மாங்காடு காமக்ஷி அம்மனை வேண்டிக் கொண்டு ஆறு முறை ஆறு வாரங்களில் குறிப்பிட்ட தினத்தில் சென்று வணங்கி வந்து ஏழாவது வாரம் காய்ச்சின பாலை பக்தர்களுக்கு கொடுத்து வேண்டுதலை முடித்தால் நினைத்த காரியம் கண்டிப்பாக நடக்கும்.!
முதல் வாரம்

கருணைஎன்ற கண்கொண்டு பார்க்கின்ற தாயே!
காமாட்சி பேர்கொண்ட மாங்காட்டுத் தாயே!
கிள்ளைமொழி பேசிஎன்னை கொள்ளைகொண்ட தாயே!
கீர்த்திபுகழ் ஞானம்எல்லாம் அள்ளித்தந்த தாயே!
குடம்நிறைந்த நீர்போல ததும்பாத தாயே!
கூரைவரை உயர்ந்துநின்று ஒளிர்கின்ற தாயே!
கெண்டைவிழி கொண்டுஎம்மை ஆண்டுவரும் தாயே!
கேழ்வரகு கூழ்போல அரைத்துவிட்ட தாயே!
கைகூப்பி வந்தோரை கைவிடாத தாயே!
கொட்டும்மழை போலவந்து குளிரவைத்த தாயே!
கோலமயில் வேலவனை கொஞ்சுகின்ற தாயே!
கெளரிஉமை பேர்கொண்டு ஆதரிக்கும் தாயே!
க்ருபைவேண்டும் எந்நாளும் காத்திடுவாய் நீயே
அடுத்த வார பாடல்கள் அடுத்த மாத இதழில்களில்!
