முகத்தை
மறைக்குதோ முகநூல்?

மரத்தை மறைத்தது
மாமத யானை
முகத்தை மறைத்தது
கணிணியின் முகநூல்
மரம் என்று
பார்த்தால் யானை அங்கு இல்லை
யானை என்று
பார்த்தால் மரம் அங்கு இல்லை
அது சிற்பச்
சிறப்பு
முகநூல்
என்று பார்த்தால் முகம் அங்கு இல்லை
முகம் என்று
பார்த்தால் முகநூல் தேவையில்லை
இது
செயற்கைச் சிரிப்பு
அன்றைய
நட்பு வளாகத்தில்,
ஆற்றங்கரையில்
கடல்வெளியில் மணற்பரப்பில்
தோட்டத்தில்
வயல் வெளியில் திண்ணையில் கட்டாந்தரையில்
ஆற அமர்ந்து
அசைபோட்டு உலகை எடைபோட்டு
தோளில்
கைபோட்டு ஒரு தட்டில் சோ றுண்டு
கைகோர்த்து
முகம்பார்த்து கண் பார்த்து மனம் தொட்டு
சிரித்து
ரசித்து அடித்து அழுது கோபித்து வருந்தி
கூச்சலிட்டு
கும்மாளமிட்டு ஆடிப்பாடிக்குதித்து
மனம்விட்டுப்
பேசி துயரத்தைத் தோளில் வாங்கி
கைவிரலால்
கண்துடைத்து மகிழ்ந்த முக நக நட்பு எங்கேடா?
கணினி
முன் கைகட்டி வாய்பொத்தி சொடக்குப் போட்டு
நாலைந்து
வரிகளில் ஏதோ கிறுக்கி ஸ்டேட்டஸ் போட்டு
பிடித்ததோ
பிடிக்கவில்லையோ லைக்கைப் போட்டு
மற்றவர் துப்பிய எச்சிலை அமிர்தம் என்று கருத்து விட்டு
ஷேர் என்ற பெயரில் அந்த சேற்றை தெளித்துவிட்டு
இது தான் முகநூல்
நட்பு என்று சொல்லித்திரியும் மானிடா!
தெரிந்துகொள்
மரத்தை மறைத்தது
மாமத யானை
முகத்தை மறைத்தது
கணிணியின் முகநூல்
அன்றைய
காதல்
நிலவொளியில்
தோட்டத்தில் வீட்டில் பஸ்ஸில்
படிக்கட்டில்
மொட்டைமாடியில் தோப்பில் சைக்கிளில்
நிமிடத்தில்
மறைந்துவிடும் முகத்தைக் காண
மணிக்கணக்கில்
நாள் கணக்கில் காத்திருக்கும் விழிகள்
பாராதிருந்து
பார்க்கத்துடித்து இமைக்க மறந்து
ஏங்கித்
தவித்து கண்ணம்பு பட்டு துள்ளிக்
குதித்து
அருகில்
சென்று பேசத்துடித்து பேசாமல் இருந்து
விரலின் நுனியைத் தொடத் துணிந்து தொடாமல் தவித்து
நிலம்
நோக்கி வான் நோக்கி கால் நோக்கி
இடை நோக்கி
உடைநோக்கி நடை நோக்கி
இலை
நோக்கி கனி நோக்கி இதழ் நோக்கி
முகம்
நோக்கி முறுவல் நோக்கி கண் நோக்கி
காந்தமென
செம்புல நீரென பஞ்சில் தீயென
கண்ணும் கண்ணும் நெஞ்சமும் நெஞ்சமும்
மெய்யும்
மெய்யும் கலந்தொருமித்து
கவிதைபாடும்
காதலன் காதலி எங்கேடி?
முகவரியில்லா
முகநூலின் மயங்கிக் கிடக்குது இளநெஞ்சம்
காற்றே
இல்லா சுடுமணலில் கொதித்துக் கிடக்குது நம் நெஞ்சம்
சமூக
வலையென்றும் நீண்ட கரமென்றும்
நட்பின்
பரிமாணம் என்றும் உணர்வின் வடிகால் என்றும்
உறவின்
துவக்கம் என்றும் உரிமையின் அழைப்பு என்றும்
நச்சுப்
பூச்சுக் கொடுப்பர் முகநூலுக்கு !

முகநூல் ஒரு
சிலந்தி வலை மாய வலை
வேடன்
விரித்த வலை மீனவர் தெறித்த வலை
கண்ணையும்
கருத்தையும் கவரும் காந்த வலை
ஆசை
என்னும் கடலில் விரித்த மோக வலை
வேட்
கை என்னும் விளியில் பரந்த காமவலை
மனதைப்
பிடிக்கும் கூண்டு கணினி விரித்த கண்ணி
ஸ்டேட்டஸ்
போட்டு லைக்குக்காக ஏங்கவைக்கும் போதை வலை
ஏக்கம்
கோபம் தாபம் ஆவல் ஆதங்கம் தவிப்பு என்று
வெறுமைத்
திரையில் வெறுப்பைக் காட்டும் அடிமைத் தளை முகநூல் வலை !
அதில்,
மயங்கி
விழும் ஈக்கள் நாம்
கூண்டில்
சிக்கும் சிங்கம் நாம்
கூட்டமாய்
மாட்டும் பறவை நாம்
கும்பலாய்
தவிக்கும் மீன்கள் நாம்
மரத்தை மறைத்தது
மாமத யானை
முகத்தை மறைத்தது
கணிணியின் முகநூல்
கணினி
என்னும் கண்ணாடிப் பேழையில் சொல்லும்பு வீசும் வீரனே!
நிழலை
நிஜமென எண்ணி மாய்ந்து ஏமாந்து போகும் மானிடப் பதரே!
முகத்தை
மூடிக்கொண்டு கிணற்றில் வீழ்ந்து மாளும் மூடனே !
பொழுதை
வீணாக்கி முகநூலில் சிக்கித் தவிக்கும் வீணனே !
கிழித்தெறி
இந்த போலி முகமூடியை!
முக்காட்டை
நீக்கிவிட்டு மலர்ந்த முகத்துடன் வா !
வெளியே வா! வாசலுக்கு
வா! இலக்கிய வாசலுக்கு வா !
வெளிச்சத்தைப்
பார்! செவி மடு! வாசத்தை சுவாசி!
காதலி
கனிமுகத்தில் காதலன் நறு முகத்தில்
தாயின் தயை
முகத்தில் தந்தையின் பெரு முகத்தில்
உற்றார்
உறவினர் சுற்றார் நண்பர் மற்றோர் அனையோர்
முகத்திலும்
முகம் பார்ப்போம்
முகத்தை
மறைத்தது முகநூல் ! அதை அறுத்து எறிந்து வருவோம்!
ஜகத்தை
மயக்கிடும் முறுவல் ! அதை முகத்தில் பதித்து வருவோம்!
பக்கம் ………………………………22
