
இவராவது அமெரிக்க அதிபராக வருவதாவது என்று உச்சுக் கொட்டியவர்களுக்கு நச்சென்று புரிய வைத்து வெற்றிவாகை சூடியவர் ட்ரம்ப் !
கருத்துக் கணிப்புக்களைப் பொய்யாக்கி வெற்றி பெற்றார் ட்ரம்ப் !
இந்தத் தடவை அமெரிக்கத் தேர்தல் நம்ம தமிழ்நாடு அரசியல் மாதிரியே டமால் டுமீல் என்று இருந்தது.
இங்கே அம்மா வெற்றி பெற்றார். அங்கே அம்மா தோல்வியுற்றார். ஒரு பெண்ணை முதல்வராக்கும் மனப்பான்மை அங்கே இல்லை.
அனுமதியின்றி அமெரிக்காவில் வாழும் மெக்ஸிகோ மக்களைத் துரத்துவேன். தீவிரவாதி முஸ்லீம்கள் அமெரிக்காவில் நுழையமுடியாது. – என்றெல்லாம் மக்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியவர் ட்ரம்ப்!
அவரது கர்வம், அகங்காரம், தூக்கி எறிந்து பேசும் தன்மை அமெரிக்க மக்களுக்குத் தேவையாயிருக்கிறது.
மோடி பாணியில் பேசியது புதிய இந்திய வாக்காளர்களைக் கவர்ந்திருக்கக்கூடும்.

வென்றவர் காரியத்தைப் பார்ப்பார். தோற்றவர் காரணத்தைப் பார்ப்பார் என்று சொல்வார்கள்.
ட்ரம்ப் தான் வென்று விட்டாரே !
அதனால் காரணத்தை விட்டுவிட்டு இனி அவர் எப்படிக் காரியத்தைப் பார்ப்பார் என்று பார்ப்போம்.
வாழ்த்துக்கள்!
