கும்பகோணத்துக்கு அருகே இருக்கும் கோவிந்தபுரத்தில் காஞ்சி மடத்தின் 59 வது சங்கராச்சார்ய சுவாமிகள் போதேந்திர சரஸ்வதி அவர்களின் ஜீவசமாதி அமைந்துள்ளது. ( இதே கோவிந்தபுரத்தில்தான் ஹரிதாஸ் அவர்களின் பாண்டுரங்கர் கோவிலும் இருக்கிறது)
![]()
இவர்தான் கலியுகத்தில் முக்தி அடைய பக்தி மார்க்கத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதைச் சொன்னது மட்டுமல்ல, செயலிலும் காட்டியவர். ராம நாமம் ஒன்றே உலகத்தின் தாரக மந்திரம் என்பதை எடுத்துச் சொன்னவர்.
அப்பேர்ப்பட்ட மகானின் வாழ்க்கை வரலாற்றை பம்பாய் ஞானம் அவர்களின் நாடகக் குழு ஒரு பக்தி ரசம் சொட்டும் நாடகமாக நடத்தி வருகிறது.

பாம்பே ஞானம் கட்டியக்காரன் வேடமிட்டு அசத்துகிறார். மற்ற நடிகர்களும் தங்கள் திறமையான நடிப்பால் பாத்திரங்களாகவே மாறிவிடுகின்றனர்.
பார்த்தவர்கள் பரவசமடைகிறார்கள்.

