
2025 என்பது ஒரு முழு வர்க்கம். ( PERFECT SQUARE NUMBER) 45 * 45 அதாவது 45 இன் வர்க்கம் .
இதற்குமுன் இப்படி வந்தது 89 வருடங்களுக்கு முன் வந்திருக்கிறது – 1936 இல் ( 44 * 44) .
இனி வரப்போவது 2116 இல் (46*46) அதாவது 91 ஆண்டுகளுக்குப் பிறகு.
அது மட்டுமல்ல
2025 இன் வர்க்க மூலம் 45 ( 1 லிருந்து 9 வரை எண்களைக் கூட்டுவதால் வரும் தொகை)
இன்னும் சொல்லப் போனால் 45 ஒரு அழகான முக்கோண எண் TRIANGULAR NUMBER. ( 3, 6,10,15,21,28,36,45,55 .. ஆகியவையும் முக்கோண எண்கள்)

இத்தனை பெருமை வாய்ந்த 2025 இல் என்னென்ன நடந்தன என்பதைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைவோமா?

TOP SENSATION SONGS
மகா கும்பமேளா ஜனவரி – பிப்ருவரியில் நடைபெற்றது 66 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
விஜய் அரசியல் கட்சியைத் துவக்கினார்
ஜம்மு காஷ்மீர் பகுதியில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் 26 பேர் பலி
தீவிரவாதிகள் தாக்குதலுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இந்தியா பாகிஸ்தான் போரும் அமைதியும்
கரூரில் நடந்த த வெ க கூட்டத்தில் 40க்கும் மேற்பட்டவர் பலி
பெங்களூரில் கிரிக்கெட் விழாவில் நடந்த கூட்ட நெரிசலில் 11 பேர் பலி
ஏர் இந்தியா விமான விபத்தில் 171 பேர் பலி
டில்லி செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பு
டில்லி, பீகார் தேர்தலில் பி ஜே பி அமோக வெற்றி
லாஸ் எஞ்சலிஸ் பகுதியில் காட்டுத்தீ – 25 பேர் பலி – லட்சக்கணக்கான மக்கள் இடமாற்றம்.
டொனால்ட் டிரம்ப் (ஜன 20) அமெரிக்கா அதிபராகப் பதவியேற்றார்
இஸ்ரேல் ஈரான் யுத்தம்
கொரியாவின் K POP DEMON HUNTERS – GOLDEN பாடல்கள் உலக அளவில் அதிக பிரசித்த பாடல்களாயின
இஸ்ரேல் ஈரான் போர் நிறுத்தம்
ஒன்பது மாதங்கள் விண்வெளியில் இருந்த இந்தியா வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பினார்.
பெண்கள் குழு கர்மன் கோட்டைத் தாண்டி விண்வெளிக்குச் (11 நிமிடம்) சென்று மீண்டது
20 ஆண்டுகளாகக் கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணம்
வங்க தேசத்தில் வன்முறை
கம்போடியா தாய்லாந்து நாட்டுக்கிடையே போர் மற்றும் போர் நிறுத்தம்
பூமி மீது அட்லஸ் என்று பெயரிடப்பட்ட மர்ம விண்வெளி பொருள் தாக்கம் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது
பாகிஸ்தானில் ரயில் கடத்தல்
தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்குமுன் இரும்பு உபயோகத்தில் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
மணிப்பூரில் கலவரம்
டில்லியில் காற்று மாசு அதிகரிப்பு
சி பி ராதாகிருஷ்ணன் உதவி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
நக்சலைட்டுகள் சரணடைய புதிய திட்டம்
கர்நாடகா எழுத்தாளர் பானு முஷ்டக் பிரசித்தி பெற்ற பூக்கர் பரிசு பெற்றார்.
விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது வீரர் எஸ் சுக்லா
டெஸ்லா கார் இந்தியாவிற்கு வந்தது
சீனா இந்தியா உறவு மேம்பாடு
தெரு நாய்கள் பற்றி தீவிர சர்ச்சை
விமானத்தில் தொத்திக்கொண்டு வந்த 13 வயது ஆப்கானிஸ்தான் சிறுவன்
விஷ்ணு பகவான் பற்றி தவறுதலாகக் கூறியதாக தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு
இண்டிகோ விமான சேவை பாதிப்பு
தீவிர ஏழ்மையை ஒழிப்பதில் கேரளாவுக்கு முதலிடம்
இணையவழி குற்றத்தைத் தடுக்க சஞ்சார் சாத்தி ஆப் அறிமுகம்
ராஜேந்திர சோழன் விழா நடைபெற்றது
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது
புதிய பாம்பன் பாலம் செயலுக்கு வந்தது
தங்கம் விழா பவுனுக்கு 1 லட்சம் ரூபாய் எட்டியது
திருப்பரங்குன்றம் தூண் தீபம் சர்ச்சையில் உள்ளது
2026 இல் தமிழக தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பதில் குழப்பம் நிலவி வருகிறது
அமெரிக்காவில் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் இந்தியப் பொருட்களுக்கு வரி விகிப்பு அதிகரிக்கப்பட்டது
இன்னும் எத்தனையோ ..
குறிப்பாக
உங்கள் குவிகம் மின்னிகழ் தொடங்கி ஒரு மகா மகம் – கும்ப மேளா ஆகிறது . ஆம் 12 வருடங்கள் முடிந்து 13 வது வருடம் துவங்கியிருக்கிறோம். – நவம்பர் 2025 இல்
