
1928ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி கேரள மாநிலம், பாலக்காட்டில் பிறந்தவர் எம்.எஸ்.வி., இவரது முழுப்பெயர் மனையங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன். இதை தான் இவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று சுருக்கிக் கொண்டார்.
13வயதில் மேடை சங்கீதம்
சிறு வயதிலேயே தந்தையை இழந்து மிகவும் கஷ்டப்பட்ட எம்.எஸ்.வி., நீலகண்ட பாகவதரிடம் முறைப்படி சங்கீதம் கற்றார். தனது 13வது வயதில் மேடையில் முதல் கச்சேரி செய்தார். எம்.எஸ்.விக்கு சினிமாவில் ஒரு பாடகராகவும், நடிகராகவும் தான் வர ஆசை. அதன்காரணமாக ஆரம்பகாலத்தில் நாடகங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கவும் செய்தார்.
டி.கே.ராமமூர்த்தியின் நட்பு
இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மூலம், எஸ்.வி. வெங்கட்ராமனிடம் அறிமுகப்படுத்தப்பட்டு பணி அமர்த்தப்பட்டார். அதன்பின்னர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சி.ஆர்.சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார். இந்த காலக்கட்டத்தில் வயலின் இசை கலைஞரான டி.கே.ராமமூர்த்தியின் நட்பு கிடைத்தது. எதிர்பாராதவிதமாக 1952-ல் ‘சி.ஆர்.சுப்பாராமன் இறக்க நேரிட, அவர் பணியாற்றி வந்த தேவதாஸ், சண்டிராணி, மருமகள் போன்ற படங்களுக்குப் பின்னணி இசையமைப்பாளர்களாக இந்த இரட்டையர்கள் தொடர்ந்தனர்.
இவர்களின் திறமையை அறிந்த என்.எஸ்.கிருஷ்ணன், தனது சொந்தப் படமான ”பணம்” படத்திற்கு இவர்களை
விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்ற பெயரில் இசையமைப்பாளர்களாக அறிமுகம் செய்தார்.
1952ம் ஆண்டு பணம் படத்தில் துவங்கிய இந்த இரட்டையர்களின் வெற்றிக் கூட்டணி 1965ம் ஆண்டு வரை தொடர்ந்தது. இருவரும் சேர்ந்து இந்த 13 ஆண்டுகளில், 100 படங்களுக்கு மேல் இசையமைத்தனர். ”ஆயிரத்தில் ஒருவன்” படத்திற்குப் பின்னர் இருவரும் தனித்தனியாக இசையமைக்கத் தொடங்கினர்.
விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து 700 படங்களுக்கும், இவர் தனியாக, 500 படங்கள் என, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என, 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். 1951 முதல் 1981 வரை, 30 ஆண்டுகள், தமிழகத்தில், அவரது இசை ராஜ்யம் தான் நடந்தது.
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து சில படங்கள் பணியாற்றியுள்ளார்.
எம்.எஸ்.வி. ,டி.எம்.எஸ், பி.பி.எஸ், சுசிலா,ஜானகி எஸ்.பி.பி.,சிவாஜி , எம்.ஜி.ஆர்.என மூன்றெழுத்து சாதனையாளர்கள் 80கள் வரையும் சிலர் அதையும் தாண்டியும் தமிழ் திரையுலகைக் கையில் வைத்திருந்தனர்.
நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு… உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
ஏ.எஸ்.ஏ.சாமி, டி.பிரகாஷ் ராவ், கிருஷ்ணன் பஞ்சு, பி.ஆர்.பந்தலு, ஏ.பி.நாகராஜன், ஏ.பீம்சிங், பா.நீலகண்டன், ஸ்ரீதர், ராமண்ணா, ஏ.சி.திரிலோகசந்தர், முக்தா சீனிவாசன், கே.சங்கர், பி.மாதவன், கே.பாலசந்தர், கே.எஸ்.கோபால கிருஷ்ணன், கே.பாக்யராஜ், விசு, எஸ்.ஏ.சந்திரசேகர் போன்ற ஜாம்பவான் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கண்ணதாசன் – எம்.எஸ்.வி., கூட்டணியில் உருவான பாடல்கள்!அனைத்தும் காலத்தால் அழியாத காவியப் பாடல்களாக இன்றும் திகழ்கின்றன. விஸ்வநாதனோ, கண்ணதாசனின் பெரும்பாலான பாடல் வரிகளை அப்படியே தன் மெட்டிற்குள் புகுத்தி, சொல்ல வந்த கருத்தை கவித்துவம் மாறாமல் தன் இசை கோர்ப்பால் அழகு சேர்த்தவர் .


இவர்களது கூட்டணியில் உருவான நூற்றுக் கணக்கான பாடல்களில் சில முக்கியமான பாடல்களும், படங்களும்…!. (இணைய தLளம் நண்பர் கருத்துப்படி )
மாலைப் பொழுதின் மயக்கத்திலே – பாக்யலக்ஷ்மி
உள்ளத்தில் நல்ல உள்ளம்… – கர்ணன்
மயக்கமா கலக்கமா… – சுமைதாங்கி
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்… – சுமைதாங்கி
வாழ நினைத்தால் வாழலாம்… – பலே பாண்டியா
நாளாம் நாளாம் திருநாளாம்… – காதலிக்க நேரமில்லை
அவள் ஒரு நவரச நாடகம்… – உலகம் சுற்றும் வாலிபன்
அன்பு நடமாடும் கலைக்கூடமே… – அவன் தான் மனிதன்
அத்தான் என்னத்தான்… – பாவ மன்னிப்பு
தெய்வம் தந்த வீடு – அவள் ஒரு தொடர்கதை
ஆறு மனமே ஆறு… – ஆண்டவன் கட்டளை
மலர்ந்து மலராத… – பாசமலர்
சிலர் சிரிப்பார் – பாவ மன்னிப்பு
யார் அந்த நிலவு… – சாந்தி
உலகம் பிறந்தது எனக்காக… – பாசம்
என்னருகே நீயிருந்தால்… – திருடாதே
நாளை முதல் குடிக்கமாட்டேன்… – நீதி
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா… – பறக்கும் பாவை
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே… ஆலயமணி
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்… – நெஞ்சில் ஓர் ஆலயம்
உள்ளம் என்பது ஆமை… – பார்த்தால் பசி தீரும்
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் – வீரத்திருமகன்
நெஞ்சம் மறப்பதில்லை… – நெஞ்சம் மறப்பதில்லை
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் – போலீஸ்காரன் மகள்
அவள் பறந்து போனாளே… – பார் மகளே பார்
அச்சமென்பது மடமையடா.. – மன்னாதி மன்னன்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்… – கறுப்பு பணம்
அண்ணன் என்னடா தம்பி என்னடா… – பழனி
கண்ணன் எனும் மன்னன் பேரை… – வெண்ணிறாடை
நிலவே என்னிடம் நெருங்காதே… – ராமு
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது… – சூர்யகாந்தி
கண்ணே கலைமானே – மூன்றாம் பிறை

கவிஞர் வாலியுடன் ஏராளமான படங்களில் பணியாற்றியுள்ளார் எம்.எஸ்.வி. இவர்களது கூட்டணியில் உருவான சில முக்கியமான பாடல்கள்…
(எம் ஜி ஆர் , வாலி, எம் எஸ் வி ,டி எம் எஸ் அவர்கள் கூட்டணியில் அமைந்த பாடல்கள் தி மு க விற்கு ஆட்சியைப் பிடித்துத் தந்தது என்றால் மிகையில்லை )
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ… – சந்திரோதயம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்… – அன்பே வா
கண்போன போக்கிலே கால் போகலாமா… – பணம் படைத்தவன்
தரை மேல் பிறக்க வைத்தான்… – படகோட்டி
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்… – படகோட்டி
காற்று வாங்க போனேன்… – கலங்கரை விளக்கம்
ஓடும் மேகங்களே . – ஆயிரத்தில் ஒருவன்
மன்னவனே அழலாமா… – கற்பகம்
நாளை இந்த வேளை பார்த்து… – உயர்ந்த மனிதன்
மெல்லப்போ மெல்லப்போ… ௦- காவல்காரன்
ஆண்டவனே உன் பாதங்களில்… – ஔிவிளக்கு
வண்ணக்கிளி சொன்ன மொழி…. – தெய்வத்தாய்
நான் அனுப்புவது கடிதம் அல்ல… – பேசும் தெய்வம்
அங்கே சிரிப்பவர்கள்… – ரிக்ஷாகாரன்
சொல்லத்தான் நினைக்கிறேன்… – சொல்லத்தான் நினைக்கிறேன்
நிலவு ஒரு பெண்ணாகி… – உலகம் சுற்றும் வாலிபன்
ஒரு தாய் வயிற்றில்… – உரிமைக்குரல்
மல்லிகை முல்லை பூப்பந்தல்… – அன்பே ஆருயிரே
ஒன்றும் அறியாத பெண்ணோ… – இதயக்கனி
நினைத்ததை நடத்தியே முடிப்பவன்… நம் நாடு
கண்ணன் எந்தன் காதலன்… – ஒரு தாய் மக்கள்
நான் அளவோடு ரசிப்பவன்… – எங்கள் தங்கம்
வெற்றி மீது வெற்றி… – தேடி வந்த மாப்பிள்ளை
மாதவி பொன் மயிலால்… – இரு மலர்கள்
நான் ஆணையிட்டால்… – எங்க வீட்டுப் பிள்ளை
பொங்கும் கடலோசை… – மீனவ நண்பன்
இதோ எந்தன் தெய்வம்… – பாபு.
நன்றி: இணையதளம்
பக்கம் ……………………………..15
