
மோகன்லால்- விஜய் பாசமுள்ள அப்பா -மகனாக முதற்பாதியில், அப்பறம் திருடன்- போலீஸாக இன் டர்வெலுக்கு அப்பறம் – முடிவில் மிகவும் கெட்டவர்களை வதைத்து கொஞ்சம் கெட்டவர்களைத் திருத்தி – அப்பாடா படம் ஒருவழியாக முடிகிறது!
விஜய் பாடுகிறார் காமெடி செய்கிறார் பஞ்ச் பேசுகிறார் காஜல் மற்றும் குத்துப் பாட்டு மச்சிகளுடன் டான்ஸ் பண்ணுகிறார்! ரசிகர் மன்றத்துக்கு செம தீனி!.
மோகன்லாலை சும்மா விஜய்யோடு தோளை இடித்து பாடுவதற்கும் சரமாரியாக பஞ்ச் டயலாக் பேசுவதற்கும் மட்டும் உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்.
கதை மதுரையில் நடக்கிறதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் மதுரையின் மணத்தைக் காணோமே!
காஜல் அகர்வால் சரியான காக்கிச் சப்பை ! நடிக்க ஸ்கோப்பே இல்லை. அவரும் விஜய்யும் ஒருவரை ஒருவர் பின்னால் பிடித்துக் கொள்வதில் காமெடியும் இல்லை -ரொமான்ஸும் இல்லை!
வில்லனின் பிளாஷ்பேக், கதைக்கு சிறிய டுவிஸ்ட்! ஆனால் ‘தம்’ இல்லை!
முதல் பாதியில் காக்கிச் சட்டையை கிழிக்கும் காமெடியில் விஜய் -சூரி கூட்டணி தூள் கிளப்புகிறது! காக்கிக் சட்டையை காமெடி பீஸாக்கி கிழிப்பது கொஞ்சம் டூ மச் தான்!
டான்ஸ் போது ‘அட ஜீவா’ என்று பார்க்கும் போதே காணாமற் போகிறார்!
மியூசிக் டி.இமான் ! பட்டையைக் கிளப்புகிறார்!
படம் மிகவும் நீளம்னு ‘எப்போ மாமா ட்ரீட்?’ பாட்டைத் தூக்கிட்டாங்களாமே?
லாஜிக் – விமரிசனம் இவையெல்லாம் கவலைப் படாமல் படம் எடுங்கள் என்று விஜய் டைரக்டர் ஆர்.டி.நேசனிடம் சொன்னாராம்! அவரும் சின்ஸியராக கில்லி, போக்கிரி, துப்பாக்கி, திருப்பாச்சி,தமிழன் எல்லாவற்றையும் கலந்து காக்டைலாக கொடுத்திருக்கிறார்! கிக் தான் வரவே இல்லை!
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு! ஆனால் சூப்பர் என்றோ குட் என்றோ சொல்லமுடியவில்லை!
