செருப்பு

 image

மட்ட மத்தியானம் . நாப்பத்து நாலு டிகிரி வெயில் கொளுத்திக்  கொண்டிருந்தது. உழைப்பாளி சிலை கிட்டே வரும் போது  செருப்பு பிஞ்சு போச்சு – இனிமே தையலே போட முடியாத அளவுக்கு! என்ன பிச்சைக்கார பொழப்பு! அவன் மேலேயே அவனுக்கு கோபமாக வந்தது. கால் சூட்டையும் பொருட்படுத்தாமல் கோபத்துடன் பிஞ்ச செருப்பை வீசி எறிந்தான். வறுமை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள  வந்த  அமைச்சர் எச்சில் துப்ப  கார்  ஜன்னலைத் திறக்க அவர் மூஞ்சியில் விழுந்தது அந்த அறுந்த செருப்பு! .

ஊர்க்குருவி 

image

உயர உயரப்   பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியுமா? பருந்தாக முடியா விட்டாலும் அது அட்லீஸ்ட் பறந்தாக வேண்டும். பரந்தாமன் அருள் இருந்தால்  ஊர்க்குருவி பருந்தாகவும் முடியும்.

ஊர்க்குருவி – எக்ஸ்ட்ரா நடிகை

பருந்து – ஹீரோயின்

பரந்தாமன் – தயாரிப்பாளர்

டை – மொட்

image

நாற்பது வயதில் நாராயணனுக்கு தலைமுடி எல்லாம் வெள்ளை. காரணம் திராவிட வைத்தியசாலை கொடுத்த வண்டி மசி. ‘தலைமுடி வெள்ளையானதும் உங்களுக்கு ஆசை கொறைந்திடுச்சுன்னு பொண்டாட்டி சொன்னதும் ஓடிப்போய் ‘இரவோடு இரவா பானர்மேன்  வந்தாற் போல தலைக்கு ‘டை’ அடித்துக் கொண்டு வந்தான். கொஞ்சம் கூட சகிக்கவில்லை. வளர்ப்பு நாய் கூட அவனைப் பார்த்து குரை த்தது. பொண்டாட்டி கட்டிலை தள்ளியே போட்டுட்டா. . வேற வழி! ஏடு  கொண்டலவாடா! கோவிந்தா! கோவிந்தா!

தூக்கம்

image

‘சந்தி காலத்திலே ஏண்டா இப்படி தூங்கறே ? நல்லா சாப்பிட்டுத்தான் தூங்கேன் ‘. -. அம்மா எப்பொழுதும் அடித்துக்கொள்வாள். சாப்பாடு.- சாப்பாடு தான் எப்போதும். சின்ன வயசிலேர்ந்து அவள் அப்படித்தான். தூங்கிற அவனை எழுப்பி பாலு சோறு கொடுத்து தூங்கச்  செய்வாள். காலையில் எழுந்து அவன் முதல் நாள் சாப்பிடவே இல்லை என்று சாதிப்பான்.

இன்னிக்கும் அப்படித்தான். சாயங்காலம் ஆறு மணிக்கே அடிச்சுப் போட்டாப் போல தூங்கறான் . – பெத்த அம்மாவுக்கு கொள்ளி வைத்துவிட்டு!  ஆவியாய் இருக்கும் . அம்மா துடிக்கிறாள் – ‘பையன் இன்னும் சாப்பிடவே இல்லையே!’  என்று!