மரம் மரம் மரம் சாமி தந்த வரம்
வரம் வரம் வரம் நாம நட்ட மரம்
முக்கனிக்கு மூணு மரம்
மா மரம் பலா மரம் வாழை மரம்
மாமரம் மா மரம்
மாந்தளிரோ உவமை மாம்பூவில் வண்டு
மாவிலைகள் தோரணம் மாவடுவோ ஊறுகாய்
மாங்காய் மசக்கை மாம்பழமோ தித்திப்பு
மாங்கொட்டை மருந்து மாம்பலகை கட்டில்
மாஞ்சோலைக் குயில்கள் மாந்தோப்பில் காதல்
பலா வேர்ப்பலா
பலாஇலையில் பிரசாதம் பலாப்பிஞ்சு கறிவகை
பலாப்பலகை மிருதங்கம் பலாக்காய் வறுவல்
பலாப்பழம் தேன் பலாக்கொட்டை கூட்டு
பலாச்சக்கை தைலம் பலாவேர் மருந்து
பலாப்பால் பிசின் பலாத்தோப்பில் யானை
வாழையடி வாழை
வாழைக்கன்று மேடைக்கு வாழை இலை உணவுக்கு
வாழைப்பூ வடைக்கு வாழைக்காய் திதிக்கு
வாழைப்பழம் பூஜைக்கு வாழைத்தண்டு கல்கரைக்க
வாழைத்தோல் காகிதம் வாழை நார் மாலைக்கு
வாழைமரம் தோரணம் வாழைக்கிழங்கு மருந்து
வாழைப்பட்டை குளிர்ச்சி வாழைத்தோப்பில் மாடு
முக்கனியே தமிழகம்
மா பாண்டியநாடு
பலா சேரநாடு
வாழை சோழநாடு
முக்கனியே முத்தமிழ்
வாழை இயல்
மாங்கனி இசை
பலாச்சுளை நாடகம்
முக்கனியே வாழ்வியல்
மாங்கனி மார்பகம் !
பலாச்சுளை பெண்குறி !
வாழைப்பழம் ஆண்குறி !
