*உங்கள் அலுவலக வாழ்க்கை மேம்பட வேண்டு மா?*
.s. சுந்தரராஜன் எழுதியது .மணிமேகலை பிரசுரம் .விலை ரூபாய் 70 .
முதல் பதிப்பு 2016 மொத்த பக்கங்கள் 136.
Fish ,who movie my cheese, one minute manager ,7 habits of highly effective People, the effective executive ,six thinking hats ,the secret ஆங்கிலத்தில் இருப்பதுபோல் அலுவலக மேம்பாட்டு புத்தகங்கள் தமிழில் வரவில்லையே என்ற எண்ணத்தில் தான் ,*உங்கள் அலுவலக வாழ்க்கை மேம்பட வேண்டுமா ?*என்ற இந்த நூலை ஒரு சுவாரஸ்யமான கதை வடிவில் அமைத்து வழங்கியிருக்கிறார்.
கதாநாயகி பதவி உயர்வு பெறுகிறார். பதவி உயர்வு பெற்ற இடத்தில் நிறைய குழப்பம் ,நிறைய பிரச்சினைகள். அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறாள்.
அப்பொழுது மீன் அங்காடிக்கு செல்கிறாள் .அங்கு அவளுக்கு அறிவுரை வழங்கப்படுவது போல சில விஷயங்கள் நடக்கின்றன.
1) எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்
2)மாற்றத்திற்கு முதற்படி தைரியம் வேண்டும்.
“மனமே ஓ மனமே நீ மாறிவிடு .
மலையோ அது பனியோ நீ மோதிவிடு.”
அருமையான இந்த பாடலை விவரித்து ஆசிரியர் நமக்கு போதனைகள் வழங்குகிறார் .அருமையான கருத்துள்ள வாசகம் இது.
3) உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்.
4)ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்.
அணியில் சிறு சிறு மாறுதல்கள் அணிகளுக்கான அறிவுரைகள் அணிகளின் அணிவகுப்பு .மகிழ்ச்சி. கொண்டாட்டம்.
சந்தோஷமான மக்கள் மற்றவரை சந்தோஷமாக வைப்பார்கள் .
ஜாலி புதுமைக்கு வழிகாட்டும் .
சந்தோஷமாக வேலை செய்வது உடலுக்கும் நல்லது.
வேலையில் பரிசு வாங்குவதைவிட வேலையே நமக்கு பரிசாய் அமைந்துவிடும்.
ஒரு பொன்மொழி சொல்லப்படுகிறது.
“நேற்று என்பது சரித்திரம் மறந்து விடுங்கள் .
நாளை என்பது குறித்து கவலை விடுங்கள்.
இன்று என்பது இன்பம் .அதிலேயே வாழுங்கள்: என்று ஆசிரியர் அழகாக தெரிகிறார்
.
இந்த புத்தகத்தின் கதாநாயகிக்கு தன்னை அறியாமலேயே கவிதை வரிகள் மனதில் தாளத்தோடு வந்தன.
* வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம் .
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம் .
லட்சம் கனவு கண்ணோடு .
இலட்சியங்கள் நெஞ்சோடு .
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு .*
அருமையான பாடல் அழகாக எடுத்து ஆளப்படுகிறது.
இந்த புத்தகத்தில் உள்ள இந்த வரிகளை நாமும் கைக்கொண்டால், மனதில் பதிந்து பொதிந்து வைத்துக்கொண்டால் வெற்றிபெறுவது சுகமாக அமையும் .சுகமே அமைதி .
அமைதியே சுகம் .வாழ்வே இன்பம்.
இந்தப் புத்தகத்தை படிப்பதன் மூலம் அலுவலக வாழ்வில் ஆனந்தம் பெறலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
(வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம்)

