Image result for modi address to the nation on demonetisation

நவம்பர்  எட்டு – இரவு எட்டு  மணி 

மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்கள் அறிவிப்பு!

” 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது.”

மெத்தப் படித்த மேதைகளும் அன்றாடங்காய்ச்சிகளும் – சிவாஜி the boss மற்றும் பிச்சைக்காரனும்,  ஏன்-   நீங்களும் நானும் பலமுறை பல இடங்களில் சொல்லி வந்தது!

” எந்த அரசியல்வாதிக்காவது தில் இருக்கா ? ஐநூறு ஆயிரம் ரூபாயைச்  செல்லாது என்று அறிவித்து கறுப்புப் பண  முதலைகளின் வாயைக் கிழிக்க முடியுமா? ”   

‘என்னால் முடியும் தம்பி’ என்று ஒருவர் துணிந்து செயல் படுத்தியிருக்கிறார். 

அவரது காலில் விழுந்து வணங்குவோம்! 

நமது புரையோடிய புண்ணுக்கு – அடைப்புள்ள இதயத்துக்கு இது தேவையான  பொருளாதார அறுவை சிகிச்சை !

பணத்தைக் கடலுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த அதிகாரக்  கும்பலின் வயிற்றைக் கிழித்த பண உலகின் சுனாமி ! 

நாசவேலை செய்யத் தூண்டிவிடும் வெளி நாட்டு வெறிநாய்களுக்கு போட்டுவிட்ட விஷ  ஊசி !

அக்கிரமம் செய்யும் புலிகளும் நரிகளும் ஓநாய்களும் வேட்டையாடப்படும்போது  மான்களும் முயல்களும் அடிபடுவது இயற்கை!

ஆனால் பின்னால் நமக்குக் கிடைக்கப் போகும் ஆனந்த சுதந்திரத்தை எண்ணி இந்தத் தற்காலிகத் துயரங்களை நாம் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்!   

நாட்டுக்காக இதைக் கூட  நாம் செய்யவில்லை என்றால் நாம் மனிதர்களே அல்ல!

நாளை நமதே! 

India hand lettering and doodles elements background. Vector illustration

( இது பற்றிய பிரதமரின் ஆங்கிலப் பேச்சைக்  கேட்கத் தவற விட்டவர்கள் இங்கே கேட்கலாம்)