சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் /பால சாகித்ய அகாடமி விருது
—————————————————————–
யுவப்ரஸ்கார்- மனுஷியின்  ‘ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்’      ( கவிதைத்தொகுப்பு)

Image may contain: 1 person, smiling

இதுவரைக்கும் தேசிய அளவுல வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதுகள்ல பெண்கவிஞர்களுக்குனு கிடைக்குற முதல் விருது இதுதான். இதுவரைக்கும் 6 விருதுகள் குடுத்துருக்காங்க. 2011ல ‘தவசி’ அவருடைய ‘சேவல்கட்டு’ நாவலுக்காக இந்த விருதைப் பெற்றார். 2012ல ‘மலர்வதி’ என்பவர் அவருடைய ‘தோப்புக்காரி’ நாவலுக்காக இந்த விருதைப் பெற்றார். 2013ல ‘கதிர் பாரதி’ என்பவர் அவருடைய ‘மெஸ்ஸியாவுக்கு மூன்று மச்சங்கள்’ எனும் கவிதைத் தொகுப்புக்காக இந்த விருதைப் பெற்றார். 2014ல ‘அபிலாஷ்’ அவருடைய ‘கால்கள்’ நாவலுக்காக இந்த விருதைப் பெற்றார். 2015ல ‘வீரபாண்டியன்’ அவருடைய ‘பருக்கை’ நாவலுக்காக இந்த விருதைப் பெற்றார். 2016ல ‘லக்ஷ்மி சரவணகுமார்’ அவருடைய ‘கானகன்’ நாவலுக்காக இந்த விருதைப் பெற்றார். இப்படி ஆறு வருஷமா விருதுகள் வழங்கியிருக்காங்க. இருந்தாலும் முதல்முறையா ஒரு பெண்கவிக்கு இந்த வருடம் தான் அங்கீகாரம் கொடுத்துருக்காங்க. 

(நன்றி : http://anangumagal.blogspot.com/)

‘ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகளில்’ நிர்பயாக்களின் தேசம் என்ற தலைப்பில் மனுஷி எழுதிய கவிதை

நிர்பயாக்கள்                                                                                                                   எப்போதும் பயமற்றவர்கள்                                                                                         அவர்கள்                                                                                                                       வாழ்தலுக்கான போராட்டத்தில்                                                                       மரணத்தைச் சுவைத்தவர்கள்                                                                                     இது நிர்பயாக்கள் தேசம்                                                                                       நிர்பயாக்கள் உருவாக்கப்படும் தேசம்…

(நன்றி : தமிழ் ஹிந்து )

பால சாகித்ய அகாடமி சரவணன் — குழந்தை இலக்கிய பங்களிப்பு –

வேலுசரவணன்

வேலு சரவணன் குழந்தைகள் உலகில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் கலைஞர். புதுவை பல்கலைக்கழகத்தின் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார்.

குழந்தைகளுக்கான பாடங்களை நாடகங்கள், கதைகள் வடிவில் கற்றுக் கொடுப்பதற்கான பயிற்சிகளை பள்ளி ஆசிரியர்களுக்கு அளித்து வருகிறார். குழந்தைகளுக்கான சிறந்த நாடகக் கலைஞராக இவரை சங்கீத நாடக அகாடமி, சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல அமைப்புகள் அங்கீகரித்திருக்கின்றன. குழந்தைகள் இலக்கியத்துக்காக வேலு சரவணன் அளித்திருக்கும் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக பால சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி : தமிழ் ஹிந்து )

இருவருக்கும் குவிகத்தின் வாழ்த்துகள்.