
வணக்கம்.
ஒரு குடும்பக் கதையை துப்பறியும் நாவல் போல விறுவிறுப்பானமுறையில் கொண்டு சென்று இறுதியில் மர்ம முடிச்சுகளை கதாநாயகன் அவிழ்க்கும் பாணியும் நிகழ்வுகளும் மிக சுவாரஸ்யமானவை. புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை.
இந்த நாவலின் சுருக்கம்:
சேதுபதி என்ற எழுத்தாளர் எழுதிய ‘நீ நான் தாமிரபரணி’ என்ற ஒரு நாவல் புகழின் உச்சாணிக்கொம்பில் இருக்கும் பொழுது நாவலாசிரியர் மர்மமான முறையில் காணாமல் போகிறார். அவரைப் பற்றி துப்பறிய முனைபவர்கள் அச்சுறுத்தப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள்
அந்த நாவல் ஒரு உண்மைக் கதை. ரகசியம் அந்த நாவலிலேயே மறைந்து இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் ‘உண்மை’ பத்திரிகை நிருபர் அருணுக்கு பலத்த எதிர்ப்பு வருகிறது. அதையும் மீறி அந்த ரகசியத்தில் தானும் ஒரு அங்கம் என்று அறியாமல் துப்பு துலக்குகிறான்.
அருண், பெரிய கோடீஸ்வரன் ராஜராஜன், முற் போக்குவாதி மாதுரி இவர்களின் வாரிசு. தன்னிடம் சிறிதளவு கூட அன்போ பாசமோ காட்டாத வெற்றிகரமான தொழிலதிபர் ரோபோ அப்பா. தான் நாவலை துப்பு துலக்குவதை ப் பார்த்து அதிர்ச்சி அடையும் அம்மா .
காவ்யா அருணின் காதலி.
அந்தக் கதையின் நாயகன் எழுதி வைத்த விஞ்ஞான க் குறிப்பு அதே ரீதியில் ஆராய்ச்சி செய்து வரும் தாமிராவை இதில் ஈடுபடுத்துகிறான்.
நாயகன் நாயகி உயிரோடு இருக்கிறார்களா இல்லை கதைப்படி தாமிரபரணி நதியில் கலந்து விட்டார்களா என்பதும் ஒரு குழப்பமாக இருக்கிறது.
ஈஸ்வரன் அரசியல் வட்டாரத்தில் ஒரு கிங் மேக்கர்.
ஈஸ்வரனின் அன்பு சகோதரி தாரா மனநோயாளி.படுத்த படுக்கையாக இருப்பவள்.அவள் அண்ணன் ஈஸ்வரன் இறுதி க்கட்ட கேன்சர் நோயாளி என்று தெரிந்து அதிர்ச்சியால் குணமடைகிறாள்.
கிராமத்தில் கிடைத்த ஒரு புகைப்படத்தில் இருந்த இருவரைப் பார்த்ததும் அருணுக்கும் தாமிராவுக்கும் பெரிய அதிர்ச்சி ..அதிலிருந்த பெண் தாமிராவின் அம்மா தாரா.ஆண் அருணின் அப்பா ராஜராஜன். அண்ணன் தங்கை ஒன்று சேர்கிறார்கள்.
சேதுபதி புரியாத மற்ற புதிர்களை விளக்குகிறார்.
ராஜராஜன் விரும்பும் தாராவை மணம் செய்து கொள்ள முடியாமல் தான் அன்டியிருக்கும் மாமா தொழிலதிபர் செல்வரங்கத்தின் மகள் மாதுரியை கட்டாய மணம் செய்து கொள்கிறான். மாதுரி மனம் உவந்து விவாகரத்து தருவதாக சொல்லிஅவன் தாராவுடன் சேர்ந்து வாழப் பணிக்கிறாள்.
சேதுபதி, தாரா, ராஜராஜன், மாதுரி எல்லோரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.
அது ஒரு மரோசரித்ரா காலம் ராஜராஜன் தன்னுடைய விஞ்ஞான கண்டுபிடிப்பில் ஆர்வம் காட்டி, தாரா ஓவியக்கலையில் ஈடுபட்டு, இருவரும் நதிக்கரையில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இரவில் பழைய பாடல்களைப் பாடி ஆச்சி கையால் சாப்பிட்டு பூங்கொடி கிராமத்தில் ஒரு வருடம் ஒரு பூரண வாழ்க்கை வாழ்கிறார்கள் .
அருண் பிறந்தவுடன் ராஜராஜன் மாதுரியுடன்திரும்பச் சேர நேரிடுகிறது.
இத்தனை மர்மத்திற்கும் காரணம், சம்பந்தப்பட்டவர்கள் செல்வாக்குள்ள பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தங்கள் வீட்டு விஷயம் வெளியில் வர விரும்பாத காரணம் தான.
எல்லோரும் மகிழ்ச்சியாக ஒன்று சேர்கிறார்கள்.
நாவல் ஆரம்பிக்கும் போது ‘உண்மை’ பத்திரிகை அலுவலகத்தில் ‘சத்யமேவ ஜெயதே’. வாசகம் தென்படுகிறது. இந்த நாவலில் உண்மை தான் ஜெயிக்கிறது.
இது குடும்பக் கதையா? கிராமத்துக் கதையா? காதல் கதையா? மர்மக் கதையா ? எல்லாம் சேர்ந்த ஒரு கலவை. இந்த கலவையைக் கொண்டு மிக அழகிய வண்ண ஓவியத்தை தீட்டியிருக்கிறார் ஆசிரியர்.

இந்த ஆசிரியரின் வேறு ஒரு கதை படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான எழுத்தாளர்.
ஸ்ரீராம்
LikeLike
Excellent vimarsanam 👏👏❤️
LikeLike