நம்பிக்கை

image

ஒரு காலத்தில் இழந்தேன்  சிறகை
இன்றோ நான் ஒரு  பறக்கும் பறவை
வண்ணக் கதிரின் வருகை 
நெஞ்சில் ஏற்றும் மெருகை

இறைவா எந்தன் கோரிக்கை – அதை
தினமும் கேட்பேன் வாடிக்கை
யானையின் பலம் அது தும்பிக்கை – என்
நெஞ்சில் வளரும் நம்பிக்கை !

வெறுப்பில் வளர்த்தேன் வழக்கை – அதை
நெருப்பில் எறிந்தேன் விறகாய்
இணைந்தன எங்கள் இரு கை
மலர்ந்தது புதிய வாழ்க்கை

இறைவா எந்தன் கோரிக்கை – அதை
தினமும் கேட்பேன் வாடிக்கை
யானையின் பலம் அது தும்பிக்கை – என்
நெஞ்சில் வளரும் நம்பிக்கை !