“தென்னிந்திய  புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளார்கள் சங்கம்”  நடத்தும் மாபெரும் கோலாகலத் திருவிழா!

வருடா வருடம் பொங்கல் விழா சமயத்தில்  சென்னையில் நடைபெறும் பிரும்மாண்டமான புத்தகக் கண்காட்சி !

இந்த ஆண்டு   பச்சையப்பன் கல்லூரி எதிரில் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில்  ஜனவரி 10 முதல் 22 வரை நடை பெறுகிறது.

குவிகம் நண்பர்கள் விருட்சம் ஆசிரியர் அழகியசிங்கர் அவர்களின் புத்தக அரங்கில் பணிபுரிவதைப் பெருமையாக நினைக்கிறார்கள்! 

(அரங்கம் எண் 6 : விருட்சம் வெளியீடு )

No automatic alt text available.இந்த அரங்கில் தினந்தோறும் மாலை ஆறு மணிக்கு “நூல் அறிமுகம்” என்ற நிகழ்வு நடைபெறுகிறது. 

அத்துடன், ‘குவிகம் இலக்கிய அன்பர்கள்’  என்ற ஒரு அமைப்பிற்காக அங்கத்தினர்கள் சேர்க்கும்  பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், BookXchange என்ற புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  ” படித்ததைப் போடுங்கள், பிடித்ததை எடுத்துக்  கொள்ளுங்கள்”  என்ற வாசகத்துடன் இருக்கும் பெட்டியில் புத்தகப் பரிமாற்றம் நடைபெறுகிறது. 

 

சென்ற ஆண்டு இந்தக் கண்காட்சியில் ரூபாய் 18 கோடி அளவிற்குப் புத்தகங்கள் விற்பனை !  12 லட்சம் மக்கள் வருகை தந்தார்கள் !

இந்த ஆண்டு சென்ற ஆண்டைவிடப் பார்வையாளர்களும் விற்பனையும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Inline image