Image may contain: 1 person, sitting

Image may contain: 17 people, including Kirubanandan Srinivasan, Manthiramoorthi Alagu and Natarajan Ramaseshan, people smiling

இன்று டிசம்பர் 16, ஞாயிறு காலையில்குவிகம் சார்பாக சென்னை தி.நகரில் திரு.நானா ( நாராயணன் ) அவர்களுடன் ஏற்பாடு செய்திருந்த எழுத்துருவாக்கம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திரு.நானா அவர்கள் India Today, மய்யம், பாக்யா, வண்ணத்திரை போன்ற பல இதழ்களில் லே-அவுட்டில் தலைமைப் பொறுப்பு உள்ளிட்ட பல பொறுப்புகளில் வேலை செய்தவர். எழுத்தாளர்கள் சுஜாதா, மாலன் உள்ளிட்ட பலருடன் பணிசெய்தவர். இத்துறையில் மிக நீண்ட அனுபவமுடையவர். அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணமுடையவர். பிறரைத் தன்னுடைய அன்பால், நட்பால் தன்பால் கவர்ந்து இழுக்கும் குணமுடையவர். மற்றவர்களை எப்போதும் மகிழ்ச்சிப்படுத்துவதில் தான் மகிழ்ச்சியடைகின்ற இனிய பண்பாளர். புன்னகையைப் பொன்நகையாக எப்போதும் அணிந்திருப்பவர்.

இன்றைய நிகழ்வில் நிறைய நண்பர்கள் கூட்டம். எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடக, குறும்பட இயக்குநர்கள் எனப் பலரும் எழுத்துத்துறையில் இருப்பவர்கள். எழுத்துருவாக்கம் குறித்த கல்வெட்டுக்காலம், ஓலைச்சுவடி, பிரின்டிங் காலம் தொடக்கம் முதல் தற்கால வளர்ச்சி வரை எல்லாவற்றையும் விளக்கினார் திரு.நானா அவர்கள். லே-அவுட்டின் பங்கு மீடியாத் துறையில் அதிகம். ஆனால் வெளியே தெரியாது. எப்படி? என்பதனைச் சிறப்பாக அவர் விளக்கினார். மிகவும் இயல்பான தெளிவான உரை.

நண்பர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் அருமையாகப் பதில்கள் தந்தார் நானா அவர்கள்.

கலந்து கொண்ட அனைவரும் திரு.நானாவிற்கு தங்கள் மகிழ்ச்சியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தார்கள்.

உங்கள் வெற்றியும், புதுமையும் என்றும் தொடரட்டும்.
❤️