினம் தினம் என்னுடைய பணி முடிந்தவுடன் இந்த வேலையை கூடுதல் வருமானத்திற்காக செய்து கொண்டிருக்கிறேன்.

நாளை எனக்கு திருச்சியில் ஒரு நேர்காணல் இருப்பதனால் நேரமின்மை காரணமாக   என்னுடைய இரு சக்கரத்தில் வாகனத்தில் கிளம்பிவிட்டேன்.

எதிர் பாரா விதமாக

இந்த  டிரைவர் பேசுவதை கேட்க நேர்ந்தது .

பயந்துவிட்டேன்.

ஏன் நீங்கள் அழுது கொண்டு இருக்கிறீர்கள்.

சரி இப்போது நாம் துரிதமாக செயல் பட வேண்டும். நேரம்  இல்லை.

அவன் வருவதற்கு இன்னும் ஒரு பத்து நிமிடம் ஆகலாம். நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது.

என் மேல் நம்பிக்கை வையுங்கள் . எனக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள்.

என்னை நம்புங்கள்.

 என் கூட வாருங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்தில் கொண்டு சேர்த்து விடுகிறேன் என்று பொறுப்பாக பேசினான்.

அவள் ஏற்கனவே சோகத்தில் மூழ்கி இருப்பவள். இதைக் கேட்டவுடன் பயந்து அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள். அதில் ஒரு கருணை மற்றும் சோகம் இருப்பதாக உணர்ந்தாள்.

யோசிக்க நேரம் இல்லை.

அவளுடைய சிறு தோள் பையை எடுத்துக்கொண்டு இருட்டில் இறங்கி விட்டாள்.

ஏதோ ஒரு நம்பிக்கையில் சங்கர் பின் இருக்கையில் அமர்ந்தாள், சமயபுரம் அம்மனை மனதால் வணங்கி. ட்ரைவர் நம்மை துரத்தினால் என்ன செய்வது என்று நந்தினி பயத்தில் கூற, சங்கர் நீங்கள் கவலை பட தேவை இல்லை என்றும் அதற்கு ஒரு வழி செய்து விட்டு வந்து இருக்கிறேன். அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக கூற நந்தினி ஆறுதல் அடைந்தாள்.

 போகும்போது தன்னுடைய அம்மா சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாலும் பணி முடியும் சமயத்தில் செய்தி கிடைத்ததாலும் உடனே அங்கிருந்து நேராக திருச்சிக்கு கிளம்பியதாக அவள் சொல்ல இவனும் தான் ஒரு நேர்காணலுக்காக செல்வதாக கூற ஆறுதலாக  ஒன்றும் கவலைப்பட வேண்டாம் அம்மாவுக்கு சரியாகிவிடும் என்று நம்பிக்கை கொடுத்து எங்கும் நிற்காமல் நேராக தில்லை நகர் திருச்சியில் உள்ள  மருத்துவ மனையில் கொண்டு இறக்கி விட்டான்.

அவள் ஒரு நன்றி கலந்த பார்வையுடன் இவனை பார்க்க அவன் அதை ஆமோதிக்க நேராக ஓடி தன் அண்ணனை கட்டிக்கொண்டு என்ன ஆச்சு என்று கேட்க பக்கத்தில் இருந்த டாக்டர் ஒரு மைல்டு ஹார்ட் அட்டாக் என்றும் ஒன்றும் பயமில்லை என்றும் கூற கொஞ்சம் நிம்மதி அடைந்தாள். டாக்டரிடம் அனுமதி பெற்று தன் அம்மாவை பார்க்க விரைந்தாள். அமைதியாக அம்மா தூங்குவதை கண்டு,

அசுவாசப்படுத்திக்கொண்டு சங்கரைத் தேடி கண் பார்வை செல்ல அவன் கிளம்பப் தயாராக இருப்பதை கண்டாள்.

அவன் அவளுக்கு ஒரு மாபெரும் மனிதனாக கருணை நிறைந்தவனாக தெரிந்தான்.

வேகமாக ஓடி அவன் கையை பிடித்து கண்களில்  ஒற்றிக் கொண்டு நன்றி கூறி இவளுடைய போன் நம்பரை பதிவு செய்து கொள்ளுமாறு கூறினாள்.

அவன் விடைபெற்று செல்ல எத்தனிக்கும் போது ஒரு போன் வந்தது. நந்தினியும் ஆர்வத்துடன் அவனை பார்க்க,

 நாங்கள் மதுராந்தகம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுகிறோம்.

தாங்கள் கொடுத்த தகவலுக்கு மிக்க நன்றி என்றும் ஹைவேயில் நடக்கும் கொள்ளைகளுக்கு இந்த டிரைவர் ஒரு மூல காரணம் என்றும் கூறி அவனையும்  அவன் நண்பர்களையும் சுற்றி வளைத்து விட்டதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

தாங்கள் கொடுத்த தகவல் தான் துருப்பு சீட்டாக அமைந்து என்றும் தங்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் என்று கூறினார்.

கேட்டுக்கொண்டு இருந்த நந்தினிக்கு அவனை இறுகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று உணர்வு தோன்றியது.

சங்கரைப் பார்த்து நந்தினி ஒரு புன்னகை புரிய அவனும் அதை புரிந்து கொண்டு கிளம்ப தயாரானான்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஹைவே தொல்லைக்கும் ஒரு தீர்வு கண்டு நந்தினி அபாயத்திற்கும் ஒரு தீர்வு கண்டு மன நிம்மதியுடன் அங்கிருந்து அகன்றான்.

நந்தினி சங்கரையே வைத்த கண் வாங்காமல் பார்க்க,  சங்கருக்கு ஏதோ சொல்வது போல் தோன்றியது.

சங்கர் கிளம்பி சென்ற பிறகு தன் அம்மாவிடம் சென்று மடியில் படுத்துக் கொண்டு அழுதாள். அம்மா நான் நன்றாக இருக்கிறேன், கவலைப்படாதே டா செல்லம் என சொல்லி தலையை கோதி விட்டாள்.

மனதில் ஒரு தெம்பு பிறந்தது. அண்ணன் அவளை வீட்டிற்கு அழைத்து சென்றான். மதினி குழந்தைகளை கட்டி கொஞ்சி ஒரு புத்துணர்வு அடைந்தாள்.

மூன்று நாட்கள்  அண்ணனுக்கு உதவியாக அம்மாவை பார்த்து கொண்டு இருந்தாள்.

அம்மா வீட்டிற்கு வந்து விட்டாள் நல்லபடியாக. இவளுக்கு ஆபீஸ் லீவு முடிந்து கிளம்ப வேண்டும்.

மனதில்லாமல் பகல் ஓம்னி பஸ்ஸில் சென்னை கிளம்பி விட்டாள்.

பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போது  ஏனோ சங்கர் மனதில் வந்து அமர்ந்து கொண்டான். கண்கள் மூடின.

இளவயதில் இருக்கும் ஆரவாரம் இல்லாமல் பொறுப்பான , மனித நேயத்துடன்  ஓர் இளைஞன்.

ஓரளவுக்கு வசீகரமான தோற்றம்.

மா நிறம். நல்ல உயரம்.

இவனை ஏன் அலசுகிறேன்.

கண் விழித்தாள்.

அம்மாவும் அண்ணனும் கல்யாண பேச்சை எடுக்கும் போதெல்லாம் தட்டி கழித்தவள் ஏன் இவனை பற்றி சிந்திக்கிறாள்.

உதட்டில் லேசாக புன்னகை.

சங்கருக்கு போன் பண்ணி பேச ஓர் ஆர்வம் முளைத்தது.

போனை எடுத்து நம்பரை கூப்பிட யத்தனிக்கும் போது ஒரு கூச்சம் தொற்றிக்கொண்டது. மனதை  கட்டுப்படுத்தி மீண்டும் கற்பனையில் ஆழ்ந்து போனாள்.

பஸ் வேகமாக ஓடி கொண்டிருந்தது. கொஞ்சம் நேரம் கண் அசரலாம் என்று கண்களை மூடிக்கொண்டு இருக்கையை சாய்த்து கொண்டாள்.

கண் விழித்து பார்த்தால் செங்கல்பட்டு.

இன்னும் 40 நிமிடத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம். . இறங்கி ஓஎம்ஆர் செல்ல வேண்டும்.

சங்கர் நந்தினியை இறக்கி விட்டு சென்றவன் நேர்காணல் முடிந்து அன்றே தேர்வும் செய்யபட்டு வேலைக்கான ஆர்டரும் கிடைத்தது.

நல்ல சம்பள உயர்வு.

10 நாட்களில் சேர்வதாக கூறி சென்னை வந்தவன் இருக்கும் வேலையை ராஜினாமா செய்துவிட்டான். புது வேலை திருச்சியில் என்பதால் அங்கு தங்குவதற்கு இடம் பார்க்க திருச்சி செல்ல கேளம்பாக்கம் பஸ் நிலையம் வந்தான். அவ்வப்போது ஏனோ நந்தினி மனதில் புகுந்து அவனை சஞ்சலத்தில் ஆழ்த்தி விடுவாள். ரசித்து மகிழ்வான்.

ஆயினும் ஏதோ ஓர் தயக்கம். அச்சம் .

நந்தினி பஸ்ஸில் இருந்து இறங்கினாள்.

இறங்கியவளுக்கு இன்ப அதிர்ச்சி!

ஆம்! அதே மேடையில் சங்கர் திருச்சி செல்லும் ஓம்னி பஸ்சில் ஏற தயாராக இருந்தான்.

அவன் இவளை பார்க்கவில்லை.

வேகமாக நடந்து சங்கர் என்று கூப்பிட அவன் குரல் வந்த திசையில் பார்த்தான்.

கண்கள் விரிந்து ஓரு ஆச்சர்யம் கலந்த புன்னகை அவன் முகத்தில்.

நந்தினி மேடம், அம்மா நலமா என்று விசாரித்தான்.

நலம் என்று சொல்லி அது என்ன மேடம் என்று சிணுங்க அவன் அவளை நேருக்கு நேர் பார்க்க அவளும் கண்ணால் ஏதோ சொல்ல முயன்றாள்.

சில வினாடிகள் மொளனம்.

நான் என்று இருவரும் ஒரே நேரத்தில் பேச,

மீண்டும் மொளனம்.

தனக்கு புதிய வேலை கிடைத்து விட்டதால் திருச்சியில் தங்க இடம் பார்க்க போவதாக கூறினான்.

உடனே நந்தினி எங்கும் போக வேண்டாம். எங்கள் வீட்டு மாடியில் ஒரு ரூம் பாத்ரூமுடன்  இருக்கிறது. அது உங்களுக்கு தான். நான் அண்ணாவிடம் சொல்லி விடுகிறேன் என்றாள்.

உங்களுக்கு எதற்கு சிரமம் என்று  சங்கர் கூற நந்தினி பட்டென்று

ஏன், நாம் விரைவில் ஒன்றாகத்தான் இருக்க போகிறோம் என்று சொல்லி தலை குனிந்தாள். தன் பாணியில் காதலை வெளிப்படுத்தினாள்.

உண்மையாகவா? என்னை பிடித்து இருக்கிறதா என்று மகிழ்ச்சியுடன் துள்ள , அவள் கையை இறுக பிடித்து ஒரு மிருதுவான முத்தமிட்டு லேசாக அணைத்து கொண்டான்.

பக்கத்து டீ கடை ரேடியோவில்

“தலைவனும் தலைவியும் சேர்ந்ததென்ன “ என்ற பாடல் ஒலித்தது.

அவனும் அவர்களுடைய திருச்சி வீட்டு மாடியில் குடி புகுந்தான்.

அவர்களுக்கு பிடித்தமான பையன் ஆனான்.

நந்தினி சங்கர் காதல் வலுப்பெற அவள் அம்மா அண்ணன் சங்கர் மேல் கண் வைக்க மிக சுலபமாக இருவரின் ஆசைகள் நிறைவேறி திருமணம் இனிதே முடிந்தது!

இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தான் தேவன் அன்றோ!

இதுதான் இறையின் கணக்கோ!