குவிகம்  இலக்கிய வாசலின் 31  வது நிகழ்வு

அசோகமித்திரன் அவர்களின் “காந்தி” என்ற சிறுகதை மிகவும் வித்தியாசமான சிறுகதை. அதைப்பற்றிய ஒரு கலந்துரையாடல் நிகழ்த்த வேண்டும் என்பது கிருபாநந்தனின் ஆசை.

அதன்படி வருகிற அக்டோபர் மாதம் 28 ஆம்  தேதி சனிக்கிழமையன்று ஆழ்வார்ப்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் மாலை 7  மணி அளவில் ஒரு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

வாசகர்களும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறோம்.

இனி , செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்வுகளைப் பார்ப்போமா?

( காணொளி : நன்றி விஜயன் )

செப்டம்பர் 30,     சனிக்கிழமை

இலக்கியச் சிந்தனையின் 568 வது நிகழ்வு

” கவியோகி சுத்தானந்த பாரதி “

உரையாற்றியவர் :  திரு. புதுவை ராமசாமி

அவரது பேச்சை இங்கே கேட்கலாம்.

தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 30 வது நிகழ்வு

நூல் அறிமுகம்

“நான் என்னைத் தேடுகிறேன்”

சுரேஷ் ராஜகோபால் அவர்களின் கவிதைத் தொகுப்பு

அறிமுக உரை : திரு ஆர். அரவிந்த்குமார் (கல்வியாளர், புதுவை)

அந்த உரையின் காணொளியை இங்கே காணலாம்.

 

அதைத் தொடர்ந்து  செப்டம்பர்   மாத குவிகம்  வெளியீடும் அறிமுகமும்

பிரபல நாடக ஆசிரியரும் பல சிறுகதைகளின் ஆசிரியருமான ஈஸ்வர் அவர்களின் இரு குறுநாவல்களை ஒரே புத்தகமாக வெளியிட்டதில் பெருமை கொள்கிறோம்.

“பாஸ்டனில் ஒரு தேரடி” என்ற கதை முதல் பகுதியாக வருகிறது. அதே புத்தகத்தைத் திருப்பிப் பார்த்தால்  “ஏரி காத்த ராமர்”  என்ற கதை முதல் பகுதியாக வந்திருக்கிறது.

இதைப் புதுமை என்று சொல்லவில்லை; சற்று வித்தியாசமான முயற்சி.

அதன் அறிமுக உரை அரங்கு நிறைந்த மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவின் தொகுப்பும் திரு  மாதவன் சுந்தரராஜன்  பேசிய அறிமுக உரையும் பார்க்கலாம்.