சில விசித்திரமான வழக்குகள்:
பாராசூட் எப்போதும் நாம் தலைக்குத் தடவுகிற தேங்காய் எண்ணை தானே. ஆனால் தயாரிப்பாளர்கள் அதை வெறும் தேங்காய் எண்ணை என்று தான் விளம்பரப்படுத்துவார்களே தவிர, தலைக்கு உபயோகிக்கும் ஹேர் ஆயில் என்று சொல்லவே மாட்டார்கள். காரணம் உணவுப் பொருளாக உபயோகிக்கும் தேங்காய் எண்ணைக்கு எக்ஸைஸ் வரி கிடையாது. ஹேர் ஆயிலுக்கு உண்டு. இன்னொரு அட்வான்ஸ்டு பாராசூட் எண்ணை என்று ஒன்று உண்டு. அதை ஹேர் ஆயில் என்று சொல்கிறார்கள். அதுக்கு எக்ஸைஸ் வரி உண்டு. இப்போ புரியுதா?
அரசாங்கம் என்ன செய்தது தெரியுமா? 200 மில்லிக்குக் கீழே தேங்காய் எண்ணை இருந்தால் அது ஒப்பனைப் பொருளாகக் கருதப்படும் என்றும் அதற்கான எக்ஸைஸ் வரி கட்டவேண்டும் என்றும் அறிவித்தது.
பாராசூட் தயாரிப்பாளர்கள் இதை எதிர்த்து அப்பீல் சென்று வெற்றி அடைந்தார்கள். அதனால் பாராசூட் தேங்காய் எண்ணயை நம் தலையில் மட்டுமல்ல அரசாங்கத்தின் தலையிலும் தடவுகிறார்கள்!
