அழுகை தானே அழுகை தானே
போகும் போது யாரும் ஒன்றாய் போவதுமில்லை
இருக்கும் வரையில் யாரும் பிரிவை நினைப்பது மில்லை
அழுகைதானே மனிதன் பேசும் ஆரம்ப வார்த்தை-அவன் அடங்கும் போதும் தொடங்கும் வார்த்தை அழுகை தானே ! அழுகை தானே !

இன்பம் யாவும் இரவைப் போல
விடிந்த பின்னால் கலைந்து போகும்
துன்பம் யாவும் நிழலைப் போல
ஓட ஓட கூடத் தொடரும்
சிரிப்பை மனிதன் மறந்து விட்டால்
வாழ்க்கை எல்லாம் அழுகை ஆகும்
துடிக்கும் மனதை அடக்கி வைத்தால்
சொர்க்க புரியின் கதவு திறக்கும் !
ஆசை நெஞ்சில் தீர்ந்து போனால்
அழுகை கண்ணில் மறைந்து போகும்
காசை அள்ளி வீசினாலும்
துயரம் அங்கே தோன்றப் போமோ?
செய்யும் தொழிலை சுத்தமாகச்
செய்யும் மனிதன் தெய்வமாவான் – அவன்
போகும் போது உலகம் முழுதும்
அழுகை தானே ! அழுகை தானே !!
