ஜம்மு & காஷ்மீரில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம்!
சென்ற ஆண்டு உத்தர்காண்ட். இப்போது ஸ்ரீநகர். இயற்கையின் சீற்றத்திற்கு அளவே இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் வெள்ளத்தில், நிலச் சரிவில் உயிரை இழந்திருக்கின்றனர்.





இந்த சமயத்தில் பத்திரிகை-TV சானல்களின் முக்கிய கடமை பாதிக்கப் பட்டவரைக் காப்பாற்றுவது தான். இதைச் செய்யவில்லை – அதைச் செய்யவில்லை – மாநில அரசு சரிவர செய்யவில்லை – மத்திய அரசு மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் செயல்படுகிறது என்றெல்லாம் எழுதி / பேசி துயரத்தில் இருக்கும் மக்களுக்கு கோபத்தை உண்டாக்காதீர்கள். உதவிக்கு வருபவர்களை அடிக்கும் அளவிற்கு மக்களைத் துரத்தி விட்டீர்கள்! இது தான் செய்தித் துறையின் தர்மமா?
பாதிக்கப்பட்ட மக்கள் எல்லாம் ஒருவாறு அமைதியானபின் உங்கள் குற்றச்சாட்டுகளை எடுத்துச் சொல்லுங்கள்! தவறு செய்தவர்களைக் கிழி கிழியென்று கிழியுங்கள்! அதுவரை உங்கள் வாயையும் பேனாவையும் மூடிக் கொண்டிருப்பது அனைவருக்கும் நல்லது!
வேதனைப் படும் மக்களின் கண்ணீர் வெள்ளத்தைத் துடைப்பது அனைவரது தலையாய பணி என்று உணர்ந்து செயல் படுவோம்.
படங்கள் உதவி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்
