
எல் ஜி பி டி (LGBT)என்று சொல்லப்படும் நங்கை, நம்பி, ஈரர், திருனர் ஆகியோரது பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக உலகம் முழுதும் ஒரு பெருமை ஓட்டத்தைத் ( ஜூன் 25) துவங்கியிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் முக்கிய வீதிகளில் ஏராளமான மக்கள் கலந்து கொள்ளும் ‘பெருமை ஊர்வலம்’ இதுவாகும். கலிபோர்னியா மாகாணம்தான் இந்த மக்களுக்கு முதல் முறையாகச் சட்டப்படி ஆதரவு அளித்தது.
அதனால் இங்கு ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் திருமணம் புரிந்து கொள்வதை யாரும் எதிர்ப்பதில்லை. இது வழக்கத்துக்கு மாறானது என்று நினைக்கலாம்; ஆனால் ஒழுக்கத்துக்கு எதிரானது இல்லை என்பதுதான் இவர்களின் வாதம். அதை அரசாங்கமும் பொது நல மக்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு குறைபாடு அல்ல, ஒருவித வாழ்க்கை முறை – குணநலன் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
அதேபோல் ஆணுமில்லாமல், பெண்ணுமில்லாமல் இருக்கும் மக்களுக்குப் பெரிய அளவு ஆதரவு தரவேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் கோரிக்கை.
இந்தப் பெருமை ஓட்டத்தில் கூகிள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடன், காவல் துறை, அரசுத்துறை, நீதித்துறை, செனட்டர்கள் மற்றும் தனிப்பட்டவர்களும் கலந்து கொண்டு இந்த எல்ஜிபிடி மக்களுடன் சென்றது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
சான் பிரான்சிகோ நகரில் மட்டும் பத்து லட்சத்துக்கு அதிகமான மக்கள் பெருமை ஓட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்தார்கள்.
எல்ஜிபிடி மக்களும் தங்கள் நடைமுறைகளுக்காக வெட்கப்படாமல் வானவில் போன்றிருக்கும் அவர்கள் இயக்கத்தின் கொடியை ஏந்தி வண்ண வண்ண உடை அணிந்து, பெருமிதமாக நடந்தார்கள்.
இந்தியாவிலும் இதற்கு ஆதரவு பெருகி வருவது மக்களின் மனம் பரந்து வருகிறது என்பதன் அடையாளம்.

சான் பிரான்சிஸ்கோ நகரின் ஊர்வலத்தில் எடுத்த புகைப்படங்கள்:



