Image result for lovers in besantnagar beach

அலைகள் நிற்கட்டுமென்று நீயும்
காற்று நிற்கட்டுமேயென்று  நானும்
காதலைச் சொல்ல  காத்து நின்றோம்
ஒரு கட்டுப்பாட்டுடன்

ஒருவரை ஒருவர் பார்த்தால் கூட
நிலை தடுமாறுமென
தயங்கி நின்றோம் சிலநிமிடம்
கடலலை கால்களைத்  தழுவிச் சென்றது

குறுகுறுவென மனதில் பதட்டம்
நம்கை நழுவிப் போய்விடுமோ
பயம் கொஞ்சம் பதட்டம் கொஞ்சம்
நேரம் கடந்ததுதான் மிச்சம்

மளுக்கென்ற உன் சிரிப்பிலே
கட்டுப்பாடு தளர்ந்து
காதல் வயப்பட்டோமே நாம்!!!