அரசியலில் இன்று ஜல்லிக்கட்டு!

 

sasi-case-copy

 

நீதி வாசல் திறந்தது.

வீறு கொண்டு காளை  வந்தது.

எப்படியும் அதைப்பிடித்து அமுக்கிவிடலாம் , வளைத்து விடலாம், அதன் கொம்பை முறித்துவிடலாம் அதன் வாயில் ஏதாவது திணித்தாவது அதனைத் தம்  பிடிக்குள் கொண்டுவந்துவிடலாம் என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்தார்கள்.

ஆனால் காளை , தான்  காளை என்பதை  தெள்ளத் தெளிவாக நிரூபித்துவிட்டது.

தவறான நோக்கத்தோடு வந்தவர்களுக்குச்  சரியான முடிவு கிடைத்தது.

ஊழல் செய்த அரசியல்வாதிகளின் இதயத்தை  இந்தத் தீர்ப்பு கிழித்துக் குதறிவிட்டது.

இன்னும் எத்தனையோ அரசியல் திமிங்கிலங்கள், முதலைகள்,                   (அ) சிங்கங்கள் தைரியமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றன.

அவர்களின் கருப்பு இதயங்களை நீதித்  தேவதையின் இரும்புக் கரங்கள் குத்திக் கிழிக்கும் நாள்தான் உண்மையான ஸ்வச்ச பாரத்.

அந்த நாளை  வரவேற்கிறோம்!

1எடிட்