



தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால் அவர் வென்ற ஆர் கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் !
அவர் மறைந்து ஒரு வருடம் கழித்து நடக்கப்போகும் தேர்தல் !
இந்த ஒரு வருடத்தில்தான் தமிழ் அரசியல் வானில் எத்தனை எத்தனை மாறுதல்கள் !
- சசிகலா முதல்வராகத் துணிதல், பின்னர் அவர் சிறைக்குச் செல்லல்
- பன்னீர்செல்வம் தனித்து இயங்கல்,
- எடப்பாடி பழனிச்சாமி முதல்வராதல் ,
- தினகரன் ஆர் கே நகரில் போட்டியிடுதல், பின்னர் அவரும் லஞ்ச வழக்கில் சிறைசென்று ஜாமீனில் வருதல் ,
- சின்னம்மா என்றுகூறிய சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலா – தினகரனை உதறுதல்,
- இபிஎஸ்ஸும் ஓ பி எஸ்ஸும் இணைதல், அவர்களுக்கே இரட்டை இலைச் சின்னம் கிடைத்தல்,
- அரசு இயந்திரம் தள்ளாடித் தள்ளாடிச் செல்லல்,
- ஜெயலலிதாவின் மரணம்பற்றிய விசாரணக் கமிஷன் அமைத்தல் ,
- மோடி-கருணாநிதி சந்திப்பு
- எல்லாவற்றிற்கும் பின்னால் நிற்கும் பி ஜே பியின் அரசியல் சதுரங்க ஆட்டம்,
- ஆட்சியைப் பிடிக்கத் தவிக்கும் தி மு கவின் ஆசைத் துடிப்பு
- என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும் மற்ற எதிர்க்கட்சிகளின் தடுமாற்றம்,
இவை எல்லாம் கலந்த மேகமூட்டம்தான் இன்றையத் தமிழக அரசியல் வானம்!
இந்தச் சூழ்நிலையில் டிசம்பர் 21 இல் ஆர் கே நகரில் இடைத் தேர்தல் வருகிறது.
தேர்தல் என்றாலே தமிழகத்தில் பணமழை என்பது நிரூபிக்கப்பட்ட காட்சி!
பலர் நோட்டு வாங்கிக் குத்தலாம் ! சிலர் நோட்டாவில் குத்தலாம் ! சிலர் முதுகில் குத்தலாம்! சிலர் மாறுதலுக்காகக் குத்தலாம் ! சிலர் கொள்கையோடு குத்தலாம்! சிலர் கொள்கையின்றிக் குத்தலாம்! சிலர் குத்தாமலே ஓடலாம்!
என்ன ஆனாலும் தமிழக வாக்காளர்கள் புத்திசாலிகள் !
அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
பொதுத்தேர்தலுக்கு இது ஒரு பானைப்பதமாக இருக்கும் !
காத்திருப்போம்!

