
அடுத்தவனுக்கு வாச்சதை எண்ணி
அண்ணாத்தே உனக்கேன் கவலை
அவனவனுக்கு இருக்குது பாரு
தலைக்கு மேலே வேலை !
கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாம
காட்டுற வேலை என் வேலை – அட
தின்னு தின்னு தூங்கிக் கிட்டிருந்தா
மண்டையில் எதுக்கு மூளை !
அடுத்த வேளைக்கு சோறில்லாம
தவிக்கிற சனங்க கோடி
கோடி கோடியாய் சொத்தை சேத்தும்
ஆசை போகலியே சேடி !
அடுத்த ஊரிலே தண்ணி இல்லாம
தவிக்கிற சனங்க கோடி
இருக்கிற தண்ணியை பகிர்ந்து கொடுத்தா
இன்பம் பெருகுமே தேடி !
அடுத்த நாட்டிலே உரிமை இல்லாம
வெடிக்கிற சனங்க கோடி
அழிவை நிறுத்தி அமைதிப் படுத்தினா
துன்பம் போகுமே ஓடி !
நம்ம நாட்டையே கொளுத்திப் போடவே
எல்லை தாண்டியே வருவான் – அவன்
பல்லைப் பேத்து விரட்டி அடிச்சிட்டா
தொல்லை இல்லையே போடி !!
