Image result for மார்கழி பாடல்

மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ(ப்) படிந்தேலோர் எம்பாவாய்

மார்கழி மாதம் குளிர் நிறைந்த நன்னாள்
நீராடப்போவோம் வாருங்கள் தோழியரே !
சீரான  ஆய்ப்பாடியின்  செல்வச் சிறுமிகளே !
கூர்வேல் கொண்டவன் நந்தகோபன் குமரன்
பார்வைக்கு இனியவன் யசோதாவின் இளையமகன்                                கரியநிறக்  கண்ணன் சூரியன்போல்  முகமுடையான்
நாராயணனே  அவன்   நல்லருள் தந்திடுவான்
பாரோர் புகழ வாருங்கள் பாவையரே