Amazon.com: Yaanai Doctor: யானை டாக்டர் (Tamil Edition) eBook : ., Jeyamohan, ., ஜெயமோகன்: Kindle Storeஜெயமோகனின் – யானை டாக்டர் – நூல் விமர்சனம்

நூல்                     :  யானை டாக்டர்

ஆசிரியர்                 :  ஜெயமோகன்

முதற்பதிப்பு              :  2025

பக்கங்கள்                :  56

விலை                   :  ரூ.50/-

பதிப்பகம்                 :  வள்ளி பதிப்பகம்

      வன ஊழியர் ஒருவர், காட்டில் பணிபுரியும் சகிப்புத்தன்மையும், அர்ப்பணிப்பும் நிறைந்த சுயநலமற்ற விலங்குசார் மருத்துவ நிபுணருக்கு, மத்திய அரசில் பணிபுரியும் தனது நண்பனின் துணை தொண்டு ‘பத்மபூஷன்’ விருதை பெற்றுத்தர விருப்பப்படுகிறார்.  ஏற்கனவே நிறை கேள்விப்பட்டிருக்கிறார்.  அவ்விருதுக்கு அவர் முழு தகுதியானவர்.  ஆனால் அதை விரும்பவில்லை.  கிடைக்காமலும் போகிறது ; அவரைப்பற்றி.

      நேரில், அவர் யானைகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் மனித நேயத்துடன் அளிக்கும் சிகிச்சை முறைகலைக் கண்டு ஆச்சர்யமும், உவகையும், பெருமிதமும் கொள்கிறார்.  கதை, யானைகளின் வாழ்வியலையும் ; அவைபடும் இன்னல்களையும் விவரிக்கிறது.  ஆனால் கதையினூடே அரசுக்கும் அதிகாரிக்கும் இடையே ஊடாடும் நுண் அரசியலைப்பதிவு செய்கிறது.  மருத்துவர் பற்றிக் கூறும்போது, எல்லாம் கடந்த பற்றற்ற ஒரு தவமுனியின் மோனத்துவ நிலையே யானை மருத்துவரின் மனநிலையும், பணியில் ஆழ்ந்த நுணுக்கமும் ; சகிப்புத்தன்மையும் இல்லையெனில் இப்பணி வேரற்ற மரத்தில் உயிர்மையைத் தேடுவது போலத்தான்.

      நினைவுக்கும் கனவுக்குமான உள்வெளியும் மனித மனவெளியின் எல்லையற்று விரிந்துகொண்டே செல்லும் வானவெளியின் வெற்றிடமுமே கதை முழுதும் அவர் சொல்லியிருப்பது போலவே, நுரையின் குமிழிகள் போல உடைந்து நான் சுருங்கிச் சுருங்கி இல்லாமலாவது போல நகர்ந்து செல்கிறது.  இது வாசகரின் மனவெளியையும் கடந்து போகிறது.

      மருத்துவ நிபுணருக்கும் வன ஊழியருக்கும் இடையிலான புரிதலும் புரிதலினூடே தத்துவர் ஜி.கே. கூறுவது போல மனித உறவுகளுக்கிடையில் மேம்பட்டு நிற்கும் புரிதலின் உச்சத்தில் உணரப்பட்டும் அன்பும் மதிப்பும் அலாதியானது.

      கதை யானைகளின் வாழ்வியல் தான் என்றாலும் மனிதனின் உளவியலையும், ஆளுமையையும், அழகியலையும் இரு கதை மாந்தர்களினூடே நமக்குள் நம்மை உணர வைப்பது படைப்பாளியின் கலை நுணுக்கம்.

      ஹி இஸ் ஜஸ்ட் அனதர் அனிமல்னு காட்டுகிறது அந்த மாதிரி வலிதான்.  வலிகளை கவனிக்கறது ரொம்ப நல்ல பழக்கம்.  அத மாதிரி தியானம் ஒன்னும் கிடையாது.   உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது ; துடிக்காது.  செந்தட்டி உரசவக்குப்பின் படைப்பாளி ஒரு தத்துவ ம்கோன்னதத்தைக் காட்டிச் செல்கிறார்.

      ஆங்காங்கே காந்தியத்தையும் வர்க்கத்தையும் பதிவு செய்து விடுகிறார்.  சளி, திரவம், மலம், மூத்திரம் – நானும் அதைப்போலத் தாள் என்பது ஓங்கி அறைவது போல் உள்ளது.  இத்தனை நாற்றங்களையும் (பொறாமை, அபகரிப்பும், ஆணவம், அகந்தை, பேராசை, மாயை, பெண்சுகம், பாலியல் வன்கொடுமை, அதிகாரம், மத / இனவெறி, ஆணவப் படுகொலை, இயற்கைச் சீரழிவு, அழகு, அசிங்கம்) மீறி பத்மபூஷன் விருது எதற்கு எனக் கேட்கும்போது பலூன் உடைந்து போகிறது.

      ஆன்மீகம் என்றப் பெயரில் மலைகள், காடுகளில் இயற்கைச் சீர்கேடுகள், அநீதிகள், காட்டு விலங்குகளுக்கும் மனித விலங்குகளுக்கும் இடையில் பெருத்த இடைவெளி.  மனிதமற்ற செயல்கள் மிக நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  சூழலியல் குறித்து நாம் சிந்திக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது.