சங்கர நாராயணன்

இவர் தமிழில் வெளியாகும்
அனைத்து அச்சு இதழ்களிலும் சிறுகதைகள், நாவல்கள்,
குறுநாவல்கள்,
கவிதைகள்
என்று நிறைய எழுதியிருக்கிறார்.
இவர் எழுதிய நூல்களில் “நீர்வலை”
எனும்
நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த
நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
இவர் கணையாழியில் எழுதியவை
மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றன. அவரது
வார்த்தைகளிலேயே
எனக்குப்
பின்னால் இரு ஆச்சர்யமான அடையாளங்கள் எப்படியோ ஒட்டிக்கொண்டன. ஒன்று கணையாழி
எழுத்தாளன் என்பது. நான் கணையாழியில் குறைவாகவே எழுதியிருக்கிறேன். எழுத வந்த
சூட்டோடு பெருஞ்சுற்று இதழ்களில் பவனி வந்து கொண்டிருந்த போதுகளில்,
நண்பர்களின் ஆலோசனை மற்றும் வேண்டுகோளின் பேரில்,
சரியான முடிவுதானா என்ற சம்சயத்துடன்,
எனக்கு ஓர் இலக்கிய முத்திரை கிடைக்க வேண்டும் என அவர்கள்
எதிர்ப்பார்ப்பின்படி, கணையாழியில்
என் முதல் கதை ’மறதி’
எழுதினேன். திலீப்குமார் பார்வையில் அது பாராட்டுப்
பெற்றது. இலக்கியச் சிந்தனை அமைப்பின் ’சிறந்த
மாதக்கதை’ எனப்
பரிசு பெற்றது. அந்தக் கதையைப் படித்து இயக்குநர் பாலசந்தர் என்னிடம் நட்பு
கொண்டார்.. தான் தயாரித்த ஒரு குமுதம் இதழில்
சிறப்புச் சிறுகதை வாய்ப்பும் தந்தார் சிகரம். சிநேகி தர்கள் வாழ்க. கணையாழிக்கு
நன்றி.
இவரது கதைக்களங்களும் கதை
மாந்தர்களும் நாம் எப்போதோ எங்கேயோ பார்த்தவர்களாகத் தோன்றும். சொல்லாடல்கள் நறுக்.
உதரணமாக
வெளி
உபயோகத்திற்காக ஒரு சைக்கிள் வாங்கினார். வீடு உபயோகத்திற்காக கல்யாணம்
பண்ணிக்கொண்டார்.
பொதுவாக
அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளை மெச்சிக்
கொள்வதில்லை. கணக்கில் 98 வணங்கினால் கூட ’இன்னும்
இரண்டு மார்க் என்ன ஆச்சு சனியனே’ என்று
கத்துகிறார்கள்
வீட்டோடு இருந்து
வேலைசெய்யும் சிறுமி ‘குட்டி’யின்
பார்வையில் சொல்லப்படும் வம்சம் என்னும் கதை இப்படிப்போகிறது.

அவள் வேலைபார்க்கும் வீட்டில்
தேவகி அக்கா, நடராஜன் அண்ணா, அப்பா அம்மா மற்றும் தாத்தா.
தேவகி அக்காவை பெண்பார்க்க
வருகிறார்கள். அதற்காக கேசரி, பஜ்ஜி, காப்பி எல்லாம் தயார் செய்கிறாள். இன்னும் தோய்த்த துணிகளை
காயப்போடவேண்டும். விருந்தினர் வரவிருப்பதால் குட்டியையும் உடை மாற்றிக்கொள்ளச்
சொல்கிறார்கள் போன வருடம் தீபாவளிக்கு இவர்கள்
எடுத்துக் கொடுத்த சின்னாளப்பட்டி பாவாடையும் அதற்கு மாட்சாக பிளவுசும்.
அந்த உடைகளைப் பார்த்து அவள்
தங்கை கோகிலா
‘ஏய். நா ஒரே ஒரு தடவை போட்டுப்.. " என்று கேட்டு முடிவதற்குள் ‘முடியாது’ என்று பதிலளித்ததும் ’ இந்த
தீபாவளிக்கு எனக்கு ஒன்னுமே எடுக்கலை’ என்று கோகிலா சொன்ன தும் நினைவுக்கு வருகிறது.
மேலும் ஒவ்வொரு முறையும்
அம்மா வந்தால், இவளது உடைகளை ஊருக்கு கொண்டு போய்விடுவாள். மறுத்துச் சொல்ல முடியாமல் வெறுமனே
பார்த்துக்கொண்டு இருக்கத்தான் முடிகிறது. ஒரு உபாயமும் செய்கிறாள்.
“தேவகி
அக்கா, நீங்க தப்பா நெனச்சிக்காட்டி …’
"என்னடி
சொல்லு”
“இந்த
ட்ரஸ்ஸ ஒங்க பீரோல வெச்சிக்கிங்க நா அப்பறமா வாங்கிக்கிறேன்”
“ஏன்
ஓம் பெட்டில எடம் இல்லியா?”
“இல்ல..
அம்மா வராங்க இன்னிக்கு..”
பெண்பார்க்க
வருகிறார்கள் அப்போது தாத்தா எழுந்திருக்க
முயலுகையில் எல்லோரும் ஒரே குரலில் “நீங்க உக்காருங்கோ” என்கிறார்கள்.
அப்போது தாத்தாவிற்கு
மாத்திரை கொடுக்க வேண்டும் என்று நினைவு படுத்துகிறாள் குட்டி.
எல்லாம் அப்பறம்
பாத்துக்கலாம் என்கிறாள் தேவகியின் அம்மா.
“இல்லம்மா.. நேரத்திற்கு…” என்று சொல்லும் குட்டியை “எல்லாம்
எனக்குத் தெரியும்” என்று அடக்குகிறாள் தேவகியின் அம்மா.
பெண்பார்க்கும் படலம்
நடைபெறுகிறது. பாட்டு .. பேச்சுகள் எல்லாம்.
காப்பி ட்ரேயுடன் வரும்
தேவகியின் மீது குட்டி மோதிவிட குட்டியின்
உடையெல்லாம் காப்பிக்கரை. அவளிடம்
இருந்த ஒரே நல்ல உடை.
பின்னாலிருந்து
அம்மாவின் குரல் கோபத்தில் வெடித்தது
“சனியன்னா
இது? காப்பியப் பூரா கொட்டிடுத்து பார் .. ஏண்டி அறிவில்லை உனக்கு என்று விறுவிறு
என்று குட்டி தலையில் குட்டினாள் .
"பரவாயில்ல,
ஐய .. குழந்தையைப் போயி…” என்கிறார் மாப்பிள்ளையின் அப்பா.
“குழந்தையா?
வயசு எட்டாவுது. இங்க வந்து ஒரு வருஷமா இப்படித்தான் வேலை செய்யறா, கொட்டினேன் கவுத்தினேன்னு ..”
“சனியனத்
தொரத்தி தலை முழுகணும்மா” என்றான்
நடராஜன்.
“விடுங்க
குழந்தயைப் போயி ..” என்றான் மாப்பிள்ளை
குட்டி
துணிகளுடன் மாடிக்குப் போகிறாள்.
மாப்பிள்ளைக்கு ரஸ்னா
கொடுக்க வேண்டும் தேவகி “ரஸ்னா
எப்படிக் கலக்கணும்” என்று
ரகசியமாக அம்மாவிடம் கேட்கிறாள்.
“ஏன்.. குட்டி இல்லியா?”
“மாடிக்குப்
போனா”
“இப்ப
எதுக்கு மாடிக்குப் போனா? வரட்டும், அதுக்கு ரொம்பத் திமிராப் போச்சு.. நீ இப்படி
வா, நா கலக்கிறேன்”
பெண்பார்க்கும் பார்ட்டி விடை
பெறுகிறது. அவர்கள் போனதும் அம்மா ‘குட்டீ’ என்று கத்தினாள். கீழிறங்கி
வருகிறாள் குட்டி.
“ஏண்டி அழுதியா?” என்கிறார் தாத்தா.
“இருந்தாலும்
எல்லார் மின்னாடியும் இப்டி அவள திட்டலாமா?” என்றார் அப்பா அம்மாவிடம்.
குப்பென்று
பொங்கிய அழுகையை உதட்டைக் கடித்துக்கொண்டு
அடக்கி “நா கொட்டலம்மா” என்றாள் குட்டி.
“தெரியும்..
” என்றாள் அம்மா.
வரன் கூடி வருவதில்
எல்லோருக்கும் மகிழ்ச்சி. கேஸரியையும் பஜ்ஜியையும் பங்கிட்டு சாப்பிடுகிறார்கள்.
“பெண்ணே
நம்ம வீட்ல சமையலுக்கு ஒரு அட்சரம் கூடத் தெரியாம வண்டிய ஓட்டிப் பிட்டே . இனி
சமையல் கத்துக்கணும்”
“போம்மா,
நா சமையல்லா பண்ணமாட்டேன்..”
“அப்ப
பூவாக்கு என்ன பண்றது பெண்ணே?”
“எதாவது
வேலைக்காரிய அமத்திக்க வேண்டிதான்”
“க்கும்,
நீ நெனச்ச ஒடனே அமஞ்சிருவாளா? சின்ன
வயசுப் பெண்ணா, சுறுசுறுப்பா, திருட்டுப் புத்தி இல்லாத பொண்ணாக் கெடைக்கணும்..
கிடைக்குமா?”
“எந்தங்கச்சி
கோகிலா இருக்கா!” என்றாள் குட்டி
எதிர்பார்ப்புடன்.
அந்தக் கடைசி வாக்கியம் தான் கதைத் தலைப்பை
உணர்த்துகிறது.
இவரது கதைகள், கவிதைகள்
மற்றும் கட்டுரைகள் ஞானக்கோமாளி
வலைப்பூவில் படிக்கலாம்.
