
சென்ற மே மாதம் சில பிரபலங்களுடைய புது மற்றும் நவீனக் கவிதைகளைப் பார்த்தோம். அந்த வரிசையில் இன்னும் சில கவிதைகளைப் பார்ப்போமா?
![]()
எழுதிய கவிஞர்களுக்கும் இணைய தளத்திற்கும் மிக மிக நன்றி:
இது உமாமகேஸ்வரி எழுதிய கவிதை.

“தொட்டி மண்ணிற்குள்
இட்டவிதையின் மௌனம்
கூடவருகிறது என்னோடு.
சமையலறையின் வெம்மையில்
குளீயலறையின் அவசர நிர்வாணத்தில்
படுக்கையறையின் புழுக்க மோகத்தில்
அலைகிறது அதன் அமைதி
என்னுடன்
தன் வீர்யத்தால்
என் பசுமை தழைக்கட்டுமென்று”
இது கனிமொழியின் கவிதை வரிகள்:

” எமக்கு என்று
சொற்கள் இல்லை
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை
உமது கதைகளில்
யாம் இல்லை
எனக்கென்று சரித்திரமில்லை
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்துத் தந்ததே நிஜம்
எனக்கென்று கண்களோ
செவிகளோ, கால்களோ
இல்லை
அவ்வப்போது நீ இரவலாய்.
தருவதைத் தவிர.”
கவிஞர் பாலை நிலவனின் கவிதை ஒன்றைப் பார்க்கலாம்
“சாட்சியம்”

இந்த நிலா ஒளியைத்தான்
நான் யாசித்தது.
ஒரு பழத்தைப் பிழிவது போல்
பிழிந்து அதன் சாற்றை
இப்படிஎன் கையில் ஊற்றுங்கள்.
ஒரு மிடறு குடித்தபின் பாருங்கள்.
சகதியும் அகோரமுமான நான்
ஒளித்துண்டாய் விழுவேன்
என் மீது நீங்கள் சுமத்தும்
குற்றங்களுக்கெதிராய்…..
அதுவரைக்கும் இப்படித்தான்.
ஒரு கொடியைப் போன்று காற்றில் அசைந்து கொண்டிருக்கும்
உங்களால் கழற்ற முடியாத
என் வன்மம்.
யுகபாரதியின் கவிதா வரிகள்
பழங்கஞ்சியும்
பயத்தந் துவையலும்
ஏர் உழும் மாமனுக்கு
எடுத்துப் போவாள்
அவளுக்குப் பிடிக்குமென்று
ஈச்சம் பழங்களை
துண்டில் மூடித் தருவான்
அவன் வானம் பார்த்த பூமியில்
எப்போதும் பெய்தபடி
பிரிய மழை.
வேடிக்கை என்னவென்றால் யுகபாரதிக்கு ‘மன்மத ராசா’ பாடல் புகழ் தேடித் தந்துள்ளது. இது தான் இன்றைய நிலை.
இவ்வளவுதான் முடிகிறது – விக்ரமாதித்யன்

நேற்று நண்பகல்
அஞ்சலகம் போய்விட்டு
வருகிற வழியில்
கீழே கிடந்த
ஸ்கூட்டர் சாவியை எடுத்து
பக்கத்தில் இருந்த டீக்கடையில்
கொடுத்துவிட்டு வந்தேன்
(தேடிக்கொண்டு வந்தால்
கொடுத்துவிடச் சொல்லி)
கடந்த முறை
கபாலீஸ்வரர் கோயில் சென்றிருந்தபோது
ஸ்தல விருஷத்துக்கு அண்டையில் கிடந்த
முள்கொம்பை எடுத்து
ஒரு ஓரமாய்ப் போட்டுவிட்டு வந்தேன்
கொஞ்ச நாள்கள் முன்பு
தெரு நடுவே இறைந்துகிடந்த
கண்ணாடிச் சில்லுகளைப் பொறுக்கி
தூரப் போட்டுவிட்டு வந்தேன்
போனவாரம் போல
பார்வையிழந்த ஒருவரை
சாலையின் குறுக்கே கடந்துபோக
கூட்டிக்கொண்டு சென்றேன்
சமீபத்தில்
தற்கொலையுணர்வு மேலிட்டிருந்த
நண்பர் ஒருவரை
தேடிப்போய் பார்த்து
தேற்றிவிட்டு வந்தேன்
இரண்டு மூன்று நாள் இருக்கும்
எதார்த்தங்களை எதிர்கொள்ள இயலாமல்
சதா குடித்துக்கொண்டேயிருந்த
இளங்கவிஞன் ஒருவனை
இதற்காகவெல்லாம் ஓய்ந்துவிடக்கூடாது என்று
எடுத்துச்சொல்லி இயல்புநிலைக்கு இட்டு வந்தேன்
கழிந்த மாதம்
நடந்த விபத்திலிருந்து
சிறிது காலம்
குடிப்பதில்லையென்று இருக்கிறேன்
இவ்வளவுதான் முடிகிறது
இந்த வாழ்க்கையில்.
சாயாசுந்தரம் – கவிதை

என்றாவது பேசியிருக்கலாம்
நாளை என்னவாகப் போகிறோம்
நாம் என்று ……
எப்போதாவது யோசித்திருக்கலாம்
உண்மையின் வெப்பம்
நம்மை எப்படிப் பொசுக்கும் என்று…..
யாரிடமாவது கேட்டிருக்கலாம்
வாழ்க்கை என்பதன்
வரைவிலக்கணங்களை ……
ஒரு இறகின் பயணமாக
இன்று மட்டுமே சாஸ்வதம்
என நினைத்திருந்த என்னிடம் ….
வாழ்க்கை முழுதும் வருவாயா
எனக் கேட்டால் எப்படிச்
சொல்லமுடியும் ?
எனக்குத் தெரியாத
ஒன்றைப் பற்றி ?
முடிவிலி எழுதிய நீயும் நானும்

உன் பெண்ணியத்தில் எனக்கு
விருப்பமில்லை …
என் ஆணாதிக்கத்தில் உனக்கு
ஒப்புதலுமில்லை ….
ஆயினும் …
இருள் கவயும் மாலையிலும்
பனி சூழ்ந்த இரவுகளிலும்
கலைந்த நம் படுக்கையினூடே
சில நிமிடங்களேனும்
அம்மணமாய் மூர்ச்சையாகி கிடக்கின்றன
உன் பெண்ணியமும்
என் ஆணாதிக்கமும் ….
சக்தி ஜோதியின் தாக்கும் வரிகள்:

எந்தச் சேலையைத் தேர்வு செய்வது
சற்று குழம்பினாள்
வெளியே கிளம்பும் பொழுது
வழக்கமான நிகழ்வு தான்
என்றபோதும்
இன்று வேறுமாதிரி உணர்வு
பார்த்துப் பார்த்து தெரிவு செய்தாள்
தரையில் உறங்குகிற
இரண்டு குழந்தைகளையும் முத்தமிட்டாள்
வெள்ளைக் காகிதத்தைத் எடுத்து
இரவு விளக்கின் ஒளியில் கடிதம் எழுதி
நான்குபுறமும் பிசிறின்றி மடித்தாள்
துளியும் பிசிறு விழாத செயல்களைச் செய்வதில்
விருப்பமுடையவள் அவள்
அறையின் சூழல் உணராது உறங்கும்
கணவனைப் பார்த்தாள்
மிக அன்னியமாக உணர்ந்தாள்
அப்படியே குழந்தைகளைப் பார்த்தாள்
சுழழும் மின்விசிறியை நிமிர்ந்து பார்த்தாள்
காற்று தடைபட
குழந்தைகள் விழிக்க வாய்ப்பிருக்கிறது
போதையின் வாசனை சூழ்ந்த அவன் விழிப்பது
சந்தேகம் தான்
Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/2006/babu.html
