
நாமக்கல் கவிஞர் எனப்படும் ராமலிங்கம் பிள்ளை
அவர்களின் பிறந்த நாள் அக்டோபர் 19
“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'”
“தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு”
“தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'”
“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”
ஆகிய வாக்கியங்களை உருவாக்கிய கவிஞர் அவரே
விடுதலை போராட்டங்களில் ஆர்வமுடன் பங்கேற்றவர்
நாமக்கல்லாரின் படைப்புகள்
- இசை நாவல்கள் – 3
- கட்டுரைகள் – 12
- தன் வரலாறு – 3
- புதினங்கள் – 5
- இலக்கிய திறனாய்வுகள் – 7
- கவிதை தொகுப்புகள் – 10
- சிறுகாப்பியங்கள் – 5
- மொழிபெயர்ப்புகள் – 4
எழுதிய நூல்கள்
- மலைக்கள்ளன் (நாவல்)
- காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
- பிரார்த்தனை (கவிதை)
- நாமக்கல் கவிஞர் பாடல்கள்
- திருக்குறளும் பரிமேலழகரும்
- திருவள்ளுவர் திடுக்கிடுவார்
- திருக்குறள் புது உரை
- கம்பனும் வால்மீகியும்
- கம்பன் கவிதை இன்பக் குவியல்
- என்கதை (சுயசரிதம்)
- அவனும் அவளும் (கவிதை)
- சங்கொலி (கவிதை)
- மாமன் மகள் (நாடகம்)
- அரவணை சுந்தரம் (நாடகம்)
இந்திய தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப்படமான
“மலைக்கள்ளன்” படத்தின் கதையும் இவருடையதேஇவரது பாடல்கள் பல திரைப்படங்களிலும் இடம்பெற்றுள்ளன1949 ல் ஆஸ்தான கவிஞராக நியமிக்கப்பட்டார்1971இல் இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டதுஇவரது நூற்றாண்டு விழாவிற்கு இந்திய அரசு
தபால்தலை வெளியிட்டு கவுரவித்தது
