Listen to the ‘POTRI’ song on 108 ammans by Vijayalakshmi Sundararajan and view the temples simultaneously
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்திய
108 அம்மன் கோவில் பயணம்
எழுதியவர்: விஜயலட்சுமி சுந்தரராஜன்
- அதிரூப சுந்தரியே சென்னை காளிகாம்பாளே போற்றி!
- ஆதிவழித் துணையே வண்டலூர் இரணியம்மனே போற்றி!
- இடர்களை நீக்கிடும் பொத்தேரி புவனேஸ்வரியே போற்றி!
- ஈடில்லா வாழ்வு தரும் திருக்கச்சூர் அஞ்சனாக்ஷியே போற்றி!
- உறவுகளைப் போற்றிடும் செங்கல்பட்டு சின்னமுத்துமாரியே போற்றி!
- ஊரார் வணங்கிடும் அச்சரப்பாக்கம் மூங்கிலம்மனே போற்றி!
- எங்கும் நிறைந்த முருங்கப்பாக்கம் திரௌபதி அம்மனே போற்றி!
- ஏக்கங்கள் தீர்த்திடும் பாண்டிச்சேரி பச்சைவாழியம்மனே போற்றி!
- ஐம்புலன் அடக்கிடும் கடலூர் அஞ்சுகிணத்து மாரியம்மனே போற்றி!
- ஒப்பில்லா தேவியே தில்லையின் தில்லைஅம்மனே போற்றி!
- ஓங்கார சக்தியே சிதம்பரம் தில்லை காளியே போற்றி!
- கருணைக்கடலே தில்லை அகிலாண்டேஸ்வரியே போற்றி!
- காருண்ய ரூபியே தில்லை காருண்ய மாரியம்மனே போற்றி!
- கிரிதரன் சோதரியே சிதம்பரம் சிவகாமசுந்தரியே போற்றி!
- கீர்த்தியை அளித்திடும் தில்லை புண்டரீஸ்வரியே போற்றி!
- குவலயம் காத்திடும் சிதம்பரம் மஹா முத்து மாரியே போற்றி!
- கூர்வாள் ஏந்திடும் தில்லை துர்க்கை அம்மனே போற்றி!
- கெட்டதை அழித்திடும் கொள்ளிடம் புலீஸ்வரியே போற்றி!
- கேட்டதைத் தந்திடும் கொள்ளிடம் நாகமுத்துமாரியம்மனே போற்றி!
- கைகளைப் பற்றிடும் சீர்காழி புற்றடியம்மனே போற்றி!
- கொடுமையை அழித்திடும் சீர்காழி சிவகாமசுந்தரியே போற்றி!
- கோடி நன்மை தரும் சீர்காழி பத்ரகாளியம்மனே போற்றி!
- சந்ததி தந்திடும் சீர்காழி கோமளவல்லியே போற்றி!
- சாந்த ஸ்வருபியே சீர்காழி அங்காளபரமேஸ்வரியே போற்றி!
- சிந்தையில் நிறைந்திடும் வைத்தீஸ்வரன்கோவில் தையல் நாயகியே போற்றி!
- சீரான வாழ்வுதரும் வைத்தீஸ்வரன்கோவில் துர்க்கை அம்மனே போற்றி!
- சுடரின் ஒளியே திருநன்றியூர் மாரியம்மனே போற்றி!
- சூரரை வதைத்திடும் மாயவரம் படைவெட்டி மாரியம்மனே போற்றி!
- செருக்கை அழித்திடும் மாயவரம் துர்க்கை அம்மனே போற்றி!
- சேர்ந்தார்க்கு ஞானம் தரும் மாயவரம் ஞானாம்பிகையே போற்றி!
- சொந்தங்கள் சேர்த்திடும் மாயவரம் பிரசன்ன மாரியம்மனே போற்றி!
- சோதனைகள் அகற்றிடும் மாயவரம் சியாமளாதேவியே போற்றி!
- சௌபாக்கியம் தந்திடும் மயிலாடுதுறை அபயாம்பாளே போற்றி!
- தனங்கள் தந்திடும் மாயவரம் பெரிய மாரியம்மனே போற்றி!
- தானாகவே வந்திடும் மயிலாடுதுறை பேச்சாயியம்மனே போற்றி!
- திருமணம் வளம் தரும் திருக்கடையூர் அபிராமியே போற்றி!
- தீயதை அழித்திடும் ஒழுகைமங்கலம் மாரியம்மனே போற்றி!
- துயரினைத் தீர்த்திடும் கீழகாசாக்குடி சீதளாதேவியே போற்றி!
- தூயவர் துதித்திடும் காரைக்கால் ஏழை மாரியம்மனே போற்றி!
- தெய்வமாய் விளங்கிடும் காரைக்கால் அம்மையாரே போற்றி!
- தேயாத வாழ்வு தரும் நாகை நெல்லுக்கடை அம்மனே போற்றி!
- தையலர் வழிபடும் நாகை எல்லைஅம்மனே போற்றி!
- தொல்லைகள் தொலைத்திடும் நாகை மாகாளியம்மனே போற்றி!
- தோல்விகள் நீக்கிடும் நாகை நீலாயதாக்ஷாயணி அம்மனே போற்றி!
- நன்மையைத் தந்திடும் பொரவச்சேரி ஸ்வர்ண காளியே போற்றி!
- நான்மறை போற்றிடும் பொரவச்சேரி மீனாக்ஷி அம்மனே போற்றி!
- நினைத்ததை அருளிடும் பொரவச்சேரி சிங்கார காளியே போற்றி!
- நீண்ட கண்ணுடை சிக்கல் வேல் நெடுங்கண்ணியம்மனே போற்றி!
- நுண்ணிய அறிவு தரும் கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மனே போற்றி!
- நூபுர அழகியே கீழ்வேளூர் சுந்தரகுஜாம்பிகையே போற்றி!
- நெக்குருக வைக்கும் அடியக்காமங்கலம் முத்துமாரியம்மனே போற்றி!
- நேர்வழி காட்டிடும் திருவாரூர் கமலாம்பிகையே போற்றி!
- நொந்தாரை தேற்றிடும் திருவாரூர் ரௌத்ர துர்க்கையே போற்றி!
- நோகாமல் காத்திடும் திருவாரூர் சப்த மாதாக்களே போற்றி!
- பலபல நலம் தரும் திருவாரூர் நீலோத் பாலாம்பிகையே போற்றி!
- பாலருக்கு அருள்தரும் திருவாரூர் காமாக்ஷியம்மனே போற்றி!
- பித்தனின் பத்தினியே காட்டூர் ருத்ரகாளியம்மனே போற்றி!
- பீடைகள் போக்கிடும் காட்டூர் பிடாரியம்மனே போற்றி!
- புலவர்கள் பாடிடும் காட்டூர் மாகாளியம்மனே போற்றி!
- பூவையர் வணங்கிடும் காட்டூர் அபிராமியே போற்றி!
- பெரியவர் போற்றிடும் காட்டூர் பொற்பவள காளியம்மனே போற்றி!
- பேய்மனம் மாற்றிடும் தஞ்சை வாராஹியே போற்றி!
- பொறுமையின் உருவே தஞ்சை பெரியநாயகியே போற்றி!
- போற்றப் படுபவளே தஞ்சை காசி விசாலாட்சியே போற்றி!
- மங்காத புகழுடைய தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷியே போற்றி!
- மாசில்லா மாணிக்கமே தஞ்சை கோடியம்மனே போற்றி!
- மின்னல் கொடியிடையாள் தஞ்சாவூர் ஆனந்தவல்லியே போற்றி!
- மீன்விழியாளே தஞ்சை பாலாம்பிகையே போற்றி!
- முக்காலம் உணர்ந்தவளே தஞ்சை ராகுகால துர்க்கையே போற்றி!
- மூன்று உலகம் ஆள்பவளே தஞ்சை உஜ்ஜயினி மாகாளியே போற்றி!
- மென்மனம் கொண்டவளே தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மனே போற்றி!
- மேன்மை தருபவளே புதுக்கோட்டை புவனேஸ்வரியே போற்றி!
- மோகம் அழிப்பவளே புதுக்கோட்டை தக்ஷிண காளியே போற்றி!
- வஞ்சகரை வெல்பவளே புதுக்கோட்டை அஷ்டதசபுஜாங்ககாளியேபோற்றி!
- வாளினை ஏந்திடும் கானாடுகாத்தான் அய்யனார் காளியே போற்றி!
- விண்ணவர் வணங்கிடும் கானாடுகாத்தான் பொன்னழகியம்மனே போற்றி!
- வீரத்தின் விளைநிலமே கானாடுகாத்தான் பரமனூர் காளியே போற்றி!
- வெல்லமென இனிப்பவளே கோவிலூர் நெல்லை அம்மனே போற்றி!
- வேல்விழியாளே காரைக்குடி கொப்புடை அம்மனே போற்றி!
- யாவரும் போற்றிடும் திருப்பத்தூர் சிவகாமசுந்தரியே போற்றி!
- அன்னையாய் அருளிடும் திருப்பத்தூர் அங்காளபரமேஸ்வரியே போற்றி!
- இன்னல்கள் நீக்கிடும் திருப்பத்தூர் பூமாயி அம்மனே போற்றி!
- உன்னத வாழ்வுதரும் மதுரை மீனாக்ஷி அம்மனே போற்றி!
- என்னுயிர் காத்திடும் மதுரை மதுரவல்லித் தாயே போற்றி!
- கன்னியர் வணங்கிடும் மதுரை காமாக்ஷி அம்மனே போற்றி!
- தன்னிகர் இல்லா மதுரை திரௌபதி அம்மனே போற்றி!
- மன்னரும் பணிந்திடும் மதுரை தெப்பக்குள மாரியம்மனே போற்றி!
- வெண்ணையாய் உருகிடும் திருப்பரங்குன்றம் வெண்ணை காளியே போற்றி!
- எண்ணங்கள் நிறைவேற்றும் திருப்பரங்குன்றம் விஷ்ணு துர்க்கையே போற்றி!
- மண்ணினைக் காத்திடும் உறையூர் வெக்காளி அம்மனே போற்றி!
- அள்ளி அள்ளித் தந்திடும் ஸ்ரீரங்கம் ரெங்கநாயகியே போற்றி!
- உள்ளத்தில் உறைந்திடும் திருவானைக்காவல் மகா மாரியம்மனே போற்றி!
- கோள்களின் நாயகியே திருவானைக்காவல் விஷ்ணு துர்க்கையே போற்றி!
- கள்ளமில்லா மனத்தவளே திருவானைக்காவல் உமா மகேஸ்வரியே போற்றி!
- வெள்ளமென வழிந்திடும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியே போற்றி!
- அமுதத்தைத் தந்திடும் சமயபுரம் ஆதி மாரியம்மனே போற்றி!
- ராகு கால பூஜை ஏற்கும் சமயபுரம் நாககன்னியம்மனே போற்றி!
- பாகுமனம் கொண்டவளே சமயபுரம் பள்ளத்தாளம்மனே போற்றி!
- அசுரரை அழித்திடும் சமயபுரம் உஜ்ஜயினி மாகாளியே போற்றி!
- சமயத்தில் காத்திடும் சமயபுரம் மாரியம்மனே போற்றி!
- ஔஷதம் ஆகிடும் திருப்பட்டூர் பிரம்ம நாயகியே போற்றி!
- கௌரவம் காத்திடும் திருப்பட்டூர் காசி விசாலாட்சியே போற்றி!
- ரௌத்ரம் தணித்திடும் திருப்பட்டூர் ரேணுகா தேவியே போற்றி!
- சௌந்தர்ய ரூபிணியே சிறுவாச்சூர் மதுர காளியம்மனே போற்றி!
- பௌர்ணமி நிலவே திருவக்கரை வடிவாம்பிகையே போற்றி!
- வக்கிரங்கள் போக்கிடும் திருவக்கரை வக்ர காளியம்மனே போற்றி!
- அக்கிரமங்கள் அழித்திடும் திருவக்கரை வைஷ்ணவி முத்தாலம்மனே போற்றி!
- அன்னையே செவ்வண்ணமே மேல்மருவத்தூர் ஆதி பராசக்தியே போற்றி! போற்றி!..
