Amman Alangaram Jewellery With Price Stone Necklace 10 Inches Stone Haram/ Multicolour Stone Jewellery For Deityசங்கிலிப்  பாடல்கள் என்று நாம் இன்று சொல்லும் பாடல்கள் அந்தக்காலத்து அந்தாதியின் அடைப்படையில் வந்தவை. இது பற்றி நாஞ்சில் நாடன் போன்றோர் இணைய தளங்களில் நிறைய எழுதியுள்ளனர். அவற்றில் சில பாடல்களை இந்த இதழில் கூறுகிறோம்.  
சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்து அந்தாதி;
பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி, பொலிந்து இயங்கும்
மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை, வெள்ளிக் குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை, தன்னைக் கண்ட
என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.  

கம்பன் பாடிய வண்ண அந்தாதி : 

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்,
இனி, இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மாற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில்,
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால் வண்ணம் இங்குக் கண்டேன்!

கண்ணதாசன் பாடல்: 

பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன்
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு
வாடுகிறேன் 
தமிழில் விளையாட்டு காட்டுகிறார் சேரமான் பெருமான்.
தாழும் சடை, சடை மேலது
கங்கை, அக்கங்கை நங்கை
வாழும் சடை, சடை மேலது
திங்கள், அத்திங்கள் பிள்ளை
போழும் சடை, சடை மேலது
பொங்கு அரவு, அவ்வரவம்
வாழும் சடை, சடை மேலது
கொன்றை, எம் மாமுனிக்கே.

 

கம்பர் ரசித்த பாடல்: 

மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரை
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’

எம்.கே.ஆத்மநாதன் ‘‘நாலுவேலி நிலம்’ என்ற படத்தில் அந்தாதித் தொடையில் நாட்டுப்புறச் சாயலில் ஒரு பாட்டை எழுதியிருக்கிறார்.

ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடங்கொண்டு நான் வருவேன் சாமத்திலே
நல்ல பாம்பு வேடங்கொண்டு நடுசாமம் வந்தாயானால் 
ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரத்தில் பறந்திடுவேன்
ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரத்தில் பறந்தாயானால்
செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்!
செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்
பூமியைக் கீறியல்லோ புல்லாய் நான் மொளைச்சிடுவேன்!
பூமியைக் கீறியல்லோ புல்லாய் நீ முளைத்தாய் ஆனால்
காராம்பசு வேடங்கொண்டு கடித்திடுவேன் அந்தப் புல்லை
காராம்பசு நீயானால் கழுத்து மணி நானாவேன்

இன்னொரு சினிமா பாடல்: 

வெண்முல்லைச் சோலையில் பொன்வண்டு பாடுமோ?
பொன்வண்டு பாடினால் பூந்தென்றல் வீசுமோ?
பூந்தென்றல் வீசினால் பருவங்கள் பேசுமோ?
பருவங்கள் பேசினால் பலனின்றிப் போகுமோ?

 

வாலியின் வித்தியாசமான சங்கிலிப்பாடல்: 

பக்கத்து வீட்டுப் பருவமச்சான் பார்வையிலே படம் புடிச்சான்!
பார்வையிலே படம்புடிச்சு பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்!

மருக்கொழுந்து வாசத்திலே மாந்தோப்பில் வழி மறிச்சான்!
மாந்தோப்பில் வழிமறிச்சு மயக்கத்தையே வரவழைச்சான்!

 

ஊரெல்லாம் உறங்காது உள்ளமட்டும் அடங்கிவிடும்
ஓசையெல்லாம் அடங்கிவிடும் ஆசை மட்டும் அடங்காது!
ஆசை மட்டும் அடங்காமல் அவனை மட்டும் நெனச்சிருப்பேன்

 

வாலியின் இன்னொரு பாடல்: 

என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்துப் போனவன் போனான்டி
தன்னைக் கொடுத்து என்னையடைய வந்தாலும் வருவாண்டி

இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்துப் போனவன் போனான்டி
ஏக்கத்தைத் தீர்க்க ஏனென்று கேட்க வந்தாலும் வருவான்டி

நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்துப் போனவன் போனான்டி
நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவான்டி

ஆசை மனசுக்கு வாசலை வைத்துப் போனவன் போனான்டி
வாசலைத் தேடி வாழ்த்துக்கள் பாடி வந்தாலும் வருவான்டி

 

இத்துடன் சங்கிலி முடிவடைகிறது।