

No wonder BROOM sweeps! It is meant for sweep!
டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மியின் அமோக வெற்றி அனைத்துப் பிரிவினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இதன் சிறப்புகள் :
- ஊழலுக்கு எதிரான கட்சி வென்றுள்ளது- நல்ல காலம் பிறக்குது..
- எழுபதில் 67 இடங்கள் வெற்றி! உண்மையில் வரலாறு காணாத வெற்றி!
- தேர்தல் ஜோதிடர்கள், கருத்துக் கணிப்புக்கள் அனைத்தையும் (மேலே காண்க) இது பின் தள்ளி விட்டது. .
- பிஜேபியை வெறும் 3 சீட்டுக்குத் தள்ளி- காங்கிரசுக்கு முட்டை கொடுத்து மீதம் 67 ஐயும் எடுத்துக் கொண்டது!
- மோடி அலையைக் கட்டுப் படுத்தியது!
ஆ..ஆ..வின் ஆர்ப்பரிப்புக்குக் காரணம் என்ன?
. உறுதியான வாக்குறுதிகளை வழங்கியது
- டெல்லி தனி மாகாணம்
- எல்லோரும் உட்பட்ட ஜன் லோக் பால் சட்டம்
- 2 லட்சம் கழிப்பறைகள்
- பாதி விலையில் மின்சாரம்
- எல்லோருக்கும் 700 லிட்டர் தண்ணீர்
- சிசிடிவி கேமராக்கள் -பெண்கள் பாதுகாப்பு படை
- 500 பள்ளிகள் , 20 கல்லூரிகள்
- உதவி மையங்கள் டெல்லி முழுவதும் இலவச WIFI வசதி
வெற்றிக்கான மற்ற காரணங்கள்:
- சாதாரண மக்களுடன் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டது ( பத்து ரூபாய் மப்ளர் vs பத்து லட்சம் சூட்)
- திட்டமான பிரசாரம்
- வாக்காளர்களிடம் மன்னிப்புக் கேட்டது (இதுவரை யாரும் செய்யாதது!)
- முஸ்லிம் ஓட்டுக்கள் மொத்தமாக வந்தது
- மற்ற எதிர்க்கட்சிகளும் இவர்களை ஆதரித்தது
- பி ஜே பியை விவாதத்திற்கு அழைத்தது
- கிரண் பேடியை முதல்வராக அறிவிக்க வைத்தது
- ஓட்டுக்குக் காசு கொடுக்காதது
- காங்கிரஸின் படு வீழ்ச்சி
- காங்கிரஸ்-பிஜேபிக்கு ஒரு மாற்று
இனி மோடி,
- ஆகாய விமானத்திலிருந்து தரைக்கு வரவேண்டும்!
- பாலம் விமான நிலையத்திற்குப் போவதற்குப் பதிலாக பாலங்கள் கட்டவேண்டும்!
- மற்ற நாட்டை விட்டு நம் நாட்டைக் கவனிக்க வேண்டும்
இனி காங்கிரஸ்,
- பெருமளவில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்!
இனி ஆ.ஆ.
- செயல்.. செயல்.. இது தான் தாரக மந்திரமாக இருந்து நல்ல மாற்றுக் கட்சியாக மலரவேண்டும்.
நடக்குமா? நடக்கவேண்டும்!
——————————————————————–
ஆண்டு : 2 மாதம் : 2

Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர் :அனுராதா
ஆலோசகர் :அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை : அனன்யா
