ராதை – கோதை – சீதை

அவளது செக்கச் சிவந்த விழி
சிங்காரமான விழி !
மண்ணை விழுங்கி வெண்ணைய் திருடி
கோபியர் கொஞ்ச கோலமடிக்கும்
கோவர்த்தன கிரி கொற்றவனைக் காண
ராதை அங்கு வந்தாள்
ராதை அங்கு வந்தாள் – போதை தரும் விழியாள் !
( அவளது )
மண்ணை மிதித்து விண்ணை அளந்து
பொன்னைக் கொடுத்து பெண்ணை மணந்து
கோலங்கள் காட்டும் கோவிந்தனைக் காண
கோதை அங்கு வந்தாள்
கோதை அங்கு வந்தாள் – போதை தரும் விழியாள் !
( அவளது )
கல்லை மிதித்து பெண்ணை விடுத்து
வில்லை முறித்து தன்னை மணந்த
கோதண்ட ராமனைக் காணக்காண வேண்டி
சீதை அங்கு வந்தாள்
சீதை அங்கு வந்தாள் – போதை தரும் விழியாள் !
( அவளது )
