
சுப்பு இந்த ஸ்டாக் மார்க்கெட் இப்போ கன்னா பின்னான்னு
இருக்கே. உனக்கு நஷ்டம் ஆயிருக்குமில்லே?
ஹா ..ஹா . கண்ணா ! எனக்கு நஷ்டம் எதுவும் இல்லே. சொல்லப் போனா
இந்த மாதிரி ஷேர் விலை எல்லாம் கம்மியானா எனக்கு சந்தோஷம் தான்.
என்ன ரஜினி மாதிரி சொல்லறே?
ஆமாம் . விலை கொறஞ்சுதுன்னா நமக்குப் பிடிச்ச கம்பெனி
ஷேரை சந்தோஷமா வாங்கலாம் இல்லையா?
அது சரி! நீ முன்னாடி வாங்கின ஷேர் விலை இப்ப கம்மியா யிருக்குமில்லே??
கண்டிப்பா! வேல்யூ இன்வெஸ்டிங்கிலே நாம ஒரு கம்பெனியோட
ஷேரின் மதிப்பு என்னன்னு தெரிஞ்சுகிட்டுத் தான் வாங்கறோம். டிஸ்கவுண்ட் நிறைய கிடைச்சா
கசக்குமா என்ன?
ஸோ , உனக்கு நஷ்டமானாலும் கவலையில்லை அப்படித்தானே?
ஷேர்களை விற்றால் தானே நஷ்டம். நல்ல கம்பெனியோட ஷேரை நாம வாங்கின விலையை விடக்
கம்மியா கிடைச்சுதுன்னா இன்னும் கொஞ்சம் வாங்கணும் . இதைத் தான் சராசரியில சமப்படுத்தரதுன்னு
சொல்லுவாங்க.
அப்படின்னா இந்த தடவை நீ நிறைய ஷேர் வாங்கினேன்னு சொல்லு.
ஆமாம்
அப்புறம் இன்னொரு சமாசாரம் கேட்கணும்னு நினைச்சேன் மறந்து போச்சு.
உன் அக்கா பையன் மஹேஷ் சமாசாரம் தானே?
கரெக்டா சொன்னே. நீ எப்படி சரியா ஞாபகம் வைச்சிருக்கே?
மல்டி டாஸ்க்கிங் அப்படின்னு சொல்லிக்கிட்டு ஒரே சமயத்தில பல வேலை செஞ்சா இப்படி
முக்கியமானதெல்லாம் மறந்து போகும்.
என் ஆபீஸ் வேலைக்கு மல்டி டாஸ்க்கிங் ரொம்ப முக்கியம் தெரியுமா?
வேல்யூ இன்வெஸ்டிங்கிலே ஒரு முக்கியமான அடிப்படை – கவனமான
கூர்மையான முதலீடு. அதாவது நூறு கம்பெனியோட ஷேரை வாங்காம பத்து கம்பெனியில கவனமா இருந்து
அதோட ஷேரை மட்டும் வாங்கறது.
நம்ம வாரன் பஃப்பெட் மாதிரியா?
சரியா சொன்னே! பத்து கம்பெனியோட ஷேரை வாங்கும் போது நாம
அவற்றைப் பற்றி நல்லா ஆராய்ச்சி பண்ணலாம். அதுமட்டுமில்லாமல் அதையெல்லாம் நல்லா ஞாபகம்
வைச்சுக்கலாம்.
சரி தான்.
சரி, உன் அக்கா பையன் மஹேஷ் சமாச்சாரத்துக்கு
வருவோம். அவனுக்கு ஷேரில முதலீடு செய்ய ஆசை. ஆனா இன்னும் ரெண்டு வருஷத்தில அவனுக்குக்
காலேஜ் போகிற பசங்க இருக்காங்க. அதுக்கு ரொம்ப செலவாகும். அதனாலே இந்த தடவை அவனை இருக்கிற
காசை ஸ்டாக் மார்க்கெட்டில போட வேண்டாம்னு சொல்லு. அதுக்குப் பதிலா பேங்கில பிக்ஸட்
டெபாசிட் போடச் சொல்லு. ஏன்னா ஸ்டாக் மார்க்கெட் ரொம்ப ஏத்த இறக்கமா இருக்கும்.
இப்படி சொல்லுவேன்னு நான் நினைக்கவே இல்லை. ஏதோ நாலு நல்ல
கம்பெனி சொல்லுவே அதிலே போட்டா ரெண்டு வருஷத்தில நல்ல காசு வரும்னு நினைச்சேன்.
ஸ்டாக்கில போடற பணம் எப்போதுமே உபரி வருமானமாத் தான் இருக்கணும். ஏன்னா ஷேர் விலை எப்போ அதிகமாகும் குறையுமுன்னு சொல்ல முடியாது. இதைப் பத்தி பெஞ்சமின் கிரஹாம்
நிறைய சொல்லியிருக்கார். அவரோட ஒரு கதையை சொல்றேன் கேளு
சொல்லு
சும்மா கற்பனையா மிஸ்டர். மார்க்கெட் அப்படிங்கிறவரோட
பார்ட்னர்ஷிப் போட்டு நீ ஒரு கம்பெனி ஆரம்பிக்கறேன்னு வைச்சுக்கோ.
ஓகே.
அவர் ஒரு மாதிரியான பேர்வழி. அவர் மனசு – மூட் எப்போவும்
ஒரே மாதிரி இருக்காது. சில நாளைக்கு ஜாலியா இருப்பாரு. சில நாளைக்குக் கோபத்தில இருப்பாரு.
அவர் மூடைப் பொறுத்து தான் அவரோட ஷேரை உனக்கு விக்கப் பார்ப்பாரு. கடுப்பாய் இருந்தார்னா
அவர் ஷேரை உனக்கு கம்மியான விலைக்கு விற்பார். குஷியா இருந்தார்னா அதே ஷேருக்கு நிறைய விலை கேட்பார்.
அப்ப நான் மார்க்கெட் இல்லையா?
இல்லே. பொறு! கதை இன்னும் முடியலே. அவரோட மூட் இப்படி
தினமும் ஏன் நிமிஷத்துக்கு நிமிஷம் மாறிக்கிட்டே தான் இருக்கும். ஆனா உங்க கம்பெனி பிசினஸ்ல வர்ற லாபத்துக்கும்
அவரோட மூடுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லே.
ஓஹோ! வியாபாரம் நல்லா போய்க்கிட்டிருந்தா கூட இவர் மூட்
மோசமாயிருந்தா கம்மியான விலைக்கு விற்பாரா என்ன?
ஆமாம் ! அவர் தான் மிஸ்டர். மார்க்கெட். பிஸினஸ் நல்லா நடக்குதுன்னு
உங்க ரெண்டு பேருக்கும் தெரியும். ஆனாலும் அவர் ஏதோ கெட்ட மூடில இருந்தார்னா டபக்குன்னு
கம்மியான விலைக்கு வித்துடுவாரு .
மிஸ்டர் மார்கெட்டும் ஷேர் மார்கெட்டும் ஒண்ணுன்னு சொல்லரயா?
கண்டிப்பா! மோடி
பிரதமர் ஆனதும் உடனே ஷேர் விலை எல்லாம் ஏறிச்சே
ஞாபகம் இருக்கா?
ஆமாம். அவர் அச்சா
தின் வருதுன்னு சொன்னார்.
அச்சா தின் வரும். ஆனால் ஒரு நாளிலே வராது. போன வருசத்தில
இதே சமயம் எல்லாரும் ஷேரைக் கன்னா பின்னான்னு வாங்கிக்கிட்டிருந்தாங்க. இப்போ திடீர்னு
எல்லாரும் வித்துக்கிட்டிருக்காங்க. சொல்லப் போனா போன வருஷத்தை விட இந்த வருஷம் கம்பெனிகளோட
லாபமெல்லாம் அதிகமாயிருக்கு.
மிஸ்டர் மார்க்கெட்டைப் பத்தி இப்போ தான் கொஞ்சம் புரியுது.
அப்போ மத்த சமாசாரம்
எல்லாம் அடுத்த மாசம் பாப்போம்.
சின்ன சபலம்! இப்போ நீ என்னென்ன கம்பெனி ஷேர் வாங்கியிருக்கேன்னு
நான் தெரிஞ்சுக்கலாமா?
உனக்கு சொல்லாம என்ன. ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட், என்எம்டிசி , இரண்டும் வாங்கியிருக்கேன்.
தாங்க்யூப்பா!
பக்கம் ………………………. 18
