2000 க்குப் பிறகு வந்த நாவல் /கட்டுரைகளின் விமர்சனங்களை சுமார் 300 வார்த்தைகளில் “குவிகம் விமர்சனப் போட்டிக்கு ” அனுப்பும்படி கேட்டுக்கொண்டோம்.
நிறைய நண்பர்கள் அனுப்பினார்கள்.
அவற்றுள் பரீசீலனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
விமர்சனம் என்பது ஒரு தனி மனிதரின் கருத்து. அவருக்குப் பிடித்திருந்தால் படைப்பினைக் கொண்டாடுவார். இல்லையென்றால் கிழி கிழி என்று கிழித்துவிடுவர். சினிமா நாவல் கட்டுரை எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். தற்போது திரைப்பட விமர்சனம் பெரும் பேச்சு பொருளாகி வருகிறது. நெட்டிசன்ஸ் என்று கூறப்படும் இன்டர்நெட் மக்கள் ஒரு நல்ல படத்தை அதில் நடித்தவரைப் பிடிக்கவில்லையென்றால் மோசமாக எழுதி அவற்றை வைரலாக்கி அந்தப் படத்தின் வியாபாரத்தையே பாதிக்கும் அளவிற்குச் செய்கிறார்கள். அதேபோல் சுமாரான படத்தை அதில் நடித்த ஹீரோவின் விசிறிகள் ஆஹா ஓஹோ என்று எழுதி அதனைப் பொதுமக்கள் அனைவரும் பார்க்கும்படி செய்கிறார்கள்.
ரேடிங் (RATING) என்ற ஒரு மதிப்பீட்டு அளவுகோல் இன்று பரவலாகப் படித்தவர் மத்தியில் நம்பப் படுகிறது. எந்த ஒரு உணவகத்தையோ பொருளையோ திரைப்படத்தையோ அதனை உபயோகித்தவர் கொடுக்கும் மதிப்பெண் (ஸ்டார்) 5 க்கு இத்தனை என்பதை வைத்து மற்றவர் தேர்ந்தெடுக்கிறார்கள். உதாரணமாக இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் (IMDB) என்ற ஒரு அமைப்பு அனைத்துத் திரைப்படங்களுக்கும் அதற்கு வருகிற மதிப்பீட்டின் சராசரி அளவை அந்தப் படத்திற்கான ரேடிங்க் என்று வழங்குகிறது. OTT இல் படம் பார்ப்பவர்களுக்கு இந்த மதிப்பீடு மிகவும் உதவுகிறது.
இலக்கிய உலகில் விமர்சனம் எப்போதும் கார சாரமாக இருக்கும். ஒரு எழுத்தாளர் மற்ற எழுத்தாளரை – அவரது படைப்பைக் கோபுரத்திலும் வைப்பார் குப்பை மேட்டிலும் எறிவார். இதனால் வரும் சண்டையும் சர்ச்சையும் அவர்களின் பரம்பரைச் சொத்து. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு விமர்சகருக்கு மற்ற படைப்புகளைப் பற்றி எப்படிவேண்டுமானாலும் விமர்சனம் செய்ய உரிமை இருக்கிறாம். ஆனால் அவருடைய விமர்சனம் சரியில்லை என்று விமர்சனம் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாதாம்.
நடுநிலையோடு விமர்சனம் செய்ய அமைப்புகள் இப்போது நிறைய வந்துவிட்டன. GOOD READS என்ற அகில உலக அமைப்பு பல தமிழ்ப் புத்தகங்களுக்கும் மக்கள் தரும் ரேடிங்க்கை வைத்து மதிப்பீடு அளிக்கிறது. அதன்படி பொன்னியின் செல்வனுக்கு 4.70 /5, சில நேரங்களில் சில மனிதர்கள் 4.08 , கள்ளிக்காடு இதிகாசம் 4.15, ஒரு புளியமரத்தின் கதை 4.05 . இப்படி போகிறது. அதெல்லாம் எதுக்கு சார்? பேஸ்புக்கிழ போட்டோமா 200 லைக் கிடத்ததா அது போதும் என்பவர்களும் உண்டு.
நமக்கும் குவிகம் படைப்புகள் /நிகழ்வுகள் மற்ற புத்தகங்கள் குறித்து உண்மையான மதிப்பீடு (RATING) வாசகர்களிடமிருந்து பெறவேண்டும் என்று விரும்புகிறோம். 2026 இல் இது பற்றி மற்ற நண்பர்களின் கருத்தை அறிந்து ஒரு திட்டம் தீட்டலாம்.
ஆனால் விமர்சனம் என்பது ஒரு கலை.
ஒரு படைப்பை அதன் தன்மை, மையக் கருத்து, நடை, வெளிப்படையாக அது காட்டும் அழகு, மறை பொருளாக அது கூறாமல் கூறும் கருத்து போன்ற பலவற்றை விருப்பு வெறுப்பின்றி எடுத்துச் சொல்லும் விமர்சகர்களே உண்மை விமர்சகர்கள்.
நம் விமர்சனப் போட்டிக்கு வந்த விமர்சனங்கள் பெரும்பாலும் அவற்றைப் பாராட்டும் வகையாகவே இருக்கின்றன. நிறைகளை நிறைவாகவும் குறைகளைக் குறைவாகவும் சொல்கிறார்கள். இதனால் விமர்சனப் போட்டியில் எந்த விமர்சனம் சிறந்தது என்று தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். பரிசு/விருது பெற்ற புத்தகங்கள் பல . புதியவர்கள் எழுதிய மிகச் சிறப்பான புத்தகங்கள் சில. நாவல்கள் அதிகம். கட்டுரைப் புத்தகங்களும் உள்ளன.
ஒரு வரியில் சொல்லப் போனால் அனைத்து விமர்சனங்களும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.
அத்தனையும் முத்துக்கள்.
அதில் எந்த மூன்று முத்துக்குப் பரிசளிப்பது?
விமர்சனம் எழுதிய எழுத்தின் அடிப்படையில்தான் பரிசு வழங்க முடியும்.
அதன்படி முதல் கட்டத்தில்
எஸ்ஸார்ஸி, செல்லம் ஜெரீனா, லாவண்யா சத்யநாதன், இரா மதி ஒளி , சந்துரு மாணிக்க வாசகம், ராஜாமணி, துரை அறிவழகன், மாலதி திரு, குமரி எஸ் நீலகண்டன், சுகுமாரன்,அப்பு சிவா ஆகிய 11 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனனர்.
இனி இறுதிக்கட்டம்.
இமையம் எழுதிய “செல்லாத பணம்” என்ற நாவலுக்கு விமர்சனம் எழுதிய சுகுமாரன்
டாக்டர் எஸ் எம் கமால் எழுதிய “இராமர் செய்த கோயில்” என்ற கட்டுரைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுதிய ராஜாமணி
அனந்த் ரவி எழுதிய “ஐயனாரின் மௌனவெளி” என்ற நாவலிற்கு விமர்சனம் எழுதிய செல்லம் ஜெரீனா
ஆகிய மூவரும் குவிகம் விமர்சனப் போட்டியில் தங்கள் சிறப்பான விமர்சனத்தால் ஆயிரம் ரூபாய் (Rs .1000) பரிசு பெறுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
இவர்களைத் தவிர லாவண்யா சத்யநாதன், அப்புசிவா, துரை அறிவழகன் ஆகியோரின் விமர்சனங்கள் மனதைக் கவரும் வண்ணம் இருந்ததால் அவர்கள் மூவருக்கும் Rs.250 சிறப்புப் பரிசு வழங்கப்படுகிறது. அன்புடன் அதை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறோம்.
பரிசு பெற்ற அனைவரும் தங்கள் GPAY எண்ணை 919442525191 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கவும். உங்களுக்கான பரிசும் விருதும் குவிகம் நேரடி விழாவின் போது (31.01.26) வழங்கப்படும்.
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். மற்றவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள். தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை குவிகத்திற்கு அனுப்புங்கள்
-குவிகம்
விமர்சகர் புத்தகத்தின் தலைப்பு ஆசிரியர்
| தாமோதரன் | தேவசேனைக்கு அரண்மனை கிடைத்துவிட்டது | எஸ்எம் டில்லி |
| இந்து | நட்பெனும் நந்தவனம் | இறையன்பு |
| எஸ்ஸார்சி | இலக்கிய சோலையின் ஆலமரம் | தொகுப்பு பாவண்ணன் |
| பா முத்துக்குமரன் | நீர்வழிப் படூஉம் | தேவி பாரதி |
| செல்லம் ஜெரினா | ஐயனாரின் மௌன வெளி | அனந்த் ரவி |
| இரா சைலஜா சக்தி | கோட்டை புரத்து வீடு | இந்திரா சவுந்தர்ராஜன் |
| பால சாண்டில்யன் | கடைசி குரு | தீபன் |
| ஜே செல்லம் ஜெரினா | கதைகளும் திரைப்படங்களும் | சுபாஷிணி ரமணன் |
| வசந்தா கோவிந்தராஜன் | வேணு வனம் | தி வள்ளி |
| தி வள்ளி | மரகதக் கணையாழி | ஜே செல்லம் ஜெரினா |
| பூங்கொடி பாலமுருகன் | வேலு நாச்சியார் | சேயோன் |
| பானுமதி வெங்கடேஸ்வரன் | பிருந்தாவன துளசி | டாக்டர் பாஸ்கரன் |
| பா முத்துக்குமரன் | ஆகாச தூது | வித்யா சுப்ரமணியம் |
| லாவண்யா சத்யநாதன் | தோழி | மாலன் |
| தி வள்ளி | என் சுவாசக் காற்றே | லீலா ராமசாமி |
| இரா மதிஒளி | பூவுலகின் கடைசி | கிருஷ்ணா டாவின்சி |
| சந்துரு மாணிக்கவாசகம் | கவிஞர் அறை | கோபி கண்ணதாசன் |
| ராஜாமணி | கற்கை நன்றே | ராம் சுரேஷ் |
| இரா மதிஒளி | பராரி | நரன் |
| சுபாஷினி ரமணன் | யுக புருஷன் | ஜே செல்லம் ஜெரினா |
| ஜே செல்லம் ஜரினா | கடைசி குரு | தீபன் |
| இரா மதிஒளி | மன்னார் கண்ணீர்க் கடல் | வரீதய்யா கான்ஸ்தந்தின் |
| சாந்தி மாரியப்பன் | ராஜ வனம் | ராம் தங்கம் |
| டாக்டர் ஜெ பாஸ்கரன் | ஆகாச தூது | வித்யா சுப்ரமணியம் |
| தேவவிரதன் | நட்சத்திர வாசிகள் | கார்த்திக் பாலசுப்பிரமணியன் |
| ராஜாமணி | ராமர் செய்த கோயில் | டாக்டர் எஸ் எம் கமால் |
| ராஜாமணி | காந்தியடிகளும் வழிபாட்டு தலங்களும் | நித்யானந்தம் |
| ரஞ்சனி சுப்ரமணியம் | அகதியின் பெர்லின் வாசல் | ஆசி கந்தராஜா இலங்கை |
| சாந்தி ரசவாதி | நீ நான் தாமிரபரணி | என் கணேசன் |
| முனைவர் இரா விமலா | யானை டாக்டர் | ஜெயமோகன் |
| சாந்தி மாரியப்பன் | அளம் | தமிழ்ச்செல்வி |
| துரை அறிவழகன் | பஞ்சவர்ணம் | ஆசு |
| தி வள்ளி | மர்ம வீரன் | அப்பு சிவா |
| துரை அறிவழகன் | உத்தம் பல்லா | செஞ்சி தமிழினியன் |
| மாலதி திரு | கிருஷ்ணதாசி | இந்திரா சவுந்தரராஜன் |
| துரை அறிவழகன் | வேங்குடிவயல் | அண்டனூர் சுரா |
| மாலதி திரு | காவல் கோட்டம் | சு வெங்கடேசன் |
| மாலதி திரு | சூல் | சோ தர்மன் |
| பா இந்துமதி | கன்னியாகுமரி | ஜெயமோகன் |
| பா இந்துமதி | நீர்வழிப் படூஉம் | தேவி பாரதி |
| சித்ரா சிவன் | ரமலோவ் | சரவணன் சந்திரன் |
| சின்னக் கண்ணன் | மீண்டும் ஒரு காதல் குற்றம் | டாக்டர் ஆர் சிதம்பர நடராஜன் |
| குமரி எஸ் நீலகண்டன் | மண்ணில் உப்பானவர்கள் | சித்ரா பாலசுப்ரமணியன் |
| குமரி எஸ் நீலகண்டன் | உயிர்ச்சொல் | முனைவர் த சித்தார்த்தன் |
| தி வள்ளி | கள்ளிக் காட்டு இதிகாசம் | வைரமுத்து |
| வெய்யில் | ஒற்றைச் சிறகு ஓவியா | விஷ்ணுபுரம் சரவணன் |
| அ அழகையா | கல் மரம் | திலகவதி |
| அம்மு ராகவ் | பொன்னி | ஷான் கருப்பசாமி |
| பால சாண்டில்யன் | இயக்குனர் இமையத்துடன் 25 வருட இனிய நினைவுகள் | கலைமாமணி யோகா |
| பால சாண்டில்யன் | வந்த பாதை | ராணி மைந்தன் |
| கருணாமூர்த்தி | உங்கள் அலுவலக செயல்கள் மேம்பட வேண்டுமா? | குவிகம் சுந்தர்ராஜன் |
| சாந்தி மாரியப்பன் | புன்னைவனக் காவலன் | டாக்டர் அகிலாண்ட பாரதி |
| சுகுமாரன் | சஞ்சாரம் | எஸ் ராமகிருஷ்ணன் |
| ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் | நீர்வழிப் படூஉம் | தேவி பாரதி |
| விஜயலக்ஷ்மி கண்டன் | இது இருள் அல்ல | அன்னபூரணி தண்டபாணி |
| மந்திரமூர்த்தி அழகு | நீர்வழிப் படூஉம் | தேவி பாரதி |
| சுகுமாரன் | செல்லாத பணம் | இமையம் |
| புவனா சந்திரசேகரன் | மரப்பாச்சி சொன்ன ரகசியம் | எஸ் பாலபாரதி |
| அப்பு சிவா | கண் எனும் மாயப்பிள்ளை | டாக்டர் அகிலாண்ட பாரதி |
| அப்பு சிவா | ஓவியமோ அற்புதமோ | ராஜலக்ஷ்மி நாராயணசாமி |
| அப்பு சிவா | சிதம்பரம் கோயில் சில உண்மைகள் | செந்தில்நாதன் |
| கௌரிசங்கர் | சூல் | சோ தர்மன் |
| புவனா சந்திரசேகரன் | ஆதனின் பொம்மை | உதயசங்கர் |
| புவனா சந்திரசேகரன் | அந்தோனியின் ஆட்டுக்குட்டி | மா கமலவேலன் |

