Image of Knit into Pearls – The Knit India Through Literature series - Madras Musings

 

தமிழகத்தில்  பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள்!  குவிகத்தின் பல இலக்கியப் பணிகளுக்கு அன்புக்கரம்  வழங்கிவரும்  சிவசங்கரி அவர்களுக்கு குவிகத்தின் சார்பில் – நண்பர்கள் சார்பில் வணக்கத்துடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் மிகச் சிறந்த விருது , மிகச் சிறந்த எழுத்தாளருக்குக் கிடைத்திருப்பதில்  நாம் மிகப் பெருமை அடைகிறோம். 

  • விருது விவரம்: 2026-ஆம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, இலக்கியம் மற்றும் கல்வித் துறையில், மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
  • பங்களிப்பு: சமூகக் கருத்துக்கள், நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் நீண்டகாலப் பங்களிப்பு.
  • சமூகப் பணி: எழுத்துப் பணி மட்டுமின்றி, அக்னி அறக்கட்டளை மூலம் சமூக நலத் திட்டங்களையும், கலை மற்றும் பண்பாட்டுப் பணிகளையும் சிவசங்கரி ஆற்றி வருகிறார்.

விருது பெற்றது குறித்து அவர் சென்னைத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் காணொளி இதோ!

சிவசங்கரி அவர்களின் சிறப்புகளில் சில: 

இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ‘சரஸ்வதி சம்மான்’ விருது 2022-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. இவரது ‘சூர்ய வம்சம்’ (நினைவு அலைகள்) என்ற சுயசரிதை நூலுக்காக இந்த கௌரவம் கிடைத்தது.
தமிழ்நாடு அரசின்  2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் இவருடைய பாரத தரிசனம் எனும் நூலுக்கு கிடைத்தது.
கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் ‘இலக்கிய ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்புக்காக’ வழங்கப்படும் 2022 ஆம் ஆண்டிற்கான விருது இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற இவரது நூலுக்கு வழங்கப்பட்டது.
மொத்தப் படைப்புகள்: 36 நாவல்கள், 48 குறுநாவல்கள் (Novellas), 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் ஏராளமான பயணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
முக்கிய நாவல்கள்: ’47 நாட்கள்’, ‘பாலங்கள்’, ‘திரிவேணி சங்கமம்’ போன்றவை இவரது எழுத்தாற்றலுக்குச் சான்றுகள்.
இவரது பல படைப்புகள் திரைப்படங்களாக வந்துள்ளன. 
எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ (Knit India Through Literature) என்ற இந்தத் திட்டம், இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரு தனிநபர் செய்த மிகப்பெரிய சாதனை.   
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறந்த எழுத்தாளர்களைச் சந்தித்து, அவர்களின் நேர்காணல்கள் மற்றும் படைப்புகளைத் தொகுத்து இந்தியாவை இலக்கியத்தால் இணைப்பதே இதன் இலக்கு.
நான்கு தொகுதிகள்: இது நான்கு பெரும் பாகங்களாக வெளியிடப்பட்டது:
தெற்கு (The South)
கிழக்கு (The East)
மேற்கு (The West)
வடக்கு (The North)
மொழிபெயர்ப்பு: 18-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் உள்ள இலக்கிய ஜாம்பவான்களின் படைப்புகளை இதில் கொண்டு வந்துள்ளார். இந்தத் தொகுப்பு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இந்திய ஒருமைப்பாட்டிற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.