
அப்பா தன் மகனிடம் சொல்லும் வார்த்தைகள் இவை:
உனக்கு ஒண்ணும் தெரியாது
முடியலைன்னா சும்மா இருக்க வேண்டியது தானே!
ரோட்ட கிராஸ் பண்றப்போ எத்தனை தடவை சொல்லியிருக்கேன் என்னைப் பிடிச்சுக்.கோன்னு.
நாங்க பேசிக்கிட்டிருக்கும் போது குறுக்கே பேசாதே.
பொறுமையா சாப்பிடு, மேலெல்லாம் சிந்திக்காதே
எப்பப் பார்த்தாலும் என்ன டிவி .
பனியிலே வெளியிலே போகாதேன்னா கேக்கறதில்லே , அப்பறம் கையை வலிக்குது காலை வலிக்குதுன்னா என்ன பண்ண முடியும்?
ரெண்டு இட்டிலியெல்லாம் போறாது, இன்னும் ஒண்ணு சாப்பிடு.
பாத் ரூமை நீட்டா யூஸ்பண்ணத் தெரியலை.
டாக்டர் கிட்டே வரமாட்டேங்கிரே , அப்பறம் எப்படி காய்ச்சல் குறையும்?
எப்பப் பாத்தாலும் தூக்கம் தான். கொஞ்சம் காத்தாட வான்னா கேக்கறதேயில்லே .
படி.. படி..
கிளம்பறதுக்கு முன்னாடியே எடுத்து வைச்சுக்கோன்னு படிச்சு படிச்சு சொல்லியும் மறந்திட்டா என்ன பண்றது?
உன் வயசிலே மத்தவங்க எல்லாம் எப்படி இருக்காங்கங்க
அம்மா எது சொன்னாலும் நீ கேக்கறதே இல்லை.
குளிக்கறதுக்கு அப்படி என்ன கஷ்டம்?
எப்பப் பார்த்தாலும் இந்த கிழிச பனியன் தானா?
பிரண்டு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனா தட்டிலே வைச்சதையெல்லாம் அப்படியா சாப்பிடறது? வீட்டிலே சாப்பாடே சாப்பிடாதது மாதிரி?
புஸ்தகத்தை வைச்சுக்கிட்டே தூங்காதே.
எத்தனை தடவை சொல்றது? இப்படி பனியனை தலைகீழா போட்டுக்காதேன்னு?
சலூனுக்கு வான்னா கேக்கரதில்லே . எப்படி காடு மாதிரி வளர்ந்திருக்கு!
தண்ணியை மறுபடியும் கொட்டினியா?
என்ன சொன்னாலும் ஏன் ஏதாவது ஏடாகூடாம சொல்லிக்கிட்டே இருக்கே?
என்னைக் கொஞ்சம் நிம்மதியா வேலை செய்ய விடேன்?
என்னால அவ்வளவு தான் முடியும். காசு என்ன கொட்டியா கிடக்கு?
அம்மா உன் நல்லதுக்குத் தானே சொல்றா? ஏன் கேட்க மாட்டேங்கிரே?
அம்மாவுக்கும் உனக்கும் என்ன எப்பப் பார்த்தாலும் சண்டை?
காசு வேணும்னா என்னைக் கேளு தர்றேன். அதுக்காக இப்படியா?
உன்னால என் நிம்மதியே போச்சு.
கையிலே என்ன ரத்தம். நிதானமே போறாது உனக்கு!
ஏன் எப்பப் பாத்தாலும் வாள்வாளுன்னு கத்தரே?
கொஞ்சம் மெல்லப் பேசேன்! நாலு வீட்டுக்குக் கேக்கணுமா?

அதே மகன் தன் அப்பாவிடம் முப்பது நாற்பது வருடங்களுக்குப் பிறகு பேசும் வார்த்தைகளும் அவையே !
(மீண்டும் படியுங்கள் )
முன்னது தப்பில்லை என்றால் பின்னதிலும் தப்பில்லை!!
