தமிழ் நாட்டில் 2.0 பார்க்காமல் யாரும் இருக்கக்கூடாது என்று தீர்மானிக்கப்பட்டு சங்கர் எடுத்த படம் !
3-டி கிராபிக்சில் ஆங்கிலப் படங்களைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு அமைத்திருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு நம்ம தலைவர் ரஜினிகாந்த் வேறு வசீகரன், சிட்டி -நல்லவன், சிட்டி- வில்லன், என்று ஏற்கனவே எந்திரனில் அறிமுகமானவர்களுடன் 3.0 என்று ஒரு குட்டி ரோபோவாகவும் வந்து கலக்குகிறார்.
அக்ஷயகுமார்தான் கதையின் நாயகன். அவர் தற்கொலையில் ஆரம்பிக்கிறது படம். அவருக்குப் பறவைகளுடன் தொடரும் பாசம். ( சலீம் அலி?) பறவையினத்தை அழிக்கும் செல்போன் டவர்களை எதிர்த்து அவர் நடத்தும் போராட்டம். அதில் தோல்வியுற்றுத் தற்கொலை செய்துகொண்டு பறவைகளின் ‘ஆரோவினால்’ பக்ஷிராஜன் என்ற மாபெரும் சக்திவாய்ந்த ராட்சசனாகமாறி மனிதர்களை அழிக்கும்விதம். முடிவில் ரஜினிகாந்தின் பறவைக் கவசத்தால் அழியும் மாபெரும் சக்தி. அதுதான் அக்ஷயகுமார். ( கமல ஹாசனுக்காக உருவாக்கப்பட்ட பாத்திரமாம் இது)
கதை என்னவோ காதில் பூ சூடும் அளவுதான்.
ஆனாலும் குழந்தைகள் முதல் ரஜினி ரசிகர்வரை அனைவரையும் இரண்டரை மணிநேரம் கட்டிப்போடும் படம்.
வசூலிலும் பட்டையைக் கிளப்பும் படம். ( 700 கோடிக்கு மேல் தாண்டிவிட்டதாமே?)
ஒரு தமிழ்ப்படம் இப்படி வருவது தமிழ்நாட்டுக்கே பெருமை!
