குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
எம் எஸ் அவர்களின் அழகான பாடல் – ராஜாஜி அவர்கள் எழுதியது. இந்த அருமையான பாடலை மாற்றிப் பாடுவதற்கு அவர்கள் இருவரும் என்னை மன்னிக்கவும்!

குறை ஒன்றும்இல்லை எனை மணந்த பெண்ணே
குறை ஒன்றும்இல்லை பொன்னே
குறை ஒன்றும்இல்லை கண்ணே
சமைக்கத்
தெரியாமல் விழிக்கின்றாய் பெண்ணே
சமைக்கத்
தெரியாமல் விழித்தாலும் எனக்கு
குறை ஒன்றும்
இல்லை எனை மணந்த பெண்ணே
வேண்டியதைத்
தந்திட சரவணபவன் இங்கிருக்க
சமையல் நமக்கெதுக்கு
எனை மணந்த பெண்ணே
அடி பொன்னே அடி பெண்ணே என்கண்ணே என்கண்ணே
டிவியை எப்போதும் பார்க்கின்றாய் பெண்ணே – உன்னை
சீரியல்விரும்பும்
பெண்களே போற்றுவர்
என்றாலும்
எனக் கொன்றும் குறையில்லை பெண்ணே
சோஃபாவில்
சிலையாக
அமர்ந்துள்ள அழகே
குறை ஒன்றும்
இல்லை எனை மணந்த பெண்ணே
அடி பொன்னே
அடி பெண்ணே என்கண்ணே என்கண்ணே
அழகான துணிமணி வாங்கிடவே வேண்டி
அடிக்கடி
மாலுக்குச் செல்கின்றாய் கிளியே
குறை ஒன்றும்
இல்லை எனை மணந்த பெண்ணே
எதையும்
மறுக்காத உன்புருஷன் நானிருக்க
எதற்கும்
கவலையின்றி மகிழ்கின்ற பெண்ணே நீ
என்றும் சிரித்திட ஏது குறை எனக்கு
ஒன்றும்
குறையில்லை எனை மணந்த பெண்ணே
அடி பொன்னே அடி பெண்ணே என்கண்ணே என்கண்ணே
அந்தப் பாடலுக்குப் பதில் இது:

குறை ஒன்றும்
இல்லை எனை மணந்த கண்ணா
குறை ஒன்றும்
இல்லை கண்ணா
குறை ஒன்றும்
இல்லை கன்னையா
வேலையே உயிரென்று
கிடக்கின்றாய் கண்ணா
வேலையில்
உயிராய்நீ இருந்தாலும் எனக்கு
குறை ஒன்றும்
இல்லை எனை மணந்த கண்ணா
கொள்ளயாய்
வேலைகள் மாமியார் தந்திருக்க
ஆசைகள் எனக்கெதுக்கு
எனை மணந்த கண்ணா
என் மன்னா
என் வண்ணா என் கண்ணா என் கண்ணா
கிரிக்கெட்டை
எப்போதும் பார்க்கின்றாய் கண்ணா – உன்னை
கிரிக்கெட்டை
விரும்பும் மக்களே போற்றுவர்
என்றாலும்
எனக்கொன்றும் குறையில்லை கண்ணா
கல்லாக டிவி முன்
அமர்ந்துள்ள கண்ணா
குறை ஒன்றும்
இல்லை எனை மணந்த கண்ணா
என் மன்னா
என் வண்ணா என் கண்ணா என் கண்ணா
கைபேசி தன்னிலே
நாள்முழுதும் தான்பேசி
குடும்பக்
கவலைகள் மறந்திருக்கும் வண்ணா
குறை ஒன்றும்
இல்லை எனை மணந்த கண்ணா
எதற்குமே
கலங்காத மனைவி நானிருக்க
கொஞ்சமும்
கவலையின்றி இருக்கின்ற கண்ணா நீ
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும்
குறையில்லை எனை மணந்த கண்ணா
என் மன்னா
என் வண்ணா என் கண்ணா என் கண்ணா

பக்கம் – 3
