![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()

” தாத்தா ! உங்ககிட்டே ஒண்ணு கேக்கணும். திருவான்மியூர் நம்ம வீட்டிலிருந்து பெசன்ட் நகர் பீச்சுக்குப் போறதுக்கு ஒரு வழி சொல்லுங்க தாத்தா! “
“கண்ணா! இங்கிருந்து கிளம்பி நேரா மந்த்ராலயம் போய், அங்கிருந்து காலடி, குருவாயூர், குந்தா, அப்பறம் திருச்செந்தூர் ,மதுரை போயிட்டு திருச்சி தஞ்சாவூர்,பாபநாசம் வழியாப் போனா வேகமாப் போயிடலாம்.
என்ன தாத்தா இது ! பக்கத்து இடத்துக்கு வழி கேட்டா எல்லா ஊருக்கும் வழி சொல்றீங்க ?”
“கண்ணா! பொதுவா நான் சொல்ற வழி என்னன்னா சிங்கபூர் லாஸ் ஏஞ்சல்ஸ் போய் அங்கிருந்து நியூயார்க் லண்டன் வழியா சென்னை ஏர்போர்ட் வந்து அங்கிருந்து பெசன்ட் நகர் போகிற வழி தான் சொல்லுவேன். நீ சின்னப்பயலா இருக்கிறதாலே -உனக்கு சின்ன வழி சொன்னேன்.”
“என்ன பாட்டி ? தாத்தா இப்படி வழி சொல்றாரு?”
“அது எப்பவுமே இப்படித்தான்.”
“பாட்டி! நீங்களாவது ஒரு வழி சொல்லுங்களேன்!”
“நல்லா கேட்டுக்கோ! பக்கத்து வீட்டு மாமிகிட்டே சொல்லிக்கிட்டு, எதித்த வீட்டு மாமிகூட அஞ்சு நிமிஷம் பேசிமுடிச்சு, பிளாக் வாசல்ல, ரவுண்டிலே உக்காந்து பத்து நிமிஷம் அரட்டை அடிச்சு -அப்பறம் காய்கறி வண்டி வந்ததும் காய் வாங்கிட்டு , அப்பறம் பேப்பர்காரன் வரான்னா பாத்து …..”
“என்ன பாட்டி இது? தாத்தா என்னடான்னா உலகத்துக்கே வழி சொல்றார். நீங்க என்னடான்னா பிளாக்கை விட்டே வெளிய வர மாட்டேங்கிறீங்க ?”
“நான் சொல்றதை யார் கேக்கறா? ம்ம்.. இப்படி ஆச்சு என் நெலமை!”
“என்ன தாத்தா ! பாட்டி இப்படி சொல்றாங்க?”
“இது எப்பவுமே அப்படித்தான் !”
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
