28.12.2025 இல் குவிகத்தின் ஆண்டு விழா வழக்கம் போல ‘வித்தியாசமாக’ நடைபெற்றது. (அதன் காணொளி மேலே)
குவிகத்தைப் பொறுத்தவரையில் ஆண்டு விழா என்றால் அந்த ஆண்டு என்னென்ன செய்தோம் என்பதை மொத்தமாக – சுருக்கமாக சொல்வது. அடுத்த ஆண்டுக்கு குவிகம் நண்பர்களின் எதிர்பார்ப்பு என்பதை அறியும் நிகழ்ச்சியே!
2025 ஆம் ஆண்டில் குவிகம் குழுமம் என்ற அமைப்பின் கீழ் நாம் செய்த நிகழ்ச்சிகளை மீள்பதிவு செய்தது பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டு அறிக்கை என்றும் கொள்ளலாம்.
அதன் பின்னர் 2026 இல் குவிகம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் குவிகம் நண்பர்கள் கருத்துக்கள் கூறும் நிகழ்வும் நடைபெற்றது.
நண்பர்கள் கூறிய ஆலோசனைகளை மனமாற ஏற்றுக்கொண்டு அவற்றை முடிந்தவரை செயல்படுத்துவோம்.
இன்றைய நிகழ்வின் இறுதியில் பரிமாறப்பட்ட கருத்துகளின் தொகுப்பு
1. குறும் புதினம் அச்சுவடிவிலும் டிஜிடல் வடிவிலும் கொண்டுவரலாம்
2. குவிகம் தொடர்ந்து செய்துவரும் பணிகளில் பங்கேற்க மற்ற நண்பர்கள் முன்வரவேண்டும்.
3. குவிகம் மின்னிதழில் சிறப்பிதழ்கள் வரவேண்டும். (அறிவியல், AI, நகைச்சுவை , சிறுவர் ,இசை மலர், சங்க இலக்கியம் , பக்தி இலக்கியம், திருக்கோவில்கள்)PDF/FLIP BOOK கொண்டு வரலாம்.
4. குவிகம் மின்னிதழில் தொடந்துவரும் கதை /கட்டுரைகள் /கவிதைகளில் புதிய மாற்றம் கொண்டுவரவேண்டும். ஒருபக்கக் கதைகள் வரவேண்டும். மருத்துவ செய்திகள் வரவேண்டும்.
5. வ வே சு அவர்கள் அளித்துவரும் மகாகவியின் மந்திரச் சொற்கள் நிகழ்வில் கூறிய கருத்துக்களைத் தொகுத்து அவரே எழுதிய குயில் பாட்டு போல மற்ற பாடல் தொகுப்புகளையும் தனித்தனியே ( பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, விநாயகர் நான்மணிமாலை, சக்தி பாடலகள், சுயசரிதை போன்றவை ) புத்தக வடிவில் கொண்டுவர வேண்டும். ( சாய் கணேசன் உதவுவதாகக் கூறியுள்ளார் )
6, விருட்சம் குவிகம் பூபாளம் இணைந்து தீபாவளி மலர் 2025 கினோடு வந்ததைப் போல ஒவ்வொரு ஆண்டும் இரு மலர்கள் (தமிழ்ப்புத்தாண்டு & தீபாவளி_ கொண்டுவரவேண்டும். அவற்றில் வண்ணப் படங்கள் நிறைய வரவேண்டும்.
7. கவிஞர் வைதீஸ்வரன், முனைவர் வ வே சு அவர்களைத் தொடர்ந்து மற்ற சிறப்புமிகு நண்பர்களின் ஆவணப்படங்களைக் கொண்டுவரவேண்டும்.
8. தொடர் நேர்காணல்களை மீண்டும் கொண்டுவரலாம்
9. சாகித்ய அகாதமி கதைகளைப் பற்றிய அளவளாவல் தொடரவேண்டும்.
10. தமிழ் நாட்டிற்கு சிறப்பு செய்த மாமனிதர்களைப் பற்றி அளவளாவலில் பேசவேண்டும்.
11. இலக்கியம் தவிர மற்ற கலைகள் – ஓவியம், நடனம், சிற்பம், போன்றவற்றைப் பற்றி பேசவேண்டும்.
12, அளவளாவலில் புத்தக விமர்சனம் கொண்டு வரலாம்.
13. மற்ற மொழிகளில் சிறந்து விளங்கும் கதை /கவிதை / கட்டுரைகளை [ நோபல் பரிசு பெற்ற கதைகள் ] மொழிபெயர்த்து வெளியிடவேண்டும்.
14. புராணங்களில் மிளிரும் இலக்கியம் பற்றிப் பேசவேண்டும்
15. நாடகம் படித்தல்/ நடித்தல் அளவளாவலில் கொண்டு வரலாம்
16. குவிகம் நண்பர்கள் தவிர மற்ற வெளியுலகப் பிரமுகர்களை உரை நிகழ்த்த அழைக்கவேண்டும்.
17. குவிகம் நண்பர்கள் கூடி பயணம் மேற்கொள்ளலாம்
18. அளவாளாவலில் ஒருவரே பேசுவதற்குப் பதிலாக 4/5 பேர் பேசலாம் .
19. குவிகம் ஆண்டு மலர் ( மலையாள மனோரமா இயர் புக் போல) கொண்டு வரலாம்
20. குறும் புதினத்திற்கு 1000 அங்கத்தினர் வரவேண்டும்.
21. நூற்றாண்டு காணும் எழுத்தாளர்களை குவிகம் முன்னரே கண்டு கொள்ளலாம்
22. நேரடி வினாடி வினா நிகழ்ச்சி பெரிய அளவில் நடத்தலாம்
23. குறும் புதினம் அட்டையில் மாறுதல் கொண்டுவரலாம்
24. ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்றவற்றிற்கு ஒருபக்கக்கதைகள் எழுதலாம்
25. சித்திரக் கதைகள் , சித்திரப் புத்தகங்கள் கொண்டுவரலாம்
26. குவிகம் ஷார்ட்ஸ், ஒரு நிமிட வீடியோ ( ஏற்கனவே இருக்கும் வீடியோவிலிருந்தும்), ஒரு நிமிட நாடகம் கொண்டு வரலாம்.
27. நேயர் கருத்துக்களை /கடிதங்களை அளவளாவலில் வாசிக்கலாம்
